அடுக்குமாடி குடியிருப்பையே மூடிய பனிப்பொழிவு! சுரங்கம் தோண்டி வெளியே வந்த மக்கள்! வீடியோ பாருங்க

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யாவில் கம்சட்கா என்ற இடம் உள்ளது. இங்கு தற்போது வழக்கத்துக்கு மாறாக கடும் பனிப்புயல் வீசி வருகிறது. இந்நிலையில் தான் அந்த நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பையே பனி மூடியுள்ளது. இதனால் வீட்டுக்குள் இருக்கும் பலரும் சுரங்கம் தோண்டி வெளியே வந்துள்ளனர்.

ரஷ்யாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் அதிகளவில் பனிப்பொழிவு இருக்கும். சில சமயங்களில் பனிப்புயலும் வீசும். இந்நிலையில் தான் வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு ரஷ்யாவின் பல இடங்களில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.

multi-storey-buildings-buried-under-snow-in-russia

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள கம்சட்கா பகுதியில் வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிகளவில் பனிப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டது. இதனால் அந்த மக்களுக்கு பனிப்பொழிவு தொடர்பான அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் தான் தற்போது கம்சட்கா நகரில் பெய்த அதிகளவிலான பனிப்பொழிவால் அடுக்குமாடி குடியிருப்புகள் புதைந்துள்ளன. பல இடங்களில் தரையில் இருந்து 2 மாடி கட்டடம் வரை பனிப்பொழிவு முழுவதுமாக மூடியுள்ளது. இதுதொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி பரவி வருகின்றன.

அதில் அடுக்குமாடி குடியிருப்புக்கு நடுவே மலைபோல் குவிந்துள்ள பனியில் மக்கள் சறுக்கி விளையாடி வருகின்றனர். மேலும் சிலர் தங்களின் வீட்டை சுற்றி சூழ்ந்த பனிக்கட்டிகளை இடித்து சுரங்கம் தோண்டி வெளியேறி வருகின்றன. மேலும் அந்த நகரில் உள்ள சாலைகள், கார்கள் பனியால் முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

வணிக நிறுவனங்கள், பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதா்ல அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரொட்டி, பால், முட்டை உள்ளிட்டவை பொதுமக்களுக்கு கிடைக்காமல் உள்ளது. கம்சட்கா நகரில் தற்போது பனியை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போதைய சூழலில் 2 பேர் பலியாகி உள்ளனர். இவர்கள் வீடுகளின் மேல் குவிந்த பனிக்கட்டிகளை உடைத்து அகற்றினர். அப்போது பனிக்கட்டிகள் அவர்கள் மேல் விழுந்ததால் இருவரும் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் பனிப்பொழிவால் மக்கள் பாதிக்கப்படுவது ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. ஆனால் இந்த ஆண்டு பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக 130 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு மக்கள் பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் கூறுகையில், ‛பல இடங்களில் 10 அடி முதல் 40 அடி உயரம் வரை பனி குவிந்துள்ளது' என்று கூறியுள்ளனர்.

இந்த அதிகப்படியான பனிப்பொழிவுக்கு முக்கிய காரணம் அங்குள்ள சீதோஷ்ண நிலை தான். வடமேற்கு பசிபிக் பெருங்கடலின் விளிம்பு பகுதியாக உள்ள ஓகோட்ஸ்க் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் அதிகளவில் உருவாகின. இது கடும் காற்று மற்றும் பனிப்பொழிவை கொண்டு வந்தது தான் இந்த பாதிப்புக்கு முக்கிய காரணம் என்று வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+