"லீக்" ஆகிடுச்சே ஆடியோ.. இப்படி ஆபாசமாக பேசியது இம்ரான்கானா.. அந்த 2 பெண்கள் யார்.. கிளம்பிய சர்ச்சை
2 பெண்களிடம் இம்ரான்கான் ஆபாசமாக பேசியதாக புகார்கள் எழுந்து வருகின்றன
லாகூர்: 2 பெண்களிடம் இம்ரான்கான் ஆபாசமாக பேசியதாக ஆடியோக்கள் வெளியாகி, பாகிஸ்தானை மேலும் உஷ்ணமாக்கி வருகிறது.. என்ன நடந்தது?
ஆட்சியில் இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி, இந்தியாவை புகழ்வதை விடாமல் செய்து கொண்டிருக்கிறார் பாகிஸ்தான் நாட்டின் இம்ரான்கான்.
கடுமையான பொருளாதார நெருக்கடியை பாகிஸ்தான் சந்தித்தது.. என்னென்னவோ திட்டங்களை, அறிவிப்புகளை இம்ரான் கான் மேற்கொண்டும், நிலைமையை சீரமைக்க முடியவில்லை..

இம்ரான்கான்
சரியாக அரசாங்கத்தை வழிநடத்தவில்லை என்பதால், இம்ரான்கான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அந்த நாட்டு மக்களும், எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்த நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றியும் பெற்றது.. இம்ரான் கான் அரசும் கவிழ்ந்தது.. பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.. கடந்த ஆண்டு அக்டோபரில், இம்ரான் கான் சட்டம் இயற்றுபவர்களின் நம்பிக்கையை விலைக்கு வாங்க முயன்றதாக ஒரு ஆடியோ வெளியாகி இருந்தது.

காய்நகர்த்தல்
அதனால், பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின்போது, அவர் வெளியேற்றப்படுவதற்கு முன்பு இது தொடர்பாக தன்னுடைய விளக்கத்தையும் அளித்திருந்தார்.. இம்ரான்கான் வெளியேற்றப்பட்டாலும்கூட, அவருக்கு எதிராக காய்நகர்த்தல்கள் வெளியாகி கொண்டேதான் இருக்கிறது.. இப்போதுகூட ஒரு ஆடியோ வெளியாகி உள்ளது.. மொத்தம் 2 ஆடியோக்கள் வெளியாகி உள்ளன.. இந்த ஆடியோ கிளிப்பிங்ஸை, அந்நாட்டின் பத்திரிகையாளர் சையத் அலி ஹைதர் தன்னுடைய யூடியூப் சேனலில் ஷேர் செய்துள்ளார்.

க்ளப்பிங்ஸ்
இந்த ஆடியோவில் இம்ரான்கான், ஒரு பெண்ணிடம் ஆபாசமாக, உடலுறவு குறித்து பேசுவதாக உள்ளதாக கூறப்படுகிறது.. இந்த ஆடியோ பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்ததாகவும் சில பாகிஸ்தான் செய்தி வெப்சைட்களில் செய்திகள் வந்துள்ளன.. ஆனால், இது உண்மையிலேயே இம்ரான்கான் குரல்தானா? ஆடியோவின் நம்பகத்தன்மை எந்த அளவுக்கு உள்ளது என்று தெரியவில்லை.. சில பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் ஆடியோவில் உள்ள குரல் உண்மையில் இம்ரான் கானுடையது என்று அடித்து சொல்கிறார்கள்..

கான் கான்
இப்போதைய கூட்டணி அரசாங்கமும், ராணுவ அமைப்பும் சேர்ந்து, இம்ரான் கானுக்கு எதிராக இப்படியெல்லாம் பொய் குற்றங்களை சுமத்துவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.. "கான் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால் அவர் தன்னை ஒரு முன்மாதிரி முஸ்லீம் தலைவராக காட்டுவதை நிறுத்துவார் என்று நான் நம்புகிறேன்" என்று பத்திரிகையாளர் ஹம்சா அசார் சலாம் தன்னுடைய ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்..

லீக்ஆடியோ
கடந்த சில மாதங்களாகவே, கைநழுவி போன பிரதமர் பதவியை, எப்படியாவது மீட்டு, பாகிஸ்தானை காப்பாற்றுவேன் என்று பிரச்சாரத்தில் விடாமல் சொல்லி வருகிறார் இம்ரான்கான்.. இப்படிப்பட்ட சூழலில், 2 பெண்களிடம் ஆபாசமாக பேசியதாக செய்திகள் வெளியாகி வருவதும், அதை அவரது ஆதரவாளர்கள் மறுப்பதும், ஆனால், கட்சியின் தலைமை வரை இந்த விஷயம் சென்றுள்ளதும், பாகிஸ்தான் அரசியலில் மீண்டும் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications