இஸ்ரேலுக்கு புதிய பிரச்சனை.. ஹிஸ்புல்லா தலைவராக நைம் காசிம் தேர்வு.. யார் இவர் தெரியுமா?
பெய்ரூட்: லெபனானில் இயங்கும் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாக்கள் இஸ்ரேலுக்கு குடைச்சல் கொடுத்து வருகின்றன. ஹிஸ்புல்லா அமைப்பினர் தலைரவாக இருந்த ஹசன் நஸ்ரல்லாவை ஏவுகணை தாக்குதல் மூலம் இஸ்ரேல் தீர்த்து கட்டிய நிலையில் புதிய தலைவராக நைம் காசிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரும் இஸ்ரேலுக்கு சவாலாக இருக்கலாம் என்ற எதிர்பார்க்கப்படும் நிலையில் நைம் காசிம் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
இஸ்ரேல் நாட்டின் ஒரு பகுதியில் பாலஸ்தீனம், இன்னொரு பகுதியில் லெபனான் நாடுகள் உள்ளன. இதில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு செயல்படுகிறது. அதேபோல் லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்த ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் ஈரான் நாட்டின் உதவியுடன் செயல்பட்டு வருகிறது. இந்த 2 அமைப்புகளும் இஸ்ரேலுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது. இஸ்ரேல் மீது குண்டு வீசுவது, ஏவுகணை தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையே தான் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ம் தேதி காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் போரை தொடங்கியது. இதற்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் இஸ்ரேல் போரை கைவிடாததால் ஹிஸ்புல்லா அமைப்பு மூலம் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து ஹமாஸ், ஹிஸ்புல்லாக்களை ஒரே நேரத்தில் இஸ்ரேல் சமாளித்து பதிலடி தாக்குதலும் நடத்தியது.
இதில் கடந்த 7 ம் தேதி லெபனானின் தாஹியில் உள்ள ஹிஸ்புல்லாவின் தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஹிஸ்புல்லாவின் தலைமையகம் இடிந்து தரைமட்டமானது. அதோடு ஹிஸ்புல்லாவின் தலைவராக செயல்பட்ட அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் ஹசன் நஸ்ரல்லா இறந்தார். இதனை இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பு உறுதி செய்தது. அதன்பிறகு ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக ஹாசெம் சாஃபிதீன் தேர்வு செய்யப்பட இருந்தார். ஆனால் அவரையும் இஸ்ரேல் விடவில்லை. அடுத்த சில நாட்களில் அவரையும் இஸ்ரேல் தீர்த்து கட்டியது. இதனால் ஹிஸ்புல்லா அமைப்பு தலைமை இன்றி தவித்தது.
இந்நிலையில் தான் ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக நைம் காசிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஹிஸ்புல்லா அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள அறிக்கயைில், ‛‛ஹிஸ்புல்லா புதிய தலைவராக நைம் காசிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹிஸ்புல்லாவின் வழக்கமான நடைமுறைப்படி ஷூரா கவுன்சில் கூடி நைம் காசிமை பொதுச் செயலாளராக தேர்வு செய்துள்ளோம்’’ என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக தேர்வாகி உள்ள நைம் காசிம் இஸ்ரேலுக்கு புதிய பிரச்சனையாக உருவாகி உள்ளார். ஏனென்றால் நைம் காசிம் நீண்டகாலமாக ஹிஸ்புல்லா அமைப்பில் செயல்பட்டு வருகிறார். அதோடு ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்த அப்பாஸ் அல்-முசாவி என்பவரால் 1991ம் ஆண்டு அமைப்பின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டவர்.
அடுத்த சில ஆண்டுகளில் இஸ்ரேலிய ஹெலிகாப்டர் தாக்குதலில் அப்பாஸ் அல்-முசாவி கொல்லப்பட்டார். அதன்பிறகு ஹசன் நஸ்ரல்லா பொதுச் செயலாளர் ஆனார். அந்த சமயத்திலும் துணைத் தலைவராக நைம் காசிம் செயல்பட்டு வந்தார். இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலுக்கு நைம் காசிமும் முக்கியமான நபர் ஆவார்.
மேலும் துணை தலைவர், தலைவராக செயல்படுவதற்கு முன்பு நைம் காசிம் ஹிஸ்புல்லா அமைப்பில் பல பொறுப்புகளில் செயல்பட்ட அனுபவம் கொண்டவர். அதாவது முன்னணி செய்தித் தொடர்பாளராக நீண்டகாலம் இருந்த அவர் வெளிநாட்டு ஊடகங்களுடன் பல்வேறு நேர்காணல்களில் பங்கேற்றவர். தற்போது அவர் ஹிஸ்புல்லா தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இஸ்ரேல் அவர் மீதும் கண்வைக்க தொடங்கி உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications