ரஷ்யாவின் கதையை முடித்த சீனா.. ஜி ஜின்பிங்கின் மாஸ்டர் மூவால் வசமாக சிக்கிய புதின்.. என்ன நடக்குது?
மாஸ்கோ: ஏற்கனவே உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யா கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அமெரிக்கா உள்பட பல நாடுகளின் பொருளாதார தடைகளை எதிர்கொண்டு வருகிறது. இப்படியான சூழலில்தான் சீனாவின் ஆட்டோமொபைல் துறையால் ரஷ்யா புதிய பிரச்சனையை சந்தித்து வருகிறது. இதனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புதிய சிக்கலில் சிக்கி உள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியது. 3 ஆண்டுகளை கடந்தும் இந்த போர் இன்று வரை தொடர்ந்து வருகிறது. போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க உக்ரைன் போரால் ரஷ்யாவுக்கு அதிக செலவு ஏற்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் தான் சீனாவால், ரஷ்யாவுக்கு புதிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விரைவில் நெருக்கடியை ஏற்படுத்த உள்ளது. சீனாவால், ரஷ்யா எதிர்கொள்ளும் சிக்கல் என்னவென்று இங்கு பார்ப்போம்.
அதாவது ரஷ்யாவை எடுத்து கொண்டால் மிகப்பெரிய கார் நிறுவனமான அவ்டோவாஸ் (AVtoVAZ) உள்ளது. இது லாடா கார்களுக்கு புகழ்பெற்ற நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் ஏராளமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு வாரம் 5 நாட்கள் பணி வழங்கப்படும். இப்போது பணி நாட்கள் 5ல் இருந்து 4 ஆக குறைக்க திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்த நடைமுறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதனால் ரஷ்யாவில் அவ்டோவாஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் வாரத்தில் ஒரு நாள் வேலையிழப்பை எதிர்கொள்ள உள்ளனர். ஒரு மாதத்துக்கு 4 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை வேலையில்லாத நிலை அவர்களுக்கு உருவாகும். இந்த நிறுவனத்தில் மொத்தம் 30,000 பேர் வரை பணியாற்றி வருகின்றனர். இதனால் ரஷ்யாவின் பொருளாதாரத்திலும், பணியாளர்களின் முன்னேற்றத்திலும் இந்த நிறுவனம் பெரும் பங்காற்றி வந்த நிலையில் இப்போது இந்த முடிவை எடுத்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் சீனாவின் ஆதிக்கம் தான். அதாவது ரஷ்யாவின் ஆட்டேமொபைல் துறையில் சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உக்ரைன் மீதான போர் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறின. மேலும் அந்த நாடுகளிடம் இருந்து கார்கள் ரஷ்யாவுக்கு செல்வது இல்லை.
இதனை சாதகமாக்க சீனா ரஷ்யாவின் ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் கால்பதித்தது. ரஷ்யாவும், சீனாவும் நட்பு நாடுகள் என்பதாலும் புதினும் அனுமதித்தார். ஆனால் தற்போது சீனாவின் கார்கள் ரஷ்யாவின் ஆட்டோமொபைல் துறையை விழுங்க தொடங்கிவிட்டது.
ரஷ்யாவுக்கு தற்போது சீனாவில் இருந்து அதிகப்படியான கார்கள் செல்கின்றன. ரஷ்யாவின் கார்களை விட சீனாவின் கார்களின் விலை குறைவாக உள்ளது. இதனால் பலரும் சீனா தயாரிப்பு கார்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ரஷ்யாவின் கார் மார்க்கெட்டில் தற்போது 50 சதவீதத்தை சீன நிறுவனங்கள் தக்க வைத்துள்ளன.
இதுதவிர தற்போது ரஷ்யாவில் கார் கடன்களுக்கான வட்டியும் அதிகரித்துள்ளது. இதனால் பல மக்கள் கார் கடன்களை வாங்க யோசிக்கின்றனர். இதனால் நேரடியாக அவ்டோவாஸ் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த நிறுவனம் திவால் நிலையை எதிர்கொண்டது. அப்போது ரஷ்ய அரசு சார்பில் உதவி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் வரும் ராட்சச புதிய மேம்பாலங்கள்.. கண்ணசைத்த டெல்லி.. கொட்டப்படும் பல கோடி ரூபாய் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications