இந்தியாவில் தேடப்பட்டு வந்த தீவிரவாதி பாகிஸ்தானில் சுட்டு கொலை! அடுத்து பெரிய "தலை" காலியாக போகுதாம்
இஸ்லாமாபாத்: காஷ்மீர் பகுதியில் தொடர்ச்சியாகத் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு இருந்த அபு கட்டால் என்பவர் பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்டுக் கொன்றவர் யார் எனத் தெரியாத நிலையில், அடுத்த டார்கெட் மும்மை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத்தாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கடந்த 2023 ஜனவரி மாதம் ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பகுதியில் தீவிரவாதி தாக்குதல் நடைபெற்றது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாக லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி அபு கத்தால் என்பவர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதற்கிடையே பாகிஸ்தானில் பதுங்கி இருந்த அந்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அபு கட்டால் கொலை
கடந்த சனிக்கிழமை அடையாளம் தெரியாத நபர்கள் இணைந்து அபு கட்டாலை சுட்டுக் கொன்றதாகத் தெரிகிறது. இதற்கிடையே கடந்த 2008இல் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்து மூளையாகச் செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத்திற்கும் இதேபோன்ற நிலை விரைவில் ஏற்படலாம் என்று வெளியுறவுத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக வெளியுறவு நிபுணர் ராபிந்தர் சச்தேவா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "அபு கட்டாலின் மரணம் முக்கியமானது. அடுத்தடுத்து எதை நோக்கி இது செல்லும் என்பதை உணர்த்துவதாகவே இருக்கிறது.
அடுத்து ஹபீஸ் சயீத் தான்
இப்போது கொல்லப்பட்டுள்ள அபு, மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய உதவியாளர் ஆவார். அதாவது ஹபீஸ் சயீத்துக்கு நெருக்கமானவர்களை காலி செய்யத் தொடங்கியுள்ளனர். கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான் என பொதுவாகச் சொல்வார்கள். ஹபீஸ் சயீத்தும் அதுபோன்ற விதியை எதிர்கொள்ள நேரிடலாம். காஷ்மீர், ரஜோரி, பூஞ்ச், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய இடங்களில் அபு கட்டால் பல தாக்குதல்களில் ஈடுபட்டவர்.
அபு கட்டால் கொலையை தொடர்ந்து சயீத் தனது பாதுகாப்பைப் பலப்படுத்தியிருக்கலாம்.. அவ்வளவு ஏன் பாகிஸ்தான் ராணுவத்திடம் கூட உதவி கேட்டிருக்கலாம். ஏற்கனவே பாகிஸ்தான் ராணுவம் தான் அவரைப் பாதுகாத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று யாராலும் சொல்ல முடியாது.. பாகிஸ்தான் அதிகாரிகளே கூட இந்தியாவைக் குறை சொல்ல வேண்டும் என்பதற்காக அபுவை கொன்று இருக்கலாம்" என்றார்.
எதிர்பார்க்காத ட்விஸ்ட்
அபுவை கொலை செய்யும் இந்தத் திட்டத்தை ஹபீஸ் சயீத்தே போட்டிருக்கக் கூட வாய்ப்பு அதிகம் என்கிறார் மேஜர் ஜெனரல் துருவ் சி கடோச். அவர் மேலும் கூறுகையில், "இந்தத் தாக்குதலில் காயமடைந்த மற்றொரு நபர் பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் விஷயம் என்னவென்றால் காயமடைந்த அந்த நபர் குறித்து எந்தவொரு தகவலையும் வெளியிடப் பாகிஸ்தான் மறுக்கிறது.
எனவே, காயமடைந்த அந்த நபர் ஹபீஸ் சயீத் என்று கூட சிலர் சொல்கிறார்கள். பாகிஸ்தானில் என்ன தான் ராணுவமே தீவிரவாதிகளுக்குப் பாதுகாப்பு கொடுத்தாலும் அவர்கள் வேட்டையாடப்படுவது நிச்சயம்" என்றார்.
பாகிஸ்தான் தீவிரவாதிகள்
அபுவை சுட்டுக் கொன்றவர் யார் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. இது குறித்த விசாரணை நடந்து வருகிறது. அதேநேரம் இந்தியாவில் தேடப்பட்டு வரும் பல தீவிரவாதிகள் இப்போது பாகிஸ்தானில் தான் பதுங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்நாட்டு ராணுவமே கூட பாதுகாப்பு அளிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தான் திடீரென அந்த தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்படுவது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications