தெலுங்கு நடிகைகளை ஏமாற்றி பாலியல் தொழிலில் உட்படுத்திய ஆந்திர தம்பதி.. திடுக்கிடும் வாக்குமூலம்
அமெரிக்காவை சேர்ந்த ஆந்திர தம்பதிகள், தெலுங்கு சினிமா நடிகைகளை ஏமாற்றி பாலியல் தொழில் செய்ய வைத்தது எப்படி என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video

சிகாகோ: அமெரிக்காவை சேர்ந்த ஆந்திர தம்பதிகள், தெலுங்கு சினிமா நடிகைகளை ஏமாற்றி பாலியல் தொழில் செய்ய வைத்தது எப்படி என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க போலீஸ் விசாரணையில் அவர்கள் பல உண்மைகளை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவில், தெலுங்கு சினிமா நடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த ஆந்திர தம்பதிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.ஆந்திராவை சேர்ந்த கிஷான் மோடுகுமூடி மற்றும் சந்திரா ஆகிய இருவரும்தான் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
கிஷான் வியாபாரம் செய்து வருகிறார். அவர் மனைவி சந்திரா, கணவனின் வருமானத்தை சினிமாவில் முதலீடு செய்கிறார். தெலுங்கு சினிமாவில் இவர்கள் பல வருடமாக வேலை பார்த்து வருகிறார்கள்.

பாலியல் தொழில்
இவர்கள் அமெரிக்காவிற்கு சில தெலுங்கு நடிகைகளை அழைத்து வந்து பாலியல் தொழிலுக்கு அனுப்பி இருக்கிறார்கள். அதேபோல் பாலியல் படங்கள் எடுக்கவும் அந்த பெண்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத நடிகைகளை இவர்கள் கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள். சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக அழைத்துவிட்டு, பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள்.

எப்படி நடத்தினார்கள்
இவர்கள் முதலில் வெளிநாட்டிற்கு ஷூட்டிங் வரும் தென்னிந்திய நடிகைகளிடம் வலை வீசி இருக்கிறார்கள். நேரடியாக பெரிய நடிகைகளிடம் பேச முடியாது என்பதால், சிறிய சிறிய நடிகைகளிடம் இவர்கள் பேசி, அவர்களை தங்கள் நிறுவன படங்களில் நடிக்க வேண்டும் என்றுள்ளனர். கடைசியில் அவர்கள் ஒப்புக்கொண்ட பின் சில நாட்களில் மனதை மாற்றி பாலியல் தொழில் இறங்க வைக்கிறார்கள்.

எல்லாம் பொய்
இவர்கள் இதற்காக உண்மையான சினிமா நிறுவனம் போலவே செயல்பட்டு இருக்கிறார்கள். இதற்காக, தெலுங்கில் சினிமா நிறுவனம் என்று பெயர் பதிந்து, அதனுடைய அமெரிக்க கிளை என்று அமெரிக்காவில் பதிந்து, பின் அந்த லெட்டர் பேட்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி இருக்கிறார்கள். இவ்வளவு வருடமாக யாருக்கும் தெரியாமல் இப்படித்தான் அவர்கள் பாலியல் தொழில் நடத்தி உள்ளனர்.

எத்தனை
பெரும்பாலும் முன்னணி நடிகைகள் யாரும் இவர்களின் வலையில் விழவில்லை. ஆனால் சில சிறிய நடிகைகள் வாய்ப்பிற்கு ஏங்கி, இவர்களிடம் ஏமாந்தது தெரிய வந்துள்ளது. கடந்த 3 வருடமாக இவர்கள் இது போன்ற மோசமான வேலையை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. போலீஸ் இப்போது இவர்களை விசாரித்து வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications