Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"எனது கணவரை கொன்றுவிட்டனர்.." இந்தியருக்கு சிகிச்சை தராமல் அலைக்கழித்த கனடா மருத்துவமனை! மனைவி வேதனை

Subscribe to Oneindia Tamil

ஒட்டாவா: கனடா நாட்டில் வசித்து வந்த இந்தியருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை தராமல் 8 மணி நேரம் காக்க வைத்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே அன்றைய தினம் மருத்துவமனையில் என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களை அவரது மனைவி பகிர்ந்துள்ளார், உரிய நேரத்தில் சிகிச்சை கொடுக்காமல் மருத்துவமனை நிர்வாகமே கொன்றுவிட்டதாகவும் சாடியுள்ளார்.

இந்தியர்கள் கணிசமானோர் கனடாவில் வசித்து வருகிறார்கள். அப்படி கனடாவில் வசித்து வந்தவர் தான் 44 வயதான பிரசாந்த் ஸ்ரீகுமார்.. இவருக்குச் சமீபத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டனர். இருந்த போதிலும், அவருக்கு உடனடியாகச் சிகிச்சை ஆரம்பிக்கவில்லை. சுமார் 8 மணி நேரம் அவரை காக்க வைத்துள்ளனர். இறுதியில் சிகிச்சைக்கு அழைத்தபோது அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Hospital Killed Him Prashant Sreekumar s Wife Niharika Recalls Harrowing 8-Hour ER Wait in Canada

நெஞ்சு வலி

கனடாவின் எட்மண்டனில் உள்ள கிரே நன்ஸ் மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நெஞ்சு வலி என வந்தவருக்கு மாரடைப்பு அறிகுறிகளும் இருந்துள்ளன. அவருக்கு உடனடியாகச் சிகிச்சை தராமல் 8 மணி நேரம் காக்க வைத்தது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே அவரது மனைவி நிஹாரிகா ஸ்ரீகுமார், எட்டு மணி நேரக் காத்திருப்பின்போது தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் சந்தித்த வேதனையை விவரித்துள்ளார்.

மனைவி புலம்பல்

கடந்த டிசம்பர் 22 மதியம் 12 மணியளவில் பிரசாந்த் ஸ்ரீகுமாருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், அவர் மதியம் 12:20 மணியளவில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாகவும் நிஹாரிகா கூறினார்.. இது தொடர்பாக அவர் மேலும், "டிசம்பர் 22ம் தேதி மதியம் 12:20 மணி முதல் இரவு 8:50 மணி வரை வெயிட்டிங் பகுதியில் காக்க வைத்தனர். அந்த நேரத்தில் நெஞ்சு வலி அதிகரித்துக் கொண்டே போவதாக பிரசாந்த் தொடர்ந்து சொல்லி வந்தார். அவரது ரத்த அழுத்தமும் கூட தொடர்ந்து அதிகரித்தது. இறுதியாக 210 வரை அவரது ரத்த அழுத்தம் உயர்ந்தது" என்றார்.

பொதுவாக ரத்த அழுத்தம் 120/80 mmHg என்ற அளவிலேயே இருக்க வேண்டும். ஆனால், நெஞ்சு வலி மற்றும் அது தொடர்பாக ஏற்பட்ட உடல்நலக்குறைபாடு காரணமாக பிரசாந்த்தின் ரத்த அழுத்தம் 210 வரை போய் இருக்கிறது. 8 மணி நேரம் காத்திருந்ததால் நெஞ்சு வலியால் அவர் துடித்த நிலையில், அப்போது அவருக்கு "டைலெனால்" மாத்திரைகளை மட்டும் கொடுத்துள்ளனர். வேறு எந்தவொரு சிகிச்சையும் தரவில்லை என்றும் நிஹாரிகா தெரிவித்தார்

கண்டு கொள்ளவே இல்லை

இவர் மேலும், "நெஞ்சுவலி அதிகரித்துக் கொண்டே போவதாக அவர் சொன்னார். ஆனால், அவர்கள் அதைக் கண்டு கொள்ளவே இல்லை.. மாரடைப்பாக இருக்கலாம் என்று கூட யோசிக்கவில்லை.. எட்டு மணிநேரத்திற்கும் மேலாகக் காத்திருந்தோம். அதன் பிறகே சிகிச்சைக்கு அழைத்தனர். அங்கு அவரை உட்காரும்படி கூறினர். மருத்துவரைப் பார்க்க எழுந்தபோது, திடீரெனச் சரிந்து விழுந்தார். அவர் மயக்கமடைந்தார். அப்போது அவரை பரிசோதனை செய்த செவிலியர்கள் அவருக்கு நாடித்துடிப்பு இல்லை என்று சொல்வது கேட்டது..

கொன்றுவிட்டனர்

அப்போது எல்லா நர்ஸ்களும் ஓடி வந்தனர். அவசர சிகிச்சை கொடுக்க முயன்றனர். இருப்பினும், எதுவும் பலன் தரவில்லை. கிரே நன்ஸ் மருத்துவமனை நிர்வாகமும் ஊழியர்களும்தான் எனது கணவர் பிரசாந்த் ஸ்ரீகுமாருக்கு உரிய நேரத்தில் மருத்துவ உதவி வழங்காமல் அவரைக் கொன்றுவிட்டனர்" என்று குற்றஞ்சாட்டினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+