காஷ்மீரிகளே விடுதலைக்கான நேரம் .. புனிதப் போருக்கு தயாராவோம்: தூண்டிவிடும் ஹபீஸ் சயீத்!!
Subscribe to Oneindia Tamil

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள புகழ் பெற்ற ஆப்பாரா சதுக்கத்தில் நடைபெற்ற தமது ஆதரவாளர்கள் கூட்டத்தில் ஜமாத் உத் தவா இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத் பேசியதாவது:
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றதன் மூலம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் காஷ்மீர் மக்களின் முதுகில் குத்திவிட்டார்.
காஷ்மீரை இந்தியாவிலிருந்து விடுவிப்பதற்கான இறுதிப் போரை நிகழ்த்த நேரம் வந்துவிட்டது. காஷ்மீர் சகோதர சகோதரிகளே இதற்கு நீங்கள் தயாரா? இந்த பெருமைமிக்க செயலில் என்னுடன் இணைகிறீர்களா?
பிரதமர் நவாஸ் ஷெரீப் அவர்களே! நரேந்திர மோடியுடன் கைகுலுக்கியிருக்கிறீர்கள்.. காஷ்மீர் மக்கள் உங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இந்தியாவுடன் நேசம் பாராட்டாதீர்கள். அதனால் எவ்வித பயனும் இல்லை.
இவ்வாறு ஹபீஸ் சய்யீத் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications