வெற்றி.. வெற்றி.. பாலஸ்தீன தெருக்களில் ஹமாஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
டெல் அவிவ்: இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு வந்துள்ள நிலையில், ஹமாஸ் ஆதரவாளர்கள் இது தங்களின் வெற்றி என்று தெருக்களில் இறங்கி கொண்டாடி வருகிறார்கள்.
Recommended Video
கடந்த 10ம் தேதி இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர்.
பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது.

ராக்கெட் தாக்குதல்கள்
இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலையடுத்து காசா முனை மீது இஸ்ரேலிய பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தியது. இரு தரப்பும் மாறிமாறி நூற்றுக்கணக்கான ராக்கெட் தாக்குதலை நடத்தியதால் பெரும் போர் சூழ்நிலை நிலவியது.

பறிபோன உயிர்கள்
இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 263 ஆக அதிகரித்துள்ளது. அதில் காசா முனையில் ஹமாஸ் அமைப்பினர், குழந்தைகள், பெண்கள் உள்பட 227 பேரும், மேற்குகரை பகுதியில் 24 பேரும், இஸ்ரேலில் கேரளாவைச் சேர்ந்தவரான சவுமியா என்ற நர்ஸ் உட்பட 12 பேரும் உயிரிழந்தனர்.
|
வீதிகளில் இறங்கிய மக்கள்
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டுடன் பரஸ்பர மற்றும் தொடர்ச்சியான போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டு உள்ளது என ஹமாஸ் அமைப்பின் அதிகாரி உறுதிப்படுத்தினார். வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது. இதனிடையே, ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை காசாவின் வீதிகளில் இறங்கி ஹமாஸ் வெற்றி பெற்றதாக கொண்டாடி வருகின்றனர்.

வெற்றி பரவசம்
"இது வெற்றியின் பரவசம்" என்று ஹமாஸின் மூத்த போராளி கலீல் அல்-ஹயா மகிழ்ச்சியோடு கூறினார். கொண்டாடுவதற்காக தெருக்களில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் முன்பாக அவர் இவ்வாறு கூறியதை ஊடக செய்திகளில் பார்க்க முடிந்தது.
|
தளபதி வீட்டு முன்பு கூட்டம்
இஸ்ரேலுக்கு எதிராக ராக்கெட் தாக்குதலுக்கு உத்தரவிட்ட ஹமாஸ் ராணுவப் பிரிவின் நிழல் தளபதி என வர்ணிக்கப்படும், தெற்கு காசா பகுதி நகரமான கான் யூனிஸில் வசிக்கும், முகமது டீஃப்பின் வீட்டிற்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் வெள்ளிக்கிழமை காலை கூடியிருந்தனர். "வெற்றி" என்று கோஷமிட்டு ஹமாஸ் பச்சை கொடிகளை அசைத்தனர்.

தயார் நிலையில், இஸ்ரேல்
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் ஹிடாய் ஜில்பர்மன் கூறுகையில், ஹமாஸ் பெரிய தாக்குதலை நடத்தினால், வான்வழித் தாக்குதலில் பதிலடி கொடுக்க இஸ்ரேலும் தயாராக உள்ளது. அச்சுறுத்தலை எதிர்கொள்ள இஸ்ரேல் போர் விமானங்கள் தயாராக உள்ளன, என்று ஜில்பர்மேன் கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications