நெஞ்சே பதறுதே.. 15 பேர் உடல் சிதறி பலி.. இஸ்ரேல் போட்ட குண்டால் காசாவில் வெடித்து சிதறிய ஆம்புலன்ஸ்
இஸ்ரேல்: காசா நகரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் வான்வெளி தாக்குதலின்போது ஆம்புலன்ஸ் மீது விழுந்த குண்டால் 15 பேர் உடல் சிதறி பலியானதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளன.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே தொடர்ந்த மோதல் ஏற்பட்டு வந்தது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரவாதிகள் என அறிவித்துள்ளன.

கடந்த மாதம் 7ம் தேதி கடும் மோதல் உருவானது. ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது மிக கடுமையான தாக்குதலை நடத்தினர். 20 நிமிடங்களில் 7 ஆயிரம் ஏவுகணைகளை ஏவி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். அதோடு இஸ்ரேலுக்கு நுழைந்து அவர்கள் கடும் தாக்குதலை நடத்தினர். பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டனர்.
இதனால் அன்றைய தினம் மட்டும் 1,400 பேர் பலியாகினர். மேலும் 230 பேர் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இஸ்ரேலின் கடந்த 75 ஆண்டு கால வரலாற்றில் இது மோசமான தாக்குதலாக பார்க்கப்படுகிறது. இதனால் இஸ்ரேலும் பதிலடி கொடுக்க தொடங்கியது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் தொடங்கியதாக கூறி காசா மீது உக்கிரமான வான்வெளி தாக்குதலை தொடங்கினார்.
இந்த தாக்குதல் 4வது வாரமாக தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே தான் இஸ்ரேல் தரைவழி தாக்குதலையும் தொடங்கி உள்ளது. காசா நகருக்குள் படிப்படியாக இஸ்ரேல் படைகள் நுழைந்து தாக்குதலை தொடங்கி உள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவின் அன்டனி பிளிங்கன் டெல்ல அவிவ் நகரில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை 3வது முறையாக சந்தித்தார்.
இந்த வேளையில் காசாவில் இருந்து மக்கள் வெளியேறுவதற்காக போரை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்க நெதன்யாகு மறுத்துவிட்டார். இஸ்ரேலில் இருந்து பிணைக்கைதியாக பிடித்து செல்லப்பட்டவர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் முற்றிலுமாக விடுவிக்க வேண்டும். அப்போது தான் போர் நிறுத்தம் செய்யப்படும் என நெதன்யாகு கூறிவிட்டார்.
இந்நிலையில் தான் காசாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளாது. அதாவது காசா நகரில் இஸ்ரேல் இரவு, பகலாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் தான் வடக்கு காசா பகுதியில் இருந்து பொதுமக்களை ஆம்புலன்ஸில் வெளியேற்றினோம். அப்போது ஆம்புலன்ஸ் மீது வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 15 பேர் பலியாகினர். மேலும் 60 பேர் படுகாயமடைந்தனர் என தெரிவித்துள்ளது. இதனை இஸ்ரேல் மறுத்துள்ளது.
பொதுவாக போரின்போது மக்கள் வசிக்கும் பகுதி, பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவற்றின் மீது தாக்குதல் நடத்தக்கூடாது. ஆனால் தொடக்கம் முதலே இஸ்ரேல் போர் வழிமுறைகளை மீறி தாக்கி வருவதாக பாலஸ்தீனம் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. ஆனால் இதனை இஸ்ரேல் மறுத்து வருகிறது. மேலும் தற்போதைய சூழலில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மொத்தம் 9,227 பலாஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 3,826 சிறுவர்கள் அடங்குவர் என பாலஸ்தீனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications