பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தல் விறுவிறு.. சர்வாதிகாரி மார்க்கோஸ் மகனுக்கு வெற்றிவாய்ப்பு
மனிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு பொதுமக்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டேவின் பதவிகாலம் முடிவடைந்ததை தொடர்ந்து அந்நாட்டில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
காலை 6 மணிக்கு தொடங்கிய அதிபர் வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 6 கோடியே 7 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

வாக்குப்பதிவு விறுவிறு
வாக்குகளை செலுத்துவதற்காக சூரியன் உதிப்பதற்கு முன்பாகவே மக்கள் வாக்குச்சாவடிகளில் குவிந்தனர். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தேர்தலில் பொதுமக்கள் வாக்குச்சாவடி மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பள்ளிகள், கல்லூரிகள் முன்பு நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். வன்முறையான தேர்தல் வரலாற்றை கொண்ட பிலிப்பைன்சில் இம்முறை 60 ஆயிரத்துக்கும் அதிகமான பாதுகாப்புப்படை வீரர்கள், போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

சர்வாதிகாரி மகன்
வழக்கத்தை விட இந்த தேர்தலில் மக்கள் மத்தியில் மிகுந்த எழுச்சி காணப்படுவதால் அதிகளவிலான வாக்குகள் பதிவாகும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தலில் சர்வாதிகாரி ஃபெர்டினாண்ட் மார்கோஸின் மகன் போங்போங் மார்கோஸ், தற்போதை துணை அதிபர் லெனி ரோபெர்டோ உள்ள 10 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

40 ஆண்டுகளுக்கு பின் மார்க்கோஸ் குடும்பம்
போங்போங் மார்கோஸை ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் என்றே மக்கள் அழைத்து வருகின்றனர். பெர்டினாண்ட் உயிரிழந்து 40 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக அவரது குடும்பத்திலிருந்து மீண்டும் பிலிப்பைன்ஸை ஆள அவரது மகன் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் 10 பேர் போட்டியிட்டாலும் போன்போங் மார்கோஸ் மற்றும் துணை அதிபர் லெனி ரோபெர்டோ ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

போங்போங்கிற்கு வெற்றிவாய்ப்பு
கடுமையான தேர்தல் பிரசாரங்களின் முடிவில் போங்போங் மார்க்கோஸுக்கு அதிக ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. போட்டி வேட்பாளரான லெனி ரோபெர்டோவை விட 2 இலக்க எண் வித்தியாசத்தில் போங்போங் வெற்றிபெறுவார் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. போங்போங் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்ததில் இருந்தே அவருக்கு ஆதரவாக பல குழுக்கள் பிரசாரங்களில் ஈடுபட்டன

ஆதரவும் எதிர்ப்பும்
அதே நேரம் அவரது தந்தை பெர்டினாண்ட் மார்கோசின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் பிலிப்பைன்ஸ் சந்தித்த அவலங்கள், ஊழல்கள், கொடுஞ்செயல்களை நினைவுபடுத்தி அவருக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தன. ஆனால், பெரிய குடும்பங்களின் ஆதரவு, பெர்டினாண்டுக்கு பிந்தைய அரசுகள் மீதான அதிருப்தி போன்றவை போங்போங் மார்க்சோசுக்கு வெற்றியை பெற்றுத்தரும் என்று கணிக்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications