பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவால் புற்றுநோய் வரலாம்... உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
நியூயார்க்: பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி போன்ற சில அசைவ உணவுகளால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக உலக சுதாகார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகின் பெரும்பாலான நாடுகளில் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக குடல் புற்றுநோய் பல மடங்கு அதிகரித்துள்ளது உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் முறையற்ற உணவுப் பழக்கவழக்கமே ஆகும்.
அதன் தொடர்ச்சியாக குடல் புற்றுநோய் குறித்து 10 நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விஞ்ஞானிகள் தங்களது ஆராய்சி முடிவை உலக சுகாதார அமைப்பிடம் தாக்கல் செய்தனர்.

குடல் புற்றுநோய்...
அதில், குடல் புற்றுநோய்க்கு கடைகளில் விற்பனையாகும் பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி, சாஸ்ஜேஜ் போன்றவற்றை உண்பதே முக்கிய காரணம் என சுட்டிக் காட்டப்பட்டது. இதனால், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சிகரெட், மது ஆகியவற்றின் பட்டியலில் பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சியும் சேர்ந்துள்ளது.

பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி...
பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி உள்ளிட்ட பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் மாமிசங்கள் உடலுக்கு கேடு விளைவிக்க கூடியது மட்டுமல்ல, புற்றுநோய் வரும் வாய்ப்பையும் அதிகரிக்கிறது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

சிவப்பு நிற இறைச்சி...
மேலும், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சிவப்பு நிற இறைச்சிகளில் புற்றுநோய் உண்டாக்கும் வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

விமர்சனம்...
ஆனால், இந்த ஆய்வின் முடிவை இறைச்சி தொழில் நிறுவனங்கள் விமர்சித்துள்ளன. வெறும் கோட்பாடு அளவிலான ஆபத்துகளையும் இந்த ஆய்வு கணக்கில் சேர்த்துள்ளதாக அவை வாதிடுகின்றன.

அறிவுரை...
அதேசமயம், இறைச்சிகளால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்களையும் மறுக்க முடியாது எனத் தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், ‘இதற்காக உடனடியாக அனைவரும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் எனக் கூறவில்லை. அதற்குப் பதில் அதிகப்படியாக எடுத்துக் கொள்ளும் அத்தகைய உணவுகளின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்' என அறிவுரை கூறுகின்றனர்.

உயிரிழப்போர் எண்ணிக்கை...
பர்கர், பன்றி இறைச்சி உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட இறைச்சி உள்ளிட்டவற்றின் அதீத பயன்பாட்டால் ஏற்படும் நோய்க்கு பிரிட்டனில் ஆண்டு ஒன்றிற்கு 1,50,000 பேர் பலியாகி வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications