16 மணி நேரம் திக் திக்! கையில் துப்பாக்கி.. காருடன் ஏர்போர்ட்டுக்குள் புகுந்த நபர்..அதிர்ந்த ஜெர்மனி
பெர்லின்: ஜெர்மனியில் விமான நிலையத்திற்குள் காருடன் புகுந்து 16 மணி நேரம் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட நபரை போலீசார் கைது செய்தனர். அந்த நபரின் 4-வயது மகளையும் பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் தனது 4-வயது மகளை பிணைக்கைதியாக வைத்துக்கொண்டு 16 மணி நேரம் ஹம்பர்க் விமான நிலையத்தில் போக்கு காட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:- ஜெர்மனி நாட்டின் ஹாம்பர்க் நகரில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தை நோக்கி அசுர வேகத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

துப்பாக்கியால் சுட்டார்: பாதுகாப்பு அதிகாரிகள் அல்ர்ட் ஆவதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் விமான நிலையத்தின் பாதுகாப்பு நுழைவு வாயிலை காரால் இடித்துக் கொண்டு மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்தார். இதனால், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காருக்குள் இருந்தபடி வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட அந்த நபர் தனது 4-வயது மகளுடன் காரை நேராக விமானத்திற்கு கீழே பார்க் செய்தார்.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர் உடனடியாக விமான நிலையத்தை சுற்றி வளைத்தனர். விமான நிலையத்தில் பாதுகாப்பு கருதி அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகளும் கடும் அவதி அடைந்தனர். விமான நிலையத்தில் பெரும் பரபரப்பும் தொற்றிக்கொண்டது. மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தனது மகளை அழைத்து கொண்டு விமான நிலையத்தில் புகுந்துள்ளதாக போலீசார் முதல் கட்ட விசாரணைக்கு பிறகு தெரிவித்தனர்.
16 மணி நேரம் பேச்சுவார்த்தை: விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதோடு, பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டு இருப்பதால் பயணிகளிடையே பெரும் அச்சம் நிலவியது. தொடர்ந்து விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த நபருடன் பல மணி நேரம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. உளவியல் நிபுணர்களும் அந்த நபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கிட்டதட்ட 16 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு தனது மகளை விட்டு விட்டு அந்த நபர் வெளியேறினார். இதையடுத்து 4-வயது சிறுமியை பத்திரமாக மீட்ட பாதுகாப்பு படையினர் விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து பீதியை ஏற்படுத்திய நபரை கைது செய்தனர். இதனால், ஜெர்மனியில் 16 மணி நேரம் நீடித்த பெரும் பரபரப்பு முடிவுக்கு வந்தது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications