ஸ்பெயினில் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து: 10 பேர் பலி, 21 பேர் காயம்
மேட்ரிட்: ஸ்பெயினில் நேட்டோ பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் பலியாகினர், 21 பேர் காயம் அடைந்தனர்.
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் இருந்து 260 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அல்பகாட்டில் இருக்கும் லாஸ் லாவோஸ் விமானப்படை தளத்தில் போர் விமானங்கள் நேட்டோ பயிற்சியில் திங்கட்கிழமை ஈடுபட்டிருந்தன.
பிற்பகல் 3.20 மணி அளவில் பயிற்சியில் ஈடுபட்ட எப்-16 போர் விமானம் டேக் ஆப் ஆனது. ஆனால் சிறிது நிமிடத்தில் விமானத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டு அது விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் பிற விமானங்கள் மீது மோதி தரையில் விழுந்தது.

இந்த விபத்தில் பிரான்ஸைச் சேர்ந்த 8 பேர், 2 கிரேக்கர்கள் என 10 பேர் பலியாகினர். மேலும் பிரான்ஸைச் சேர்ந்த 10 பேர், 11 இத்தாலியர்கள் காயம் அடைந்தனர். விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த 2 விமானிகள், அது விழுந்த இடத்தில் நின்று கொண்டிருந்த பிற விமானிகள் மற்றும் மெக்கானிக்குகள் பலியானவர்களில் அடக்கம்.
காயம் அடைந்தவர்களில் 5 பேர் லா பாஸில் உள்ள மருத்துவமனையில் தீக்காயப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் அல்பகாட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்த விபத்தால் வருத்தம் அடைந்துள்ளேன். இந்த சம்பவம் மொத்த நேட்டோ குடும்பத்தையே பாதித்துள்ளது. விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications