கென்யா வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: இத்தாலிய பெண் கடத்தல்
நைரோபி: கென்யாவின் கிலிஃபி கவுன்ட்டியில் உள்ள வணிக வளாகத்திற்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்திய சிலர் 23 வயது இத்தாலிய பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர்.
கென்யாவின் கிலிஃபி கவுன்ட்டியில் உள்ள வணிக வளாகத்திற்குள் சிலர் துப்பாக்கிகளுடன் வந்து கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி ஏந்திய நபர்கள் தொண்டு அமைப்பில் பணியாற்றி வரும் இத்தாலியை சேர்ந்த சில்வியா காஸ்டான்சா ரொமானோ(23) என்ற பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர். துப்பாக்கி ஏந்திய நபர்கள் சோமாலி மொழி பேசியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் சில்வியா பணியாற்றும் தொண்டு நிறுவனம் அவர் கடத்தப்பட்டதற்கு ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளது.
அந்த நபர்கள் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள், சில்வியாவை ஏன் கடத்தினார்கள் என்பது தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications