"எப்புட்றா.." வெறும் 3 செகண்ட் ரிவ்யூ! ஒவ்வொரு வாரமும் 120 கோடியை அள்ளும் பெண்! இது எப்படி சாத்தியம்
பெய்ஜிங்: சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு பொருளையும் வெறும் ஒரு சில நொடிகள் மட்டுமே விளம்பரப்படுத்தி, அதன் மூலமாகவே ஒருவர் பல கோடியை அள்ளியுள்ளார். யார் அவர்.. எப்படி இதுபோல அவரால் செய்ய முடிந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த நவீன உலகில் ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேர் தினசரி வீடியோக்களை உருவாக்கி அதை யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள்.

அதில் இருந்து அவர்களுக்குக் கணிசமான வருவாயும் கிடைப்பதால் தொடர்ந்து பலரும் இதில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இருப்பினும், அனைவருக்கும் பெருந்தொகை வருமானமாகக் கிடைக்காது.
யுக்தி: ஆனால், எதாவது ஒரு சில வீடியோக்கள் க்ளிக் ஆகிவிட்டால் போதும்.. அதன் பிறகு வருவாய் கொட்ட ஆரம்பிக்கும்.. ஒரு சிலருக்குப் பல கோடி வரை கூட வருமானம் கிடைக்கும். அப்படி தான் சீனாவைச் சேர்ந்த சமூக வலைத்தள பிரபலம் ஜெங் சியாங் என்பவருக்குக் கோடிக் கணக்கில் வருமானம் கொட்டியுள்ளது. ஆன்லைன் புரமோஷனில் அவரது யுக்தி தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அவருக்குச் சீனாவின் டிக்டாக் வெர்ஷன் ஆன டூயின் தளத்தில் 50 லட்சம் பாலோயர்ஸ் உள்ளனர். அவர்களுக்குப் பொருட்களை விளம்பரப்படுத்துவதில் தான் சியாங் புது யுக்தியைக் கையாண்டுள்ளார். அப்படி என்ன தான் செய்கிறார் என்று கேட்கிறீர்களா.. வாங்கப் பார்க்கலாம்.
சில நொடிகள்: பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் உள்ள பிரபலங்கள் விளம்பரங்கள் என்று வந்தாலே அதைப் பற்றி ஓவராக பேசுவார்கள். அதில் இருக்கும் ஒவ்வொரு சின்ன விஷயங்கள் குறித்தும் விளக்குவார்கள். அவர்களிடம் விளம்பரம் தரும் நிறுவனங்களும் இதைத்தான் எதிர்பார்க்கும். ஆனால் சியாங் அப்படிச் செய்வதில்லை. மாறாக இவர் ஒவ்வொரு பொருள் குறித்தும் மிகச் சில நொடிகள் மட்டுமே விளம்பரப்படுத்துகிறார்.

அதாவது பொருட்களை வெறும் மூன்று நொடிகள் மட்டுமே காட்டும் அவர், அது குறித்து ஓரிரு வார்த்தைகளும் சொல்கிறார். இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் அவர் சில நிமிடங்களில் ஏகப்பட்ட பொருட்களை விளம்பரப்படுத்துகிறார். இந்த ஸ்பீட்டில் போனால் யார் இவருக்கு விளம்பரங்களைத் தருவார் என்று நீங்கள் கேட்கலாம்.
ஆனால், உண்மையில் இவரிடம் விளம்பரப்படுத்தப் பலரும் விரும்புகிறார்களாம். சில நொடிகள் மட்டுமே பொருட்களைக் காட்டினாலும் அது பார்வையாளர்களிடையே நல்ல எபெக்ட் இருப்பதாகவும் இதனால் விற்பனையும் அதிகரிப்பதாகவும் பல நிறுவனங்கள் கூறுகின்றனர். இதனால் பல நிறுவனங்கள் சியாங்கிடம் விளம்பரப்படுத்தவே விரும்புகிறார்களாம்.
120 கோடி ரூபாய்: இதன் மூலம் அவருக்கு ஒவ்வொரு வாரமும் 14 மில்லியன், அதாவது 120 கோடி ரூபாய் வருமானமாகக் கிடைக்கிறது. இவரது இந்த மின்னல் வேக அணுகுமுறை இன்ஃப்ளூயன்ஸர் மார்க்கெட்டிங் ரூல்ஸை எல்லாம் அடித்து நொறுக்குவதாக இருக்கிறது. அதேநேரம் முன்பே சொன்னது போல இவை மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. அவர் விளம்பரப்படுத்தும் அனைத்து பொருட்களின் விற்பனையும் அதிகரித்தே இருக்கிறது.
என்ன காரணம்: இந்த டிஜிட்டல் உலகில் பார்வையாளர்கள் கவனம் செலுத்துவது தொடர்ந்து குறைந்தே வருகிறது. அதிலும் இப்போது இருக்கும் இளைஞர்களால் சில நிமிடங்கள் கூட ஒரு விஷயத்தில் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்த முடிவதில்லை. இவரது யுக்தி ஒர்க் அவுட் ஆக இதுவே காரணமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications