லைபீரியாவில் எபோலா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த அமெரிக்க டாக்டருக்கும் நோய் தாக்கியது!
வடக்கு கரோலினா: லைபீரியாவில், அதி பயங்கரமான எபோலா தாக்கிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் ஒருவருக்கு அந்த வைரஸ் தாக்கியுள்ளது.
இதுகுறித்து வடக்கு கரோலினாவைச் சேர்ந்த சமரிதான்ஸ் பர்ஸ் என்ற தன்னார்வ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், லைபீரியாவின் மோன்ரோவியா நகரில் உள்ள மருத்துவமனையில் எபோலா தாக்கிய நோயாளிகளுக்கு டாக்டர் கென்ட் பிரான்ட்லி சிகிச்சை அளித்து வந்தார்.

தற்போது அவருக்கும் எபோலா தாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் பாசிட்டிவ் என்று முடிவு வந்துள்ளது. டாக்டர் பிரான்ட்லி, எங்களது அமைப்பின் மருத்துவ இயக்குநராக இருந்து வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் பயங்கரமான வைரஸாக இந்த எபோலா வைரஸ் கூறப்படுகிறது. உலகின் பல பகுதிகளில் தற்போது உள்ள அதி பயங்கரமான அபயாகரமான வைரஸ்களில் இதுவும் ஒன்றாகும். பல ஆப்பிரிக்க நாடுகளில் இந்த எபோலா தாக்கி பல நூறு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் என்ன கொடுமை என்றால் எபோலா தாக்கிய நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கும் இது அதிக அளவில் பரவி வருவதுதான்.
33 வயதான பிரான்ட்லி, 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் லைபீரியாவில் மருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதுவரை ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா தாக்கி 672 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications