பாக். ராணுவம், எதிர்க்கட்சிகள்.. எல்லோரையும் சொல்லிவைத்து போல்ட் செய்த இம்ரான் கான்! எப்படி நடந்தது?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று ஏகப்பட்ட திருப்பங்கள் நடந்த நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. பிரதமர் இம்ரான் கானின் ஆட்சி தப்பித்துள்ள நிலையில்.. பாகிஸ்தானில் இன்று என்ன நடந்தது? பிரதமர் இம்ரான் கான் எப்படி அரசியல் எதிர்ப்புகளை சமாளித்தார்? என்று பார்க்கலாம்
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட இருந்த நிலையில், நேற்று இம்ரான் கான் இதை பற்றி விரிவாக பேசி இருந்தார். அதில், என்னிடம் ஒரு பிளான் இருக்கிறது. நீங்கள் யாரும் கவலைப்பட கூடாது. நான் சில விஷயங்களை செய்வேன்.
நமக்கு எதிரான சதியை நான் வென்று காட்டுவேன். இது சர்வதேச சதி.. பொறுத்திருந்து பாருங்கள் என்று இம்ரான் கான் குறிப்பிட்டு இருந்தார். அவரின் பிளான்படியே இன்று அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் எதிரணி பேட்ஸ்மேனிடம் சென்று.. இந்த பால் யார்க்கர் போட போகிறேன் முடிந்தால் அடி என்று சொல்வது போல நேற்றே தன்னிடம் பிளான் இருப்பதாக குறிப்பிட்டார்.

என்ன சொன்னார்?
அதன்படியே இன்று அவைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இம்ரான் கான் அவைக்கு வரவில்லை. இதனால் காலையில் கூடிய நாடாளுமன்ற அவை சில மணி நேரங்கள் ஒத்திவைக்கப்பட்டது. பாகிஸ்தானில் முஸ்லீம் லீக் என் கட்சி, பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தனர். அதாவது நவாஸ் ஷெரிப் கட்சி, பெனாசிர் பூட்டோ கட்சி இணைந்து இம்ரானை எதிர்த்தது.

ட்விஸ்ட்
இதையடுத்து காலையிலேயே அவையில் சபாநாயகர் ஏதாவது செய்வார் என்று எதிர்க்கட்சிகள் யூகித்து, அவருக்கு எதிராகவும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். ஆனால் சபாநாயகர் அசாத் குவைசர் இரண்டாம் முறை அவை கூடும் போது அவைக்கே வரவில்லை. மாறாக அவைக்கு துணை சபாநாயகர் குவாஸிம் கான் சுரி இன்று வருகை புரிந்தார். இவர் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட இருந்த நிலையில், அந்த தீர்மானத்தை நிராகரித்தார்.

நம்பர் கேம்
பாகிஸ்தானில் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை. கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான முத்தாஹிதா குவாமி மூவ்மென்ட் ஆதரவை வாபஸ் பெற்றது. அதேபோல் 22 எம்பிக்கள் ஏற்கனவே ஆளும் கட்சியில் இருந்து விலகி உள்ளனர். அங்கு மொத்தம் 342 எம்பிக்கள் உள்ளனர். இங்கு பெரும்பான்மை பெற 172 எம்பிக்கள் தேவை. ஆனால் ஆளும் இம்ரான் கானின் ஆளும் தெஹ்ரிக் கட்சிக்கு 155 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர்.

என்னென்ன எதிர்பார்ப்பு?
இதனால் இன்று மூன்று விதமான எதிர்பார்ப்புகள் இருந்தது.
இம்ரான் ஆட்சி கவிழும் - இம்ரான் கைதாகும் வாய்ப்புகள் இருந்தன.
இம்ரான் ஆட்சி கவிழும் - உடனே தேர்தல் அறிவிக்கப்பட்டு - காபந்து ஆட்சி அறிவிக்கப்படும்.
எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும். முஸ்லீம் லீக் என் கட்சியின் ஷேபாஸ் ஷரீப் தலைமையிலான புதிய கூட்டணி ஆட்சி பதவி ஏற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ரகசிய மீட்டிங்
ஆனால் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்புதான் இம்ரான் கான், சபாநாயகர், துணை சபாநாயகர், சில முக்கிய தலைகளுடன் ரகசிய மீட்டிங் நடத்தினார் என்று கூறப்படுகிறது. இந்த மீட்டிங்கை தொடர்ந்தே இன்று நாடாளுமன்றம் கூடியது. இம்ரான் கான் சொன்னது போலவே தன்னுடைய பிளானை இன்று அவர் களமிறக்கினார். அதன்படி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட இருந்த நிலையில், அந்த தீர்மானத்தை துணை சபாநாயகர் குவாஸிம் கான் சுரி நிராகரித்தார். வாக்கெடுப்பே நடத்தப்படாமல்.. நாடளுமன்றத்தை கலைப்பதே பிளான்.

என்ன சொன்னார்?
இந்த தீர்மானம் சட்டத்திற்கு எதிரானது. பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்ட விதி 5க்கு எதிரானது இது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதன் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி தீர்மானத்தை துணை சபாநாயகர் நிராகரித்து இருக்கிறார். இதில் வெளிநாட்டு சதி இருப்பதால் அதை ஏற்க முடியாது என்று சட்ட விதிகளை குறிப்பிட்டு தீர்மானத்தை நிராகரித்தார் .

எதிர்க்கட்சிகள் நீதிமன்றம்
பாகிஸ்தானில் ஆளும் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் ரத்து செய்துள்ளது ஜனநாயகத்துக்கு எதிரானது என பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவால் பூட்டோ சர்தாரி தெரிவித்துள்ளார். அதோடு எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக அவசரமாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறி தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கலைக்கப்பட்டது
ஆனால் இதை பற்றி எல்லாம் இம்ரான் கான் கவலைப்படவில்லை. உடனே மக்கள் முன் தோன்றி பேசிய இம்ரான், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி ஆரிப் அலிக்கு பரிந்துரை செய்துள்ளேன். புதிதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த பரிந்துரை செய்துள்ளேன். பாகிஸ்தான் மக்களே புதிய அரசை தேர்வு செய்ய வேண்டும். தங்களை யார் நிர்வகிக்க வேண்டும் என்பதை அவர்களே தீர்மானம் செய்ய வேண்டும். இதனால் தேர்தலை புதிதாக நடத்துங்கள். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று துணை சபாநாயகர் எடுத்த முடிவை வரவேற்கிறேன், என்றார்.

கிளைமேக்ஸ்
பிரதமர் இம்ரான் கான் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ஆரிப் அலிவ் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் காபந்து பிரதமராக இம்ரான் கான் நீடிப்பார். அடுத்த 3 மாதங்களில் பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவம், எதிர்க்கட்சிகள் என்று அனைத்தையும் சொல்லிவைத்து இம்ரான் கான் போல்ட் செய்துள்ளார். தன்னுடைய பொது கூட்டங்களில் எல்லாம் தேர்தல் பிரச்சாரம் போல இம்ரான் பேசிய நிலையில்.. இப்போது தேர்தலை அறிவித்துள்ளார். இதற்கு இப்போது ராணுவமும், ராணுவ தளபதி பாஜ்வாவும் எப்படி எதிர்வினையாற்றுவர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications