காஸாவுக்குள் "இஸ்ரேல்" நுழைந்தால்- "சுரங்க பாதை அட்டாக்" வீடியோ மூலம் ஹமாஸ் ஜிஹாதிகள் மிரட்டல்!
காஸா: பாலஸ்தீனத்தில் ஹமாஸ் ஜிஹாதிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் காஸா மீது முப்படை தாக்குதல் நடத்தப்படும் என அறிவித்து இஸ்ரேல் விதித்த கெடு முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் காஸாவுக்குள் நுழைந்தால் இப்படித்தான் தாக்குதல் நடத்துவோம் என ஜிஹாதிகள் மிரட்டல் வீடியோ ஒன்றை விடுத்துள்ளனர்.

இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந் தேதி ஹமாஸ் ஜிஹாதிகள் பல்லாயிரக்க்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் பிணை கைதிகளாக ஹமாஸ் ஜிஹாதிகளால் பிடித்து செல்லப்பட்டனர்.
இதனையடுத்து ஹமாஸ் ஜிஹாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள காஸா மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தின. இதில் 3,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது இஸ்ரேல் பக்கம் உலக நாடுகள் அணிவகுத்து நிற்கின்றன. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா முழு வீச்சில் களமிறங்க உள்ளது. இன்னொரு பக்கம் அரபு நாடுகள் ஒன்று கூடி ஹமாஸ் ஜிஹாதிகளுக்கு ஆதரவாக முடிவெடுக்க இருக்கின்றன. இதனால் மூன்றாவது உலகப் போர் உருவாகுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
⚡️Hamas Publishes a Video titled:
— War Monitor (@WarMonitors) October 14, 2023
“A message to the ground forces: This is what awaits you when you enter Gaza” pic.twitter.com/pqrSmNBMTL
இந்நிலையில் ஹமாஸ் தீவிரவாதிகளை அழிக்கும் வகையில் காஸா நகருக்குள் முப்படைகளும் நுழைந்து தாக்குதல் நடத்தும்; ஆகையால் அங்கிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற வேண்டும்; பொதுமக்கள் வெளியேறும் போது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதனால் காஸாவில் பெரும் பேரழிவு அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

இதனிடையே ஹமாஸ் பயங்கரவாதிகள் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் பகிர்ந்துள்ளன. அந்த வீடியோவில், காஸாவுக்குள் இஸ்ரேலிய படைகள் நுழைந்தால் பதிலடி இப்படித்தான் இருக்கும் என விவரிக்கப்பட்டுள்ளதாம். அதாவது காஸாவுக்குள் நுழையும் பகுதிகளில் சுரங்க பாதைகளில் பதுங்கி இருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் திமுதிமுவென வெளியேறி ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் இஸ்ரேலிய டாங்கிகளை அழித்தது இப்படித்தான் என்கிற போர்க் காட்சிகளை மீண்டும் வெளியிட்டுள்ளனர். இத்தகைய நிலக்கீழ் சுரங்க பாதை யுத்தம் மூலம் இஸ்ரேலுக்கு பேரழிவை ஏற்படுத்துவோம் என்பது ஹமாஸ் பயங்கரவாதிகளின் மிரட்டல். யுத்தங்களால் அப்பாவி பொதுமக்கள் அழிந்து போகிற கூக்குரல் இந்த டாங்கிகளுக்கும் ராக்கெட் லாஞ்சர்களுக்கும் ஒருபோதும் கேட்பதில்லையே!
-
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications