லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரே ஏரியாவில்.. எல்லா வீடுகளும் சாம்பல் ஆக.. ஒரு வீடு மட்டும் தப்பித்தது எப்படி?
கலிபோர்னியா: கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் எல்லா வீடுகளும் சாம்பல் ஆன நிலையில் ஒரு வீடு மட்டும் தப்பித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இதுவரை 24 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்க வரலாற்றில் மிகவும் மோசமான இயற்கை பேரழிவு இது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

1. தொடர்ந்து ஆறு நாட்களாக எரிந்து வரும் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயில் இறந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட எட்டு பேர் பாலிசேட்ஸ் தீ காரணமாகவும், 16 பேர் ஈடன் தீ காரணமாகவும் பலியாகி உள்ளனர்..
2. அமெரிக்காவில் ஏற்பட்டு உள்ள காட்டுத்தீ தெற்கு கலிபோர்னியாவை கபளீகரம் செய்து வருகிறது. 6வது நாளாக அங்கே காட்டுத்தீ பரவிக்கொண்டு இருக்கிறது. அங்கே மொத்தமாக 5 விதமாக காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது. பாலிசேட்ஸ், ஈடன், ஹர்ஸ்ட், லிடியா மற்றும் சன்செட் ஃபயர்ஸ் ஆகிய காட்டு தீ அங்கே ஏற்பட்டு உள்ளது.
3. பாலிசேட்ஸ் தீ: பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் ஏற்படும் காட்டுத்தீயை இது குறிக்கும்., லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அருகிலுள்ள கடலோர நிலப்பரப்பு ஆகும் இது. இங்கே இப்போது கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது. ஈட்டன் ஃபயர்: கலிபோர்னியாவின் தெற்கு பகுதிகளில் உள்ள ஈட்டன் Canyon அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீயை இது குறிக்கும் ஹர்ஸ்ட் ஃபயர்: ஹர்ஸ்ட் பகுதியில் அல்லது அதற்கு அருகிலுள்ள இடங்களில் ஏற்படும் காட்டுத்தீயை இது குறிக்கும். லிடியா ஃபயர்: லிடியா பகுதியில் அல்லது அதற்கு அருகிலுள்ள இடங்களில் ஏற்படும் காட்டுத்தீயை இது குறிக்கும். சன்செட் ஃபயர்: Sunset Boulevard அல்லது Sunset Ridge பகுதியில் அல்லது அதற்கு அருகிலுள்ள இடங்களில் ஏற்படும் காட்டுத்தீயை இது குறிக்கும்.
4. 23,600 ஏக்கருக்கு பாலிசேட்ஸ் தீ பரவி உள்ளது. 14,000 ஏக்கர் பரப்பளவில் ஈட்டன் தீ பரவி உள்ளது. இந்த காட்டுத்தீ காரணமாக 29,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் ஏற்கனவே கருகிவிட்டன, மேலும் 2,93,000 குடியிருப்பாளர்கள் வெளியேறி உள்ளனர்.
5. லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில், வெள்ளிக்கிழமை நிலவரப்படி சுமார் 153,000 பேர் வெளியேறி உள்ளனர். மேலும் 166,000 குடியிருப்பாளர்கள் இன்றும் நாளையும் வெளியேறுவார்கள். பசிபிக் பாலிசேட்ஸ் மற்றும் ஈட்டன் தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
6. 10,000 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தீயினால் அழிந்துள்ளன. இவை LA வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான காட்டுத்தீ ஆகும். இன்னும் இந்த தீயால் 1,60,000 பேர் ஆபத்தில் உள்ளனர். சேதமடைந்த சொத்துகளின் அதிக மதிப்பு காரணமாக கிட்டத்தட்ட $8bnக்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீடுகள் சாம்பல்:
கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் எல்லா வீடுகளும் சாம்பல் ஆன நிலையில் ஒரு வீடு மட்டும் தப்பித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி ஒரு குறிப்பிட்ட சிவப்பு நிற வீடு மட்டும் தீ பிடிக்கவில்லை.
அந்த வீட்டின் மீது sprinkler.. அதாவது தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் கருவிகள் வைக்கப்பட்டு உள்ளன. பொதுவாக புல் தரைகளில் வைக்கப்படும் இந்த நீர் பீய்ச்சி அடிக்கும் கருவியை வீடுகளின் மீது வைத்து இருக்கிறார். அதை ஆன் செய்துவிட்டு மோட்டார் போட்டுவிட்டு.. வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனால் அந்த sprinkler தண்ணீர் அடித்தபடி.. இருந்துள்ளது. இதனால் அவர் இருக்கும் பகுதியில் எல்லா வீடுகளும் சாம்பல் ஆகியும் கூட அவர் வீடு மட்டும் சாம்பல் ஆகவில்லை. அவர் வீடு மட்டும் பெரிய தீயில் இருந்து தப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications