ஒருவழியாக மீள்கிறது சீனா.. முடிவுக்கு வருகிறது தொற்று பாதிப்பு.. ஆனாலும் அந்த 7 பேர்.. என்னாச்சு?
சீனா இப்படி கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க, சில நாடுகள் மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று கூறியது.
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு இறுதி கட்டத்திற்கு வந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் வெளிநாடுகளிலிருந்து வந்த 7 நபர்களுக்கு XBB.1.5 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு இன்னும் முடிவடையவில்லை என்று சொல்லப்படுகிறது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதன் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இது உலகம் முழுவதும் திடீரென பரவ தொடங்கியது. யாரும் எதிர்பார்க்காத இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 67 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். அதேபோல 67 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மட்டுமல்லாது ஏராளமான பொருளாதார பாதிப்புகளையும் இந்த கொரோனா வைரஸ் ஏற்படுத்திவிட்டது.
இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்தே இன்னும் சில நாடுகள் வெளிவர முடியாமல் தவித்து வருகின்றன. இதற்கு காரணம் அந்நாடுகள் பின்பற்றிய கடுமையான கட்டுப்பாடுகள்தான். சில நாடுகள் இப்படி கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க, சில நாடுகள் மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று கூறியது. இந்த நாடுகளில் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

அமெரிக்கா
உதாரணமாக அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் கொரோனா தொற்றுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று கூறின. இந்நாடுகளில் தொற்று பாதிப்பு, உயிரிழப்பு போன்றவை அதிக அளவில் பதிவாகியிருக்கின்றன. சீனாவை பொறுத்த அளவில் 'ஜீரோ' கோவிட் கொள்கை பின்பற்றப்பட்டது. அதாவது யாருக்கேனும் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனடியாக அவர்கள் வசிக்கும் பகுதி சுகாதாரத்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும். முதலில் தொற்று பாதிக்கப்பட்டவர் தனிமைப்படுத்தப்பட்டு, அவர் குடும்பம் தொடங்கி அந்த ஏரியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பரிசோதனை செய்யப்படும்.

கடும் கட்டுப்பாடுகள்
இதில் யாருக்கேனும் தொற்று பாதிப்பு அறிகுறி இருந்தால் கூட அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இவ்வளவு கெடுபிடி காரணமாக உலக மக்கள் தொகையில் சீனா முதலிடத்தில் இருந்தாலும் வைரஸ் பாதிப்பு வரிசையில் பின்தங்கி இருந்தது. ஆனாலும் இந்த கட்டுப்பாடுகள் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. சாமானிய மக்களின் வருமானம் இந்த அதீத கட்டுப்பாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே மக்கள் போராட்டங்களில் குதித்தனர். பொதுமக்களுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டன.

புதிய வைரஸ்
இதனையடுத்து கடுமையான கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டு 'ஜீரோ கோவிட் கொள்கை' கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால் மக்கள் பெருமூச்சு விட்ட நிலையில், அப்போதுதான் உண்மையான ஆபத்தே கண்ணுக்கு தெரிந்தது. அதாவது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் ஒமிக்ரான் கொரோனா வைரஸின் மரபணு மாறிய XBB.1.5 வரைஸ் சீனா முழுவதும் வேகமாக பரவத் தொடங்கியது. மெடிக்கல் ஷாப்களில் இருந்த மொத்த மருந்துகளும் காலியாகின. மருத்துவமனைகளிலும் கிளினிக்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

உயிரிழப்பு
எதிர்பார்த்தைப்போலவே உயிரிழப்பும் அதிகரித்தது. இருப்பினும் அந்நாட்டு அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்ததால் உயிரிழப்பு வெகுவாக குறைந்து தற்போது தொற்று பாதிப்பும் ஏற முடிவுக்கு வந்துள்ளது. அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த சுகாதாரம் மற்றும் இதர துறை அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். ஆனால் வெளிநாடுகளிலிருந்து வந்த 7 பேருக்கு XBB.1.5 பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் சீனாவில் இன்னும் கொரோனா தொற்று பாதிப்பு முடிவுக்கு வரவில்லையென அந்நாட்டு ஊடகங்கள் கூறியுள்ளன.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications