இப்படியும் நடக்குமா? ஓடுதளத்தில் விமானம் மோதி ஒருவர் உயிரிழப்பு.. ஹாங்காங்கில் நடந்த ஷாக் சம்பவம்
பீஜிங்: ஹாங்காங் விமான நிலையத்தில் விமானம் மோதியதில் விமான நிலையத்தில் பணியாற்றி வந்த ஊழியர் உயிரிழந்துள்ளார். விமான நிலையத்தில் நடைபெற்ற இந்த அரிதான சம்பவம் குறித்த விவரங்களை பார்க்கலாம்.
சாலைகளில் வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் சோக சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதுண்டு. அதேபோல விமானங்கள் விபத்துக்குள்ளாகி சில நேரங்களில் பயணிகள் உயிரிழக்கும் துரதிரிஷ்டவசமான சம்பவமும் நடைபெறும். ஆனால், ஏர்போர்ட் ஓடுதளத்தில் வைத்து விமானம் மோதியதில் விமான நிலையத்தில் பணியாற்றி வந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த அரிதான சம்பவம் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

ஹாங்காங் விமான நிலையத்தில் ஓடுதளத்தில் பயணிகள் இல்லாத விமானம் ஒன்று ஓடுதள பகுதிக்கு இழுவை வாகனம் மூலமாக இழுத்து செல்லப்பட்டுள்ளது. அப்போது விமானத்தை இழுத்து செல்லும் டிரக்கில் இருந்த ஊழியர் ஒருவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார். அடுத்த நொடியே இழுத்து வரப்பட்ட விமானம் அவர் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் அந்த ஊழியர் பலத்த காயங்களுடன் உயிருக்கும் போராடினார்.
எனினும், சிறிது நேரத்தில் அவர் மரணம் அடைந்து விட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். சீனாவை சேர்ந்த விமான பரமாரிப்பு நிறுவனத்தில் அந்த ஊழியர் பணியாற்றி வந்ததாக கூறப்பட்டுள்ளது. எனினும், அவரைப்பற்றி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. விமானம் மோதி உயிரிழந்த ஊழியர் சீட் பெல்ட் அணியாமல் இருந்து இருக்கலாம் என்று தெரிவித்துள்ள விமான நிலைய அதிகாரிகள், இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாக கூறியுள்ளனர்.
மேலும் அபாயகரமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக டிரக்கின் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஹாங்காங்கில் விமான நிலையத்திற்குள் நடந்த இந்த சம்பவம் விமான பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications