‛‛பலியாடாகும் அப்பாவிகள்’’.. சொந்த மக்களுக்கே துரோகம் இழைக்கும் ஹமாஸ்?.. ஷாக் வீடியோ.. அடப்பாவமே
இஸ்ரேல்: இஸ்ரேல் எச்சரிக்கையை தொடர்ந்து காசாவின் வடக்கு பகுதியில் இருந்து பல ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும் நிலையில் அவர்களை செல்ல விடாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் தடுக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த 7 ம் தேதி கடும் மோதல் தொடங்கியது. பாலஸ்தீன விடுதலை அமைப்பான 'ஹமாஸ்' தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது மிக கடுமையான தாக்குதலை நடத்தினர். 20 நிமிடங்களில் 7 ஆயிரம் ஏவுகணைகளை ஏவி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.

இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போர் தொடங்கியதாக கூறி காசா மீது உக்கிரமான வான்வெளி தாக்குதலை தொடங்கினார். இந்த தாக்குதல் இன்று 9 வது நாளாக தொடர்ந்து வருகிறது. இருரப்பிலும் பலி எண்ணிக்கை என்பது 3 ஆயிரத்தை கடந்துள்ளது. 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
மேலும் நாளுக்கும் நாள் இருதரப்புக்கும் இடையேயான மோதல் என்பது வலுவாகி வருகிறது. இந்நிலையில் தான் இந்தியா உள்பட பல நாடுகள் போரை கைவிட்டு அமைதி திரும்ப பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறியுள்ளன. இதற்கிடையே தான் காசாவின் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதிக்கு மக்கள் இடம் பெற வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது. தற்போது வான்வெளி தாக்குதல் நடத்தும் நிலையில் வரும் நாட்களில் காசா நகருக்குள் புகுந்து தரைவழி தாக்குதல் நடத்தி இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
இதற்காக காசா எல்லையில் தற்போது இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ளது. மேலும் காசாவில் நுழைந்து தாக்குதல் நடத்தும்போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக அவர்களை வெளியேறும்படி இஸ்ரேல் கூறியுள்ளது. காசாவின் வடக்கு பகுதியில் மொத்தம் 1.1 மில்லியன் மக்கள் உள்ளனர். அதாவது 11 லட்சம் மக்கள் இருக்கின்றன. இது காசா நகரில் வசிக்கும் மக்களில் பாதி அளவாகும். இவர்களை 24 மணிநேரத்தில் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு நோக்கி இடம்பெயர நேற்று முன்தினம் இஸ்ரேல் தெரிவித்தது.
ஆனால் தற்போது நிலவும் பதற்றமான சூழலில் 24 மணிநேரத்தில் 11 லட்சம் மக்கள் இடம்பெயர சாத்தியமில்லை. இதனால் இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என ஐநாவும் இஸ்ரேலுக்கு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் இஸ்ரேல் தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்ளவில்லை. இதனால் காசா வடக்கு பகுதியில் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தங்களின் வீடுகளை விட்டு அவசரஅவசரமாக வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் தான் காசா பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதை ஹமாஸ் தீவிரவாதிகள் தடுப்பதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டி உள்ளது. இதற்காக ஹமாஸ் தீவிரவாதிகள் சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி உள்ளன. இதனால் பல சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருவதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.
மேலும் காசாவின் வடக்கு பகுதியில் இருந்து இடம்பெயரும் பொதுமக்களை ஹமாஸ் தீவிரவாதிகள் தடுக்கும் வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக இஸ்ரேல் ராணுவத்தின் செய்தி தொடர்பாளரான ரியர் அட்எம். டேனியல் ஹகாரி கூறுகையில், ‛‛மக்கள் காசாவின் தெற்கு பகுதிக்கு செல்வதை தடுக்க ஹமாஸ் தீவிரவாதிகள் பெரிய முயற்சி செய்து வருகின்றன. அதோடு தங்களின் மக்கள் கொல்லப்படுவதை உலகுக்கு காட்ட வேண்டி இத்தகைய மோசமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஆனால் நாங்கள் கூறுவது ஒன்று தான்.
காசாவின் வடக்கு பகுதி மக்கள் தெற்கு நோக்கி செல்ல வேண்டும். ஹமாஸ் உங்களை மனித கேடயங்களாக பயன்படுத்த விரும்புகிறது. இதற்கு பலியாகி விட வேண்டாம். அதோடு ஒவ்வொருவரின் பாதுகாப்புக்கும் முக்கியமாகும். இதனால் இடம்பெயர வேண்டும். ஏனென்றால் வரும் நாட்களில் காசா நகரில் தீவிரமான தாக்குதல் நடத்தப்போகிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications