அது என்ன போட்டோவில் விசித்திரமாக? யார் அந்த 13வது ஆள்? இம்ரான் ஆட்சிக்கு வேட்டு வைத்த ஒரு புகைப்படம்
இஸ்லாமாபாத்: இம்ரான் கான் ஆட்சி பாகிஸ்தானில் கவிழ உள்ள நிலையில், அவர் பில் கேட்ஸ் உடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இந்த புகைப்படமும் கூட ஒருவகையில் அவர் ஆட்சிக்கு எதிராக திரும்பியது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது. அங்கு இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட பலவேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. பொருளாதார மந்த நிலை காரணமாக சொல்லப்பட்டாலும் இதற்கு பின் அந்நாட்டு ராணுவமும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
பாகிஸ்தான் நாட்டு ராணுவத்திற்கும், இம்ரான் கானுக்கும் கடந்த 6-7 மாதங்களாக நிகழ்ந்து வந்த கடுமையான மோதல்தான் தற்போது அங்கு இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக திரும்பி உள்ளது.

ராணுவ மோதல்
இம்ரான் கான் - பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவேத் பஜ்வா இடையே கடந்த நவம்பரில் இருந்து கடுமையான மோதல் நிலவி வருகிறது. பாகிஸ்தான் நாட்டின் உளவு படை தளபதியாக நதீம் அஞ்சும் கடந்த வருடம் நியமிக்கப்பட இருந்தார். ஆனால் இவரின் நியமனத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போதைய உளவுப்படை தளபதி பைஸ் ஹமீத்தான் தொடர்ந்து இதில் தளபதியாக நீடிக்க வேண்டும் என்று இம்ரான் கான் கருதினார்.

மோதல் - ஆட்சி மாற்ற காரணம்
ஏனென்றால் ஹமீத் 2018 தேர்தலின் போது இம்ரான் கான் வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தார். எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பல்வேறு உளவு தகவல்களை ஹமீத்தான் திரட்டி கொடுத்தார். ஆனால் ராணுவ ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வா இதற்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தார். நதீம் அஞ்சும்தான் புதிய ஐஎஸ்ஐ தலைவராக வேண்டும் என்று அவர் அழுத்தம் கொடுத்தார். இது இவர்களுக்கு இடையில் பெரிய மோதல் ஆனது.

கடும் மோதல்
நதீம் அஞ்சுமிற்கு ஆதரவாக ராணுவ ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வா பல இடங்களில் தொடர்ந்து பேசி வந்தார். ஆனால் இதை மதிக்காமல் இம்ரான் கான் ஹமீதை தொடர்ந்து ஐஎஸ்ஐ தலைவராக செயல்பட அனுமதித்தார். இதை ராணுவ தளபதி விரும்பவில்லை. அங்கு ஐஎஸ்ஐ தலைவரை நியமிக்க பிரதமருக்கு அதிகாரம் உள்ளது. ஆனாலும் ராணுவ தளபதி பரிந்துரையை ஏற்க வேண்டும். இந்த நிலையில் கடைசியில் இம்ரான் கான் ஒரு வழியாக அடிபணிந்து நதீமை ஐஎஸ்ஐ தலைவராக நியமனம் செய்தார். ராணுவத்தின் பேச்சை கடைசியில் இம்ரான் கேட்டார்.

இதுதான் காரணம்
ஆனாலும் இம்ரான் ராணுவம் இடையிலான மோதல் நிற்கவில்லை. இந்த நிலையில்தான் எதிர்க்கட்சிகள் ராணுவத்தின் உதவியோடு இம்ரான் கான் ஆட்சியை கவிழ்க்க இப்போது சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த மோதலுக்கு பின் இம்ரான் ஆட்சியை கவிழ்க்க ராணுவம் கங்கணம் கட்டிவிட்டதாக கூறப்படுகிறது. இம்ரான் கான் ஆட்சி பாகிஸ்தானில் கவிழ உள்ள நிலையில், அவர் பில் கேட்ஸ் உடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இந்த புகைப்படமும் கூட ஒருவகையில் அவர் ஆட்சிக்கு எதிராக திரும்பியது குறிப்பிடத்தக்கது.

சந்திப்பு
அந்த புகைப்படம்தான் எதிர்க்கட்சிகளுக்கு பெரிய தெம்பை கொடுத்தது என்று கூற வேண்டும். அந்த புகைப்படத்தில் அப்படி என்ன இருந்தது என்று நீங்கள் கேட்கலாம். பில் கேட்ஸ் போலியோ விழிப்புணர்வு நிகழ்விற்காக பாகிஸ்தான் வந்திருந்தார். மொத்தம் 13 பேர் அந்த சந்திப்பில் உடன் இருந்தனர். ஆனால் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் 12 பேர் முகம் மட்டுமே தெரிந்தது. அமைச்சர்கள், இம்ரான் கான் முகம் தெரிய ஒரு இருக்கையில் இருந்தவர் முகம் மட்டும் கணினி மூலம் கண்ணாடி போல மாற்றப்பட்டு இருந்தது.

யார் அது? கேள்வி மேல் கேள்வி
இந்த உருவம் மட்டும் விசித்திரமாக இருந்தது பலரையும் குழப்பத்திற்கு உள்ளாக்கியது. யார் அது என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். போட்டோவில் ஏற்பட்ட ஏதாவது குறைப்பாடாக இருக்குமோ என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். இன்னும் சில அது யாராவது சீக்ரெட் ஆளாக இருக்குமோ என்றும் கேள்வி எழுப்பி இருந்தனர். கடைசியில் அது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பான உளவுப்படையின் புதிய தலைவர் நதீம் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

யார் நீக்க சொன்னது?
இம்ரான் கான் ஒருவருக்கு பதவியை கொடுக்க கூடாது என்று எதிர்த்தாரே அதே நதீம்தான் அவர். இம்ரான் கானுடன் தான் இருப்பதை விரும்பாமல் அவர்தான் அந்த புகைப்படத்தை blur செய்ய சொல்லி இருக்கிறார். இதிலேயே அந்நாட்டு அமைச்சர்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் முக்கியமான சிக்னலாக மாறி உள்ளது. அதாவது ராணுவத்தின் ஆதரவு இம்ரான் கானுக்கு இல்லை. முக்கியமாக உளவுத்துறையின் ஆதரவு இம்ரான் கானுக்கு இல்லை என்று அனைவருக்கும் இந்த புகைப்படம் மூலம் தெரிய வந்தது.

சப்போர்ட்
இம்ரான் கானுடன் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை என்பதை ராணுவம் பறைசாற்றும் வகையில் இந்த போட்டோ அமைந்து இருந்தது. பொதுவாக அங்கு பிரதமருக்கு ராணுவத்தின் ஆதரவு இல்லை என்றால் நீண்ட நாட்கள் ஆட்சியில் இருக்க முடியாது. போதா குறைக்கு இம்ரான் கானுக்கு பொருளாதார ரீதியாக வேறு மக்கள், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு இருந்தது. 2018, 19ல் எல்லாம் இம்ரானுக்கு எதிராக யாரும் வாயை திறக்க முடியாது.
Recommended Video

வேட்டு வைத்தது
அப்படி பேசினால் அவர்களை உடனே ராணுவம் அழைத்து மிரட்டும். எதிர்கட்சித்தலைவராக இருந்தாலும் கூட ராணுவம் கூப்பிட்டு வந்து கேள்வி கேட்கும். ஆனால் கடந்த 10 மாதமாக இம்ரான் கானை ராணுவம் அப்படி ஆதரிக்கவில்லை. இதை புரிந்து கொண்ட எதிர்க்கட்சிகள் இப்போது ஒன்றாக சேர்ந்து உள்ளனர். எதிர்க்கட்சிகளுக்கு ராணுவமும் மறைமுக ஆதரவு அளித்ததாக கூறப்படுகிறது. பாகிஸ்தானில் இன்று நடக்கும் நம்பிக்கை இல்லாத தீர்மான வாக்கெடுப்பில் இம்ரான் கான் தோல்வி அடையவே அதிக வாய்ப்புள்ளது. கூட்டணிகள் ஆதரவு இல்லாததால் பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானின் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில் அவரின் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications