வீடு வாங்கினால் மனைவி ப்ரீ - வலைதளங்களில் வைரலான விளம்பரம்

Subscribe to Oneindia Tamil

ஸ்லிமான்: ஒரு பொருள் வாங்கினால் இலவசமாக கொடுப்பது மார்க்கெட்டிங் ட்ரெண்ட். ‘வீடு விற்பனைக்கு... மனைவி இலவசம்' என இந்தோனேசியாவில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இரண்டு படுக்கை அறை, இரு குளியல் அறை, வாகன நிறுத்துமிடம் என்று சாதாரண வீடு விற்பனைக்கான விளம்பரம் போல தொடங்கும் அந்த இணையதள விளம்பரம், கடைசியில் "ஒரு அரிய வாய்ப்பு" இந்த வீட்டை வாங்குபவர் அதன் உரிமையாளரிடம், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. அத்துடன் வீட்டின் உரிமையாளரான 40 வயது நிரம்பிய வீனா லியாவின் புகைப்படமும் வெளியாகி இருந்தது. இது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

House for sale in Indonesia with free wife

வீடு விற்க எப்படி எல்லாம் விளம்பரம் செய்றாங்கப்பா என்று யோசிக்கிறீர்களா? ஆனால் இது புரோக்கரின் வேலை என்பது பின்னர்தான் தெரியவந்துள்ளது.

மோசடி விளம்பரமா?

வீடு விளம்பரத்தை ஊடகங்களும் அவர் வீட்டை நோக்கி படை எடுத்தன. அந்நாட்டு போலீசாரும் இது மோசடி விளம்பரமாக கருதி லியாவை அணுகினர். அப்போதுதான் இது எல்லாம் லினாவின் நண்பரான ரியல் எஸ்டேட் புரோக்கரின் வேலை என்று தெரிந்தது.

ரியல் எஸ்டேட் நண்பர்

போலீசாரிடம் இத்தகைய விளம்பரத்தை தான் வெளியிட கூறவில்லை என்று கூறிய லினா, தனது ரியல் எஸ்டேட் நண்பரிடம் வீட்டை விற்பது குறித்து விளம்பரப்படுத்துங்கள். அதே சமயம் வீட்டை வாங்க விருப்பமுள்ளவர், திருமணம் ஆகாதவராகவோ அல்லது மனைவியை இழந்தவராகவோ இருப்பதுடன், மனைவியையும் தேடுபவராக இருந்தால் தனக்கு தெரியப்படுத்துங்கள் என்று கூறியதாகவும் லினா போலீசாரிடம் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை நடத்தலாம்

அவ்வாறு யாராவது வீட்டை வாங்க முன்வந்தால் விதவையாக இருக்கும் தானும் அந்நபருடன் பேச்சுவார்த்தை நடத்த ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்தாகவும் லினா கூறியுள்ளார். ஆனால் ஒரு போதும் இந்த விவரத்தை ஆன் லைனில் வெளியிடுமாறு தான் கூறவில்லை என்று லினா கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+