கதறும் லாகூர்.. பாகிஸ்தானில் அடுத்தடுத்து கேட்ட மர்ம சத்தம்.. என்ன நடக்குதுன்னே தெரியவில்லையே!

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் லாகூரில் பல இடங்களில் வெடிப்பு சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த சத்தத்திற்கான காரணம் தெரியவில்லை.

வால்டன் விமான நிலையம் அருகிலும் இதே போன்ற சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. வெடிகுண்டு தாக்குதலா? அல்லது இந்தியா நடத்தும் தாக்குதலா என்று தெரியாமல் அங்கே பாதுகாப்பு துறையினர் குழம்பி உள்ளனர்.

pakistan Jammu Kashmir

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தளங்களில் இந்தியா சார்பாக தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். அங்கு தீவிரவாத முகாம்கள் மட்டும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற குறியீட்டுப் பெயரில் இரவு நேர துல்லியத் தாக்குதல்களில் மொத்தம் ஒன்பது தளங்கள் ரேடாரில் துல்லியமாக குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டன.

இந்தியாவிற்கு உள்ளே இருந்தே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவில் இருந்தே ஏவுகணைகள் மூலம் 9 இடங்கள் தாக்கப்பட்டு உள்ளன. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். இதில் பாகிஸ்தான் ராணுவ பகுதிகள் எதுவும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படவில்லை.

இது போக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லை கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர். பாராமுல்லா, பூஞ்ச், ரசோரி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பீரங்கிகள் மூலம் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 பேர் பலியாகினர். இதில் ஒரு பெண், 2 குழந்தைகள் அடங்குவர். மேலும் 38 பேர் காயமடைந்தனர். இதில் பூஞ்ச் மாவட்டம் தான் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இங்கு 7 பேர் பலியாகி உள்ளனர். 25 பேர் காயமடைந்துள்ளனர்.

தயார் நிலையில் உளவாளிகள்

இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி தரலாம். பாகிஸ்தான் எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முழு முதற் போர் வரும் வாய்ப்புகளும் உள்ளன. இதை கண்டுபிடிக்க, பாகிஸ்தான் செயல்பாட்டை முன்கூட்டியே அறிய உளவுப்படை அவசியம். இதற்காகவே இந்திய உளவு அதிகாரிகள் பாகிஸ்தானில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்தே பயங்கரவாத நடவடிக்கைகளைக் எங்கள் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதன் அடிப்படையில், இந்தியாவில் மேலும் தாக்குதல்கள் நடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அவற்றை தடுத்து நிறுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

போருக்கு தயார்

இன்னொரு பக்கம் நாடு முழுக்க பாரா மிலிட்டரி ராணுவ வீரர்களின் விடுப்புகள் நீக்கப்பட்டு உள்ளன. புதிதாக விடுப்பு எடுக்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே விடுப்பு எடுத்தவர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அவரவர் போஸ்டுகளுக்கு உடனடியாக ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. பொதுவாக ஒரு நாடு போருக்கு போகும் முன் சில விஷயங்களை கண்டிப்பாக மேற்கொள்ளும். இதனால் இந்தியா நீண்ட போருக்கு தயாராகி வருகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+