மனைவியை மாற்றிக் கொள்ளும் கணவன்கள்.. விருந்தாளிக்கு இரவு விருந்தாக செல்லும் பெண்கள்.. எங்கு தெரியுமா
விந்தோக்கு: இந்த உலகில் பல்வேறு மொழிகள், இனங்கள் உள்ளன. ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் ஒவ்வொரு விதமான கலாச்சாரம் உள்ளது. பல்வேறு வினோதமான பழக்க வழக்கங்கள் உள்ளன. அந்த வகையில் நமீபியாவின் கடைசி அரை-நாடோடி பழங்குடியினராக ஹிம்பா மக்களுக்கு வினோத பழக்கம் உள்ளது. தங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு மனைவியை விருந்தாக அளிக்கிறார்கள். இதனை விருந்தோம்பலின் மிக உயர்ந்த வடிவமாக அவர்கள் பார்க்கிறாரக்ள்
நமீபியாவின் கடைசி அரை-நாடோடி பழங்குடியினரான ஹிம்பா மக்கள் விநோதமான பழக்க வழக்கம் கொண்டவர்கள். இவர்களின் மொத்த எண்ணிக்கை என்று பார்த்தால் 50,000 பேர் தான். பழங்குடியினரான இவர்களுக்கு சொந்த வீடுகள் இருந்தாலும், அதிகப்படியான மழைப்பொழிவு மற்றும் வறட்சி ஆகிய காரணங்களால் இடம் பெயர்வதை வழக்கமாக கொண்டவர்கள். இதன் காரணமாக இவர்களை, அரை நாடோடி என்று நமீபியா மக்கள் அழைக்கிறார்கள்.

இந்த பழங்குடி மக்கள் அவர்களின் விசித்திரமான மரபுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் காரணமாக அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம் பெறுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் ஹிம்பா பழங்குடியின மக்களில் பெண்கள், தங்கள் விருந்தினர்களுடன் பார்த்த உடனேயே மிகவும் நெருங்கி பழகுவார்கள். அவர்களுடன் உறவும் வைத்துக் கொள்வார்களாம். இப்படி உறவு வைத்துக் கொள்வதற்கு அனுமதியை அவர்களது கணவர்களே வழங்கி உள்ளார்கள் என்பது தான் வியப்பான தகவல்.
நமீபியாவின் பாலைவனப் பகுதிகளில் வசிக்கும் ஹிம்பா பழங்குடியினர், மேற்கத்திய நாடுகளின் பழக்க வழக்கங்கள் மற்றும் உலக அளவில் உள்ள பல்வேறு கலாச்சாரங்களில் இருந்து தனித்து தெரிகிறார்கள். இந்த உலகில் வழக்கத்தில் உள்ள திருமண உறவுகள் மற்றும் தார்மீக நெறிமுறைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டவர்களாக இருக்கிறார்கள்.
ஆப்பிரிக்காவில் உள்ள வரலாற்று தொலைக்காட்சி, சமீபத்தில் ஒரு ஆவணப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தின் படி பார்த்தால், "ஹிம்பா பழங்குடியினர், தங்கள் மனைவிகளை பாலினத்திற்காக விருந்தினர்களுக்கு கொடுப்பதை விருந்தோம்பலின் மிக உயர்ந்த வடிவமாகக் கருதுகிறார்களாம்.. வீட்டிற்கு வரும் விருந்தினர்களை அன்புடன் வரவேற்கும் ஒரு வழியாக இதனை கருதுகிறார்கள். மேலும், பாலியல் பொறாமை உணர்வு தவிர்க்கப்படும் என்றும் நம்புகிறார்கள். மிகவும் பழமைவாத திருமண முறைகளை இவர்கள் கடைபிடிக்கிறார்கள்.
அதேநேரம் ஹிம்பா பழங்குடியின பெண்கள் மிகவும் கடின உழைப்பாளிகள் என்று ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது. ஹிம்பா பழங்குடியின பெண்கள், அந்த இனத்தில் உள்ள ஆண்களை விட அதிகமான வேலைகளைச் செய்கிறார்கள். குழந்தைகளை பராமரிப்பது, விலங்குகள் மற்றும் வீடுகளைப் பராமரிப்பது மற்றும் சமையல், சுத்தம் செய்தல் போன்ற வீட்டு வேலைகளை பெண்களே செய்கிறார்கள். ஹிம்பா மக்களின் வாழ்க்கை முறை நமீபியால் உள்ள மற்ற சமூகத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமானது.
ஒரு மதிப்பீட்டின்படி, 50,000 ஹிம்பா பழங்குடி மக்கள் தங்கள் பாரம்பரிய இருப்பை அப்படியே கடைபிடித்த படி நமீபியாவில் வாழ்கின்றனர். இது மட்டுமின்றி, ஹிம்பா பழங்குடியின ஆண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருப்பது வழக்கமானதாக உள்ளது. 70 சதவீதத்திற்கும் அதிகமான ஹிம்பா ஆண்கள் யாரோ ஒருவருக்கு பிறந்த குழந்தையையாவது வளர்க்கிறார்கள். இதையும் மீறி அவர்கள் மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். ஹிம்பா பெண்கள் விவாகரத்து பெறுவது மிகவும் எளிதானது என்கிறார்கள். இந்த பழங்குடியினரில், திருமணத்திற்கு வெளியே அல்லது திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் பெரிய விஷயமாக கருதப்படுவதில்லை. ஒவ்வொரு குழந்தைக்கும் அவரை வளர்க்க ஒரு சமூக தந்தை இருக்கிறார்கள் என்று ஆவணப்படம் கூறுகிறது.

ஹிம்பா பழங்குடியினரும் மனைவிகளை மாற்றிக் கொள்ளும் பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறார்கள். இது பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது என்று ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் கீழ், இங்குள்ள ஆண்கள் தங்கள் மனைவிகளை தெரியாத வேறு ஆண்களுடன் இரவைக் கழிக்க அனுமதிக்கின்றனர். இது மட்டுமின்றி, விருந்தாளியோ அல்லது தெரியாத ஆணோ வேறொருவரின் மனைவியுடன் உறங்கும்போது, அந்தப் பெண்ணின் கணவர் இரவை வேறொரு அறையில் கழிப்பாராம்.
ஆனால் இந்த பழங்குடியினரின் வாழ்க்கை முறை மெதுவாக மாறி வருகிறதாம். நமீபியாவில் மேற்கத்திய நாடுகளின் தாக்கத்தால், ஹிம்பா பழங்குடியினரின் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களின் கலாச்சாரத்தை கண்டு வெட்கப்படுகிறார்களாம்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications