வாவ்.. என்ன ஒரு வரவேற்பு.. ஹாங்காங்கில் கலக்கும் கருப்பு ஹீரோக்கள்.. சீனாவை கலங்கடிக்கும் வீடியோ!
ஹாங்காங் போராளிகளுக்கு அந்நாட்டு மக்கள் கொடுத்த வரவேற்பு சீனாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
Recommended Video
ஹாங்காங்: ஹாங்காங் போராளிகளுக்கு அந்நாட்டு மக்கள் கொடுத்த வரவேற்பு சீனாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
கடந்த ஒரு மாதமாக சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக ஹாங்காங் மக்கள் போராடி வருகிறார்கள். சீனாவுடன் இணையும் போது ஹாங்காங் தன்னாட்சி அதிகாரத்துடன் இருக்கும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால் இதை நீக்கும் பொருட்டு சீனா தொடர்ந்து சட்டம் இயற்றி வருகிறது. அதன் ஒருபகுதியாக ஹாங்காங் மக்களை நாடு கடத்த உரிமை அளிக்கும் வகையில் சட்டம் இயற்றவும் சீனா முயன்று வருகிறது.

கடும் போராட்டம்
கடந்த ஒரு மாதமாக இந்த சட்டத்திற்கு எதிராக ஹாங்காங் மக்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். கடந்த ஜூன் மாதத்தில் இருந்து அங்கு மக்கள் இதற்கு எதிராக போராட்டம் செய்தாலும், தற்போதுதான் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மிக முக்கியமாக ஹாங்காங்கில் சென்ட்ரல் விமான நிலையத்தில் பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது.

பெரிய மாஸ்
சுமார் 6-7 லட்சம் பேர் தினமும் சாலையில் இறங்கி போராடி வருகிறார்கள். ரயில் நிலையம், விமான நிலையம், சாலை , கல்லூரி என்று தினமும் 7 லட்சம் பேர் வரை சாலையிலேயே தூங்கி, சாப்பிட்டு அங்கேயே போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் சீனா கடுமையாக குழம்பி வருகிறது.

கருப்பு
இந்த நிலையில் அங்கு போராடும் இளைஞர்கள் எல்லோரும் தற்போது ஒரே மாதிரி கருப்பு நிற உடை அணிந்து போராடி வருகிறார்கள். முகத்தை கருப்பு நிற துணியால் மூடிக்கொண்டு, களமிறங்கி போராடி வருகிறார்கள். இதனால் அவர்களை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இவர்களை கருப்பு ஹீரோக்கள் என்று அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.

போராட்டம்
இவர்கள் அதிகம் தங்கி போராட்டம் நடத்தும் இடம் ஹாங்காங் விமான நிலையம்தான். ஹாங்காங் விமான நிலையத்தில் நேற்று அவர்கள் நுழையும் போது மக்கள் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளித்துள்ளனர். விமான நிலையத்திற்குள் நுழையும் போதே மக்கள் அவர்களை கைத்தட்டி வரவேற்றுள்ளனர்.
|
என்ன வீடியோ
அவர்கள்தான் எங்கள் ஹீரோக்கள். சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து அவர்கள்தான் எங்களை விடுவிக்கிறார்கள். அவர்களை நாங்கள் மிகவும் மதிக்கிறோம், அவர்கள் நிஜ சூப்பர் ஹீரோக்கள் என்று ஹாங்காங் மக்கள் தெரிவித்துள்ளனர். போராட்டம் செய்பவர்களுக்கு ஹாங்காங் மக்கள் கொடுக்கும் இந்த வரவேற்பு சீனாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications