அச்சுறுத்தும் விபத்துகள்.. உலகின் மிகவும் பாதுகாப்பான விமான சேவை எது தெரியுமா?
வாஷிங்டன்: சமீபத்தில் அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்து, அதை தொடர்ந்து ஏர் இந்தியா விமானங்களில் ஏற்பட்டு வரும் கோளாறுகள் பேசு பொருளாகியுள்ளன. இந்நிலையில் உலகின் மிகவும் பாதுகாப்பான விமான சேவை எது என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

அதாவது உலகின் மிக பாதுகாப்பான விமான நிறுவனமாக ஏர் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது. எமிரேட்ஸ், எத்திஹாட் மற்றும் கத்தார் ஏர்வேஸ் ஆகியவை முதல் ஐந்து இடங்களில் இடம்பெற்றுள்ளன.
விமானப் பாதுகாப்பு தரவரிசை
AirlineRatings.com வெளியிட்ட தரவரிசையில், ஏர் நியூசிலாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல எச்.கே. எக்ஸ்பிரஸ் உலகின் பாதுகாப்பான குறைந்த கட்டண விமான நிறுவனமாகத் தேர்வாகியுள்ளது. கத்தார் ஏர்வேஸ் மற்றும் எமிரேட்ஸ் மூன்றாவது இடத்தில் உள்ளன. FlyDubai மற்றும் Air Arabia போன்ற நிறுவனங்களும் பாதுகாப்பான குறைந்த கட்டண விமான நிறுவனங்களின் லிஸ்டில் வந்திருக்கின்றன.
தரவரிசை நிர்ணயக் காரணிகள்
விமானப் பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் போக்குவரத்து நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள், விமானங்களின் வயது, IOSA சான்றிதழ் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு தரவரிசை பட்டியல தயார் செய்யப்பட்டிருக்கிறது. குறைந்த எண்ணிக்கையிலான விமானங்களை இயக்கும் நிறுவனங்கள் சில சம்பவங்களை சந்தித்தால் அது கவலைக்குரியதாக கருதப்படுகிறது.
AirlineRatings.com தலைவர் ஷரோன் பீட்டர்சன், இது குறித்து கூறுகையில், “ஏர் நியூசிலாந்து முதலிடத்திலும் குவாண்டாஸ் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. இரண்டுக்கும் இடையே சிறிய புள்ளி வேறுபாடு இருந்தது. புதிய விமானங்களை அதிகம் வைத்திருப்பதே இந்த வேறுபாட்டுக்குக் காரணம். மேலும், மூன்றாவது இடத்தில் உள்ள 3 நிறுவனங்களையும் வேறுபடுத்த முடியவில்லை. எனவேதான் 3வது இடத்தில் 3 விமான நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன” என்று கூறியுள்ளார்.
விமானப் பயணத்தின் பாதுகாப்பு
2018 முதல் 2022 வரை நடத்தப்பட்ட ஆய்வின்படி, ஒரு விமானத்தில் பயணம் செய்வதற்கான உயிரிழப்பு ஆபத்து 1 கோடியே 37 லட்சத்தில் ஒன்று என மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், உலக சுகாதார அமைப்பு (WHO) 2023-ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் 11.9 லட்சம் பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.
விமானப் பயணம் பொதுவாக மிகவும் பாதுகாப்பாக இருந்தாலும், சில விபத்துகள் பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பதன் மூலம் பயணிகளின் நலனை உறுதி செய்ய முடியும்.
2025 ஆம் ஆண்டிற்கான முன்னணி நிறுவனங்கள்
விமான நிறுவனங்களில் ஏர் நியூசிலாந்து, குவாண்டாஸ், கேத்தே பசிபிக், கத்தார் ஏர்வேஸ், எமிரேட்ஸ் உள்ளிட்டவை முதல் 25 இடங்களில் உள்ளன. குறைந்த கட்டண விமான நிறுவனங்களில் ஹெச்.கே. எக்ஸ்பிரஸ், ஜெட்ஸ்டார் குழுமம், ரியானேர் போன்றவை முன்னணி இடங்களைப் பிடித்துள்ளன.
இந்த தரவரிசைகள் விமானப் பயணத்தின் பாதுகாப்பை வெளிப்படுத்துகின்றன. இருப்பினும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது கவலைக்குரியது என்று AirlineRatings.com தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications