உடலெங்கும் ரத்தம் வழிய மகனுக்கு பாலூட்டிய தாய்... நெஞ்சை உருக்கும் போட்டோ!
பாங்காக்: தாய்லாந்தில் கை, கால் உடைந்து, தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்திருந்த வேளையில் பெண் ஒருவர், தன் 6 மாத மகனுக்கு தாய்ப்பால் ஊட்டிய சம்பவம் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது.
தாய்ப்பாசத்தை மிஞ்சிய விசயம் ஏதும் உலகத்தில் இல்லை. அதனை உறுதி செய்வது போல், தாய்லாந்து மருத்துவமனை ஒன்றில் நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
கை மற்றும் கால் உடைந்த நிலையில், தலையிலும் பலத்த காயத்தோடு மார்பில் ரத்தக்கறையோடு கட்டிலில் சிகிச்சைக்காக ஒரு பெண் படுத்துள்ளார். அந்த வேளையிலும், தன் காயங்களைப் பொருட்படுத்தாது, தன் ஆறு மாத மகனின் பசியை தாய்ப்பால் கொடுத்து ஆற்றுகிறார் அப்பெண்.

நெஞ்சை உருக்கும் இந்த சம்பவத்தை யாரோ புகைப்படமாக பதிவு செய்துள்ளனர். அது ‘அம்மா அன்பின் சக்தி' என்ற தலைப்பில் தாய்லாந்து ஊடகங்களில் வெளியானது.
பின்னர் இந்தப் புகைப்படம் இணையத்திலும் வைரல் ஆனது. இந்தப் புகைப்படத்தைப் பார்த்து பலர் கமெண்ட் பதிவு செய்துள்ளனர். அதில், அந்த தாயின் பாசத்தை என்னவென்று சொல்ல என்று பாராட்டும், சீக்கிரம் அந்தத் தாய் குணமாகட்டும் என பிரார்த்தனைகளுமாக நிறைந்துள்ளன.
தற்போது அப்பெண்ணும், அவரது மகனும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனபோதும், இந்தப் புகைப்படத்தில் உள்ள அந்தப் பெண்ணிற்கு எப்படி இவ்வாறு பலத்த காயம் ஏற்பட்டது என்பது குறித்த தகவல்கள் இல்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications