"புருஷன் ஷேரிங்.." தெறிக்கவிடும் இரட்டை அழகிகள்.. காரணத்தை கேட்ட ஷாக் ஆவீங்க! இது புதுசா இருக்கே
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரட்டை அழகிகளின் செயல் தான் இப்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு இரட்டை அழகிகள் வித்தியாசமான முயற்சியைக் கையில் எடுத்துள்ளனர். அவர்களது செயல் ஒட்டுமொத்த இணையத்திலும் பேசுபொருளாகியுள்ளது.
இரட்டையர்கள் எப்போதும் ஒரே வேலையையே செய்வார்கள்.. ஆடை, உணவு என்று அனைத்தையும் ஒரே போன்றே அணிவார்கள். இதனால் பல நேரங்களில் இரட்டையர்களில் யார் யார் என்பது கூட தெரியாது.
நம்ம ஊரிலேயே இதுபோல நிச்சயம் பல இரட்டையர்களைப் பார்த்து இருப்போம். அவர்கள் அனைத்தையும் ஷேர் தான் செய்வார்கள். ஆனால், ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்த இரட்டையர்கள் அனைவரையும் மிஞ்சிவிட்டனர்.

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்த இரட்டையர்கள் ஆடைகள், உணவு தொடங்கிக் குளிக்கச் செல்வது தூங்கச் செல்வது வரை அனைத்தையும் ஒன்றாகத் தான் செய்வார்கள். இவர்களின் அன்றாட வாழ்க்கையை வீடியோவாக டிக்டாக்கில் பதிவிட்டுப் பிரபலமாகவும் ஆகிவிட்டார்கள். இந்த ஆஸ்திரேலியா இரட்டை அழகிகள் இப்போது அடுத்த கட்டத்திற்கே சென்றுவிட்டார்கள் எனச் சொல்லலாம். ஆமா.. இருவரும் ஒன்றாகச் சேர்ந்து ஒரே நேரத்தில் கர்ப்பமடைய முயல்கிறார்களாம். இதில் மற்றொரு சுவாரசியமும் உள்ளது. அதையும் பார்க்கலாம்.

இரட்டை அழகிகள்
இரட்டையர்கள் இருக்கும் உலகம் தனித்துவமானது. ஏனெனில் பிறக்கும் முன்பிருந்தே அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு பிணைப்பு ஏற்படுகிறது. அப்படி நல்ல பிணைப்பைக் கொண்ட ஆஸ்திரேலியாவில் பெர்த்தை சேர்ந்த அழகிகள் அன்னா மற்றும் லூசி டெசின்க்.. 37 வயதான இந்த இரட்டை அழகிகள் ஒரே நேரத்தில் கர்ப்பமடைய முயல்கிறார்கள். இது என்ன பெரிய விஷயம். பல இரட்டையர்கள் இதேபோல செய்துள்ளனரே என்று நீங்கள் கேட்கலாம்.

ஒரே நேரத்தில் கர்ப்பம்
இவர்கள் ஒரே நேரத்தில் ஒரே நபர் மூலம் கர்ப்பமடைய முயல்வதே நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. அண்ணாவும் லூசியும் தங்கள் இரட்டையர்கள் உறவை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்கிறார்கள்.. இது குறித்து நியூயார்க் போஸ்டிற்கு அவர்கள் அளித்த பேட்டியில், "அவர் டாய்லெட் சென்றால்..நானும் உடன் செல்வேன். அவர் குளிக்கச் சென்றாலும் நான் கூட செல்வேன். நீங்கள் எதை வேண்டுமானாலும் கேளுங்கள்.. நாங்கள் அத்தனை விஷயங்களையும் ஒன்றாகவே செய்வோம். நாங்கள் ஒருபோதும் பிரிந்திருக்க மாட்டோம்.

பிரியவே மாட்டோம்
ஒருவரையொருவர் இல்லாமல் எங்களால் செயல்பட முடியும் என்று நான் நினைக்கவில்லை. இருவரும் பிரிந்தாலே எங்களுக்கு ஒருவித அச்ச உணர்வு வந்துவிடும். இருவரும் ஒன்றாக இருந்தால் மட்டுமே மகிழ்ச்சியாக இருப்போம்" என்றார். இந்த வினோதமான இரட்டை அழகிகள் குறித்துப் பல சர்வதேச ஊடகங்களிலும் பல நிகழ்ச்சிகள் ஏற்கனவே வந்துள்ளனர். அதில் இருவரும் ஒரே நேரத்தில் கருவுற முயல்வது குறித்தும் ஏன் இந்த முடிவை எடுத்துள்ளனர் என்பது குறித்த தகவல்களும் இடம்பெற்றது.

உடல் வெப்பம்
அவர்கள் மேலும் கூறுகையில், "உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது, உங்கள் கருமுட்டை வெளியேறும் என்பதை நாங்கள் இணையத்தில் தெரிந்து கொண்டோம். இப்போது எங்கள் இருவருக்குமே அதேபோல உள்ளது. அதாவது இருவருமே ஒரே நேரத்தில் கருமுட்டையை வெளியேற்றுகிறோம். இது சரியான நேரமாக இருக்கும் என நினைக்கிறோம். இப்போது நாங்கள் ஒரே நபர் மூலம் கர்ப்பமடைய முயல்கிறோம். இதுவரை நாங்கள் அனைத்தையும் ஒரே போலச் செய்தோம். இந்த விஷயத்தையும் நிச்சயம் ஒன்றாகவே செய்வோம்" என்று தெரிவித்தார்.

முயல்கிறோம்
இதற்காக இவர்கள் இருவரும் ஒரே நபரை இப்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஒரே நேரத்தில் கர்ப்பமடைவது கஷ்டமாக இருப்பதாகத் தெரிவித்த அவர்கள், இருந்த போதிலும் இதற்குத் தொடர்ந்து முயன்று வருவதாகவும் தெரிவித்தனர். இது மட்டுமின்றி இருவருக்கும் இரட்டையர்கள் பிறந்தால் 4 குழந்தைகளையும் எப்படிப் பராமரிக்க வேண்டும் என்பது குறித்தும் இப்போதே டிரய்னிங் எடுக்கத் தொடங்கிவிட்டார்களாம் இந்த ஜோடி.












Click it and Unblock the Notifications