இஸ்ரேல் தலையில் பேரிடி! ஹமாஸ்க்கு ஆதரவு-லெபனான் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் சரமாரி 'ஏவுகணை' தாக்குதல்!

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் மேற்கு கரை, காஸா பகுதிகளில் இருந்து ஹமாஸ் ஜிஹாதிகள் இஸ்ரேலை நிலைகுலைய வைத்து வருகின்றனர். இன்னொரு பக்கம் ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும் இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருவது அந்நாட்டை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

பாலஸ்தீனம்- இஸ்ரேல் இடையேயான வரலாற்று கால யுத்தம் இப்போதும் நீடிக்கிறது. இஸ்ரேல் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் ஹமாஸ் இயக்கம் அதிதீவிர தாக்குதலை நேற்று காலை தொடங்கியது. கடல், தரை, வான்வழி என மும்முனை தாக்குதலை ஹமாஸ் நடத்தியது. இஸ்ரேலுக்குள் நுழைந்து நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய வீரர்களையும் பொதுமக்கள்- சுற்றுலா பயணிகளையும் ஹமாஸ் இயக்கத்தினர் பிணை கைதிகளாக பிடித்துச் சென்றனர். தாங்கள் கைப்பற்றிய இஸ்ரேல் ராணுவ வாகனங்களை பாலஸ்தீனர்கள் தீயிட்டு எரித்து கொண்டாடி வருகின்றனர்.

 Hezbollah join the fight with Hamas- Rockets fired from Lebanon on Israel

சர்வதேச நிலை: இஸ்ரேல் மீதான இத்தகைய அதிரடியான ஹாமாஸ் தாக்குதல் அந்நாட்டையே நிலைகுலைய வைத்துவிட்டது. சர்வதேச நாடுகள் இஸ்ரேல் பக்கம் நின்று ஆதரவு குரல் எழுப்புகின்றன. ஆனால் துருக்கி, லெபனான், ஈராக், ஈரான் நாடுகளில் இருந்து ஹமாஸ் பாலஸ்தீனர்களுக்கான ஆதரவு கரம் நீள்கிறது.

ஹமாஸ் இயக்க அழைப்பு: ஹமாஸ் இயக்கமும் அனைத்து அரபு நாடுகளின் ஆயுத குழுக்களும் தங்களுடன் இணையவும் அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று இஸ்ரேலுக்கு எதிரான போரில் லெபனானின் ஹிஸ்புல் தீவிரவாதிகள் இணைந்துள்ளனர். இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வரும் ஹமாஸ் இயக்க ராணுவ நடவடிக்கையை ஆதரிப்பதாக லெபனான் ஹிஸ்புல் தீவிரவாதிகள் அறிவித்திருந்தனர்.

ஹிஸ்புல்லாவின் இஸ்ரேல் மீதான தாக்குதல்: அத்துடன் லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல்களையும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு பதிலடி தருவதற்காக லெபனான் எல்லையில் பெரும் எண்ணிக்கையில் படைகளைக் குவித்து வருகிறது இஸ்ரேல். லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளி நிலைகளை இலக்கு வைத்தும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கும் பதற்றம் நிலவி வருகிறது.

ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா: லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் உருவானதே, இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராகத்தான். இப்போது ஹமாஸ் இயக்கம், இஸ்ரேலை 'வேட்டையாடு'வதால் கொண்டாட்டத்துடன் ஹிஸ்புல்லா இயக்கமும் கைகோர்த்துள்ளது. ஹிஸ்புல்லா இயக்கத்தின் பின்னணியில் ஈரான் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+