ஹைதி நிலநடுக்கம்.. பலி எண்ணிக்கை 1,419 ஆக உயர்வு.. எங்கும் மரண ஓலம்!
லேஸ் கேய்ஸ்: கரீபியன் கடலில் உள்ள ஹைதி தீவுகளில் கடந்த 14 ஆம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 1,419 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
கடந்த 14 ஆம் தேதி காலை ஹைதி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியிருந்தது. போர் அவு பிரின்ஸ் தலைநகரின் மேற்கே 125 கிமீட்டரை மையம் கொண்டு ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரம் உள்ள லேஸ் கேய்ஸ் நகரம் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். மருத்துவமனைகள், பள்ளிகள், தேவாலயங்கள், அலுவலகங்கள் என சேதம் அடைந்துவிட்டன. கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,149 ஆக உயர்ந்துள்ளது. 14 ஆம் தேதி அன்று பலி எண்ணிக்கை 27 ஆக இருந்த நிலையில் தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது.
அது போல் தற்போதைய நிலையில் 6000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் மேலும் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. மீட்கப்பட்டோரின் எண்ணிக்கையில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. பெரும்பாலான மருத்துவமனைகள் இடிந்துவிட்டதால் எஞ்சியுள்ள மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

மருத்துவமனையில் உள்ள பிணவறையில் குளிர்சாதன பெட்டி கடந்த 3 மாதங்களாக வேலை செய்யவில்லை. இதையடுத்து சிறிய இடத்தில் 20 உடல்களை மருத்துவமனை நிர்வாகிகள் வைத்துள்ளனர். இந்த நிலையில் கனமழை, கடும் காற்று ஆகியவற்றால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஹைதி நகரமே நிலைகுலைந்துள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications