ஹாங்காங்கை அலறவிடும் கொரோனா.. இதுவரை இல்லாத உச்சத்தில் வைரஸ் பாதிப்பு & உயிரிழப்பு..இது தான் காரணம்
ஹாங்காங்: உலகெங்கும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஹாங்காங் பிராந்தியத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
உலகில் கொரோனா பரவல் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தொடக்கத்தில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியது என்றால், பின்னர் ஆல்பா, டெல்டா, போன்ற உருமாறிய கொரோனா தீவிர பாதிப்பை ஏற்படுத்தியது.
இவை எல்லாம் முடிந்த பின்னர், திடீரென கடந்த நவ. மாதம் தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் கொரோனா பரவியது. இது மற்ற கொரோனா வகைகளைக் காட்டிலும் மிக வேகமாகப் பரவியது.

தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய இந்த ஓமிக்ரான் தான் இந்தியாவில் 3ஆவது அலையை ஏற்படுத்தியது. அந்தச் சமயம் தினசரி கொரோனா பாதிப்பு சில லட்சம் வரை சென்றன. ஓமிக்ரான் மின்னல் வேகத்தில் பரவும் திறமை கொண்டிருந்தாலும், அது லேசான பாதிப்பையே ஏற்படுத்தும் என்பதால் ஓமிக்ரான் கொரோனாவால் உயிரிழப்புகள் பெரிதாக ஏற்படவில்லை. அதேபோல மறுபுறம் கொரோனா வேக்சின் பணிகளும் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் கொரோனா வைரஸ் தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வருகிறது.

ஹாங்காங்
இருப்பினும், சீனா, ஹாங்காங் போன்ற நாடுகளில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக ஹாங்காங் பகுதியில் வைரஸ் பாதிப்பு மீண்டும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஹாங்காங்கில் இப்போது ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு மீண்டும் 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதேபோல உயிரிழப்புகளும் சீனாவில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. சீனா மெயின்லேன்டை காட்டிலும் இப்போது ஹாங்காங் பகுதியில் கொரோனா உயிரிழப்பும் அதிகரித்து வருவது அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

கொரோனா பாதிப்பு
ஹாங்காங் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 20,079 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹாங்காங் பகுதியில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,16,944 ஆக உள்ளது. ஹாங்காங்கில் கடந்த டிச. மாதம் புதிய வைரஸ் அலை ஏற்பட்டது. ஹாங்காங்கில் தற்போது ஏற்பட்ட பாதிப்பில் சுமார் 97% இந்த அலையில் இருந்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாங்காங் மெயின்லேன்ட்
அதேபோல கடந்த பிப்.9 முதல் மட்டும் அங்கு 5200 போர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். சீனா மெயின்லேன்டில் இதுவரை 4,636 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், ஹாங்காங் பிராந்தியத்தில் அதைவிடக் கூடுதலாக 5,401 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சீன அரசின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, அங்கு இதுவரை 1.26 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அங்கு அறிகுறியற்ற கொரோனா நோயாளிகள் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களாகக் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன காரணம்
ஓமிக்ரான் பரவல் ஏற்பட்ட பின்னர் தான் ஹாங்காங்கில் வைரஸ் பாதிப்பு மிகத் தீவிரமாகப் பரவ தொடங்கியது. மொத்தம் 74 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட ஹாங்காங்கில் ஒரு கட்டத்தில் மருத்துவமனைகளில் கூட கொரோனா நோயாளிகளுக்கு இடம் அளிக்க முடியாத சூழலும் கூட எட்டியது. அதேபோல கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களை அப்புறப்படுத்துவதில், மயானத்திலும் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும், கொரோனா வேக்சின் செலுத்தாதவர்களே இப்போது கொரோனாவால் அதிகம் உயிரிழப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜீரோ கோவிட்
உலகில் பெரும்பாலான நாடுகள் கொரோனா உடன் சேர்ந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்துவிட்டன. ஆனால், சீனா உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே ஜீரோ கோவிட் திட்டத்தைப் பின்பற்றுகிறது. ஹாங்காங் கூட இதே ஜீரோ கோவிட் திட்டத்தைப் பின்பற்றியது. அதாவது ஒரு சிலருக்கு கொரோனா ஏற்பட்டாலும் தீவிர கண்காணிப்பு, சோதனை அமல்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால், ஓமிக்ரான் அலை பின்னர் ஜீரோ கோவிட் திட்டத்தைக் கைவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications