அதென்ன கையில்? ஹமாஸ் கடத்திய இஸ்ரேல் குழந்தைகளின் நிலை என்ன? வெளியான வீடியோ.. பெற்றோர்கள் ஷாக்

Subscribe to Oneindia Tamil

காசா: கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், இஸ்ரேல் பெண்களை அவர்களின் குழந்தைகளுடன் கடத்தி சென்றிருக்கின்றனர். கடத்தி செல்லப்பட்ட குழந்தைகளை துப்பாக்கி முனையில் அவர்கள் பாதுகாத்து வருகின்றனர். இத தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் கிளர்ச்சி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்துவதும் பாலஸ்தீனத்தில் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்களாகும். ஆனால் கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி நிலவியது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி இந்த அமைதியை குலைக்கும் வண்ணம் ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

Hamas protects Israeli children at gunpoint

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்தான் பலமான நாடு என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில், இந்த ஏவுகணை தாக்குல் அந்நாட்டின் ஆத்திரத்தை அதிகமாக தூண்டியது. இந்த தாக்குததில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அதேபோல பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் படையினர் பெண்களையும், குழந்தைகளையும், ராணுவ வீரர்களையும் பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். இந்த கைதிகளை வைத்துதான் தற்போது இஸ்ரேலுக்கு, ஹமாஸ் போக்கு காட்டி வருகிறது. ஹமாஸின் இந்த பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா, பிரிட்டன் தொடங்கி பெரும்பாலான மேற்கு நாடுகள் கண்டித்திருக்கின்றன.

மறுபுறம் இஸ்ரேல், காசா மீது அதிரடி தாக்குதலை தொடுத்திருக்கிறது. கடந்த 7 நாட்களாக வான்வழி தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேல் தற்போது தரை வழியாக ஊடுருவி வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட பதில் தாக்குததில் தங்கள் நாட்டை சேர்ந்த சில பிணை கைதிகளை மீட்டிருக்கின்றனர். இருப்பினும் இன்னும் அதிகமான பிணை கைதிகளை இஸ்ரேல் மீட்க வேண்டியிருக்கிறது. இந்நிலையில், தற்போது ஹமாஸ் அமைப்பினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கடத்தி வரப்பட்டு பிணை கைதிகளாக வைக்கப்பட்டுள்ள குழந்தைகளை இவர்கள் துப்பாக்கி முனையில் பாதுகாத்து வருவதை போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.

ஹமாஸ் தங்கள் நாட்டின் குழந்தைகளை கொன்று குவித்து வருகிறது என அமெரிக்காவிடம் இஸ்ரேல் ஏற்கெனவே கூறியிருந்தது. இது தொடர்பாக சில புகைப்படங்களையும் கொடுத்திருந்தது. அதேபோல, உலக நாடுகள் தடை செய்த பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது என்றும் இதன் மூலம் பாலஸ்தீன குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் எனவும் ஹமாஸ் பதிலுக்கு விமர்சித்துள்ளது. இப்படி இருக்கையில் ஹமாஸ் தற்போது வீடியோ வெளியிட்டிருப்பதன் நோக்கம், இஸ்ரேலிய குழந்தைகள் பாதுகாப்பாகதான் இருக்கிறார்கள் என்பதாக இருக்கலாம் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

வீடியோவில் ஹமாஸ் படையினர் அரபு மொழியில் பேசுகிறார்கள். குழந்தையின் தொட்டிலை ஆட்டி விடுகிறார்கள். சிறுவன் ஒருவனின் ஷூ லேஸை மற்றொருவர் கட்டுகிறார். மற்றொருவர் குழந்தைக்கு தண்ணீரை கொடுக்கிறார. ஆனால் இவர்கள் அனைவரின் கைகளிலும் துப்பாக்கிகள் இருக்கின்றன. வீடியோ சோஷியல் மீடியாவில் பரவிய நிலையில் கையில் துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்களுடன்தான் குழந்தைகளை இவர்கள் பாதுகாப்பார்களா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+