“நாங்க அமெரிக்கர்களாக இருக்க விரும்பல..” டிரம்புக்கு நச் ரிப்ளை கொடுத்த கிரீன்லாந்து!
நூக்: கிரீன்லாந்தை அமெரிக்கா ஆக்கிரமிக்கும் என்று டிரம்ப் பேசியிருந்த நிலையில், நாங்கள் அமெரிக்கர்களாக இருக்க விரும்பவில்லை என்று கிரீன்லாந்து நாட்டை சேர்ந்த 5 பெரும் அரசியல் கட்சிகள் அறிக்கையை வெளியிட்டிருக்கின்றன.
"அமெரிக்கராக பிறப்பது என்பது, வரலாற்றின் லாட்டரியில் வெற்றி பெறுவதற்கு சமம்" என்று டிரம்ப் சொல்வதுண்டு. அப்படியான லாட்டரியே எங்களுக்கு வேண்டாம் என கிரீன்லாந்து மக்கள் கூற தொடங்கியுள்ளனர்.

கிரீன்லாந்த எனும் தீவு
இங்கு மொத்த மக்கள் தொகையே வெறும் 57,000 தான். சென்னையின் தி.நகர் ஏரியாவில் வசிக்கும் மக்கள் கூட இதைவிட அதிகமாக இருப்பார். இப்படி அரசியல் முக்கியம் இல்லாத இந்த நாட்டை, கைப்பற்றியே தீருவேன் என டிரம்ப் அடம்பிடிக்கிறார். காரணம் இங்குள்ள இயற்கை வளங்கள்தான். காலநிலை மாற்றத்தால் இந்த தீவில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகுகின்றன.
அமெரிக்காவின் ஆசை
எனவே புதிய புதிய கணிமங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இவற்றை தன்வசப்படுத்த வேண்டும் என்பதால்தான், டிரம்ப் இப்படி பேசி வருகிறார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், இதற்கு அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
கிரீன்லாந்தின் எதிர்காலத்தை அதன் மக்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும் என இந்தத் தலைவர்கள் ஒருமித்த குரலில் வலியுறுத்தியுள்ளனர். "நாங்கள் அமெரிக்கர்களாகவோ, டென்மார்க்கியர்களவோ இருக்க விரும்பவில்லை. கிரீன்லாந்து வாசிகளாக மட்டுமே இருக்க விரும்புகிறோம்" என அந்த அறிக்கை திட்டவட்டமாகக் கூறுகிறது.
எதிர்க்கும் மக்கள்
எங்கள் நாடு குறித்த அமெரிக்காவின் அலட்சியப் போக்கை, முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என கிரீன்லாந்து கட்சிகள் கேட்டுக்கொண்டன. கிரீன்லாந்தின் நிலை தொடர்பான முடிவுகள் அதன் மக்களிடமே இருக்க வேண்டும் என்பதையும் அவை வலியுறுத்தின. "கிரீன்லாந்தின் எதிர்காலத்தைக் கிரீன்லாந்து மக்களே முடிவு செய்ய வேண்டும்" என கூறியுள்ளன.
டிரம்பின பேச்சு
முன்னதாக இன்று காலை, "மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், கிரீன்லாந்தை கைப்பற்ற நாங்கள் ஏதாவது செய்வோம். ஒருவேளை நாங்கள் முந்த தவறினால்.. ரஷ்யா அல்லது சீனா அப்பகுதியில் காலூன்றும். இதை தடுக்காவிட்டால், நமக்கு ரஷ்யாவையோ அல்லது சீனாவையோ அண்டை நாடுகளாக அமையும். அப்படி இருக்கக்கூடாது.
மக்களிடம் அச்சம்
பேச்சுவார்த்தை மூலம் தீர்வை விரும்புகிறோம். ஆனாலும் ராணுவ நடவடிக்கைகளை நாங்கள் நிராகரிக்கவில்லை. நான் ஒப்பந்தத்தை எளிதான வழியில் செய்ய விரும்புகிறேன், ஆனால் அது எளிதாக நடக்காவிட்டால், கடினமான வழியில் செய்வோம்" என்று டிரம்ப் கூறியிருந்தார்.
தற்போது கிரீன்லாந்து டென்மார்க்கின் கண்ட்ரோலில் இருக்கிறது. கல்வி, சுகாதாரம், நிதி போன்ற விஷயங்களை கிரீன்லாந்து கவனித்துக்கொள்ளும். ஆனால், ராணுவம், பாதுகாப்பை டென்மார்க்தான் பார்த்துக்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications