ட்ரம்ப்பின் பொய்களை மூடி மறைக்கும் மீடியா: ஹிலரி க்ளிண்டன் குற்றச்சாட்டு
வாஷிங்டன்(யு.எஸ்): டொனால்ட் ட்ரம்ப் பொது மேடைகளில் பொய்யான தகவல்களை அள்ளி வீசுகிறார். மக்களை திசை திருப்பும் ஆதாரமற்ற பொய்த் தகவல்களை, அம்பலப்படுத்தாமல் மீடியாக்கள் அமைதி காக்கின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார் ஹிலரி க்ளிண்டன்.
கமாண்டர் இன் சீஃப் ஃபோரம் நிகழ்ச்சியில், ஈராக் போரின் போது தனது நிலைப்பாடு என்று டொனால்ட் ட்ரம்ப் உண்மைக்கு புறம்பான தகவல்களை நாட்டு மக்களிடம் கூறினார்.

நிகழ்ச்சியின் நெறியாளர் மேட் லௌவர் அதனைத் தட்டிக் கேட்கவில்லை. மேலும் அந்த பேச்சை தொடர்வதற்கும் அனுமதித்தார்.
ட்ரம்ப்பின் பொய்கள் ஒன்றும் புதிது இல்லை. அவர் எக்கச்சமாக பொய்களை அவிழ்த்து விட்டு வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். மீடியாக்களில் பலருக்கு, ட்ரம்ப்பின் பொய்களை வெளிக்காட்டுவதில் என்ன சிரமமோ அல்லது வேறு ஏதாவது காரணமோ தெரியவில்லை.
வாக்காளர்களுக்கு உண்மை நிலவரம் தெரியாமல் பார்த்துக்கொள்வதன் மூலம் மீடியா தனது கடமையை செய்யவில்லை. ட்ரம்ப் நேர்மையானவர் என்பதைப் போல் தோற்றத்தை உருவாக்க மீடியாகள் பாடுபட்டு வரும் இந்த வேளையில் நம்முடைய ஆதரவாளர்களுக்கு மேலும் பல சவால்கள் வந்துள்ளன.
நாம் எல்லோரும் கடுமையாக ட்ரம்பின் பொய்களை எதிர்கொள்ளவேண்டிய நேரம். அமெரிக்க மக்களிடம் உண்மையை உரக்கச்சொல்லி அவர்களின் ஆதரவைப் பெறுவோம் என தனது ஆதரவாளர்களுக்கு ஹிலரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விவாதத்தை நடத்திய என்பிசி தொலைக்காட்சி ஜனநாயகக்கட்சிக்கு ஆதரவு நிலைப்பாடு கொண்டதாகும். அந்த தொலைக்காட்சி நெறியாளர் ட்ரம்புக்கு ஆதரவாக நடந்து கொண்டார்
என்ற ஹிலரியின் குற்றச்சாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
-
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
மாட்டிக்கிட்ட பங்கு.. டிரம்ப்-ன் கழுத்தை நெறிக்கும் ஈரான்.. தேவையில்லாமல் இறங்கிவிட்டோம் புலம்பும் USA!! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
அமெரிக்க பொருளாதாரம் அபாயத்தில் உள்ளதா? ஜகா வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.. வெளியானது முக்கிய அறிகுறி! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications