For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹாங்காங்கில் கொரோனா புதிய வேவ்.. நிலைமை மோசமானது.. கட்டாயம் மாஸ்க் அணிய உத்தரவு

Google Oneindia Tamil News

ஹாங்காங்: கொரோனா வைரஸ் தொற்றுநோயின் புதிய அலைகளை எதிர்த்துப் போராட கட்டாயம் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்று ஹாங்காங் அரசு உத்தரவிட்டுள்ளது.

சீனாவின் தன்னாட்சி பிரதேசமான ஹாங்காங்கில் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்து ஜூன் மாதத்தில் இயல்பு நிலை திரும்பியது. எனினும் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் 118 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. இதில் பலருக்கு தொற்று எப்படி பரவியது என்பதை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

என்னங்கடா இது! கள்ளு குடிச்சா கொரோனா போயிரும்னு பச்சை பிள்ளைகளுக்கு ஊத்துறீங்களேடா! என்னங்கடா இது! கள்ளு குடிச்சா கொரோனா போயிரும்னு பச்சை பிள்ளைகளுக்கு ஊத்துறீங்களேடா!

கூட்டத்திற்கு தடை

கூட்டத்திற்கு தடை

இந்நிலையில் "ஹாங்காங்கில் தொற்றுநோய் நிலைமை மிகவும் கடுமையாக மாறிவிட்டது என்று அரசின் தலைமைச் செயலாளர் மத்தேயு சியுங் செய்தியாளர்களிடம் கூறினார், பொது மற்றும் உணவகங்களில் இரண்டுக்கும் மேற்பட்டோர் கூடுவதற்க தடை செய்து உத்தரவிட்டார். உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. பார்சலுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

தலைமைச் செயலாளர்

தலைமைச் செயலாளர்

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் புதிய அலைகளை எதிர்த்துப் போராட ஹாங்காங்கர்கள் பொது இடங்களில் செல்லும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் மத்தேயு சியுங் தெரிவித்தார்.

வீட்டில் இருங்கள்

வீட்டில் இருங்கள்

ஹாங்கில் தற்போதைய நிலையில் 2500க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். புதிய வெடிப்பை கட்டுப்படுத்த, ஹாங்காங் சுகாதார அதிகாரிகள், மக்களை முடிந்தவரை வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர், குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகளை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.

நிலைமை மோசமானது

நிலைமை மோசமானது

மோசமான சூழ்நிலை காரணமாக சமூக இடைவெளி நடவடிக்கைகள் ஹாங்காங்கில் கடுமையாக்கப்பட்டுள்ளன, நான்குக்கும் மேற்பட்ட மக்கள் கூட்டமாக கூட தடை செய்யப்பட்டுள்ளன. ஜிம்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்ற வணிகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

English summary
Hong Kongers must wear masks whenever in public, authorities ordered Monday, as they unveiled the city's toughest social distancing measures yet to combat a new wave of coronavirus infections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X