For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குழம்பில் "முழு பாம்பு தலை".. நடுவானில் அலறிய பயணி.. மாறி மாறி மறுக்கும் கம்பெனிகள்.. நடந்தது என்ன?

பாம்பு தலை சாப்பாட்டில் இருந்ததையடுத்து, கேட்டரிங் கம்பெனி விளக்கம் தந்துள்ளது

Google Oneindia Tamil News

பெர்லின்: பாம்பு தலை சாப்பாட்டில் இருந்த சம்பவம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், இது தொடர்பான சர்ச்சைகளும், கண்டனங்களும், அதையொட்டிய மறுப்புகளும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

Recommended Video

    சாப்பாட்டு தட்டில் கிடந்த ‘பாம்பு தலை’.! மிரண்டு போன பயணி!

    கடந்த 2 நாட்களாக விமானத்தில் வழங்கப்பட்ட உணவு குறித்த செய்திகள் வட்டமடித்து வருகின்றன.. நடந்தது என்ன?

    துருக்கிய - ஜெர்மன் விமான நிறுவனத்தின் பெயர் சன் எக்ஸ்பிரஸ் என்பதாகும்.. இந்த சன் எக்ஸ்பிரஸ் நிறுவன விமானமானது, துருக்கி நாட்டின் அன்காரா நகரிலிருந்து, ஜெர்மனியின் டஸ்ஸல்டார்வ் நகரை நோக்கி கடந்த 21-ம் தேதி சென்றது.

    பறக்கும் விமானத்தில் நடந்த உவ்வே சம்பவம்! சாப்பாட்டு தட்டில் கிடந்த 'பாம்பு தலை’.! மிரண்டு போன பயணி! பறக்கும் விமானத்தில் நடந்த உவ்வே சம்பவம்! சாப்பாட்டு தட்டில் கிடந்த 'பாம்பு தலை’.! மிரண்டு போன பயணி!

     பாம்பு தலை

    பாம்பு தலை

    அப்போது விமானத்தில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.. அவர்களுக்கு காலை உணவு வழக்கம்போல் வழங்கப்பட்டுள்ளது.. அதில் ஒரு பயணி, தனக்கு தந்த உணவை சாப்பிட முயன்றார்.. அப்போது, வழங்கப்பட்டிருந்த உணவில் பாம்பின் தலை இருந்திருக்கிறது... விமானக் குழுவின் உறுப்பினர் ஒருவர் பாம்பின் துண்டிக்கப்பட்ட தலை ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்.. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது..

     அலறிய பயணி

    அலறிய பயணி

    தனக்கு வழங்கப்பட்ட உணவில் பாம்பு தலை இருந்ததை, அந்த பயணியே வீடியோ எடுத்து, சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டார். அதற்கு பிறகுதான் இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.. அந்த வீடியாவில், வழங்கப்பட்ட சாப்பாட்டில் நிறைய காய்கறிகள் தென்படுகின்றன.. காய்கறிகளுக்கு நடுவில் கருப்பாக சிறிய உருவத்துடன் உள்ளது.. அது முழு பாம்பின் தலை என்று ஆரம்பத்தில் சட்டென தெரியவில்லை.. பிறகுதான், விமான குழுவின் உறுப்பினர் அது சிறிய பாம்பின் தலை என்பதை கண்டறிந்து சொன்னார்..

     குழம்பு கரண்டி

    குழம்பு கரண்டி

    இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது... இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.. குழம்பை கரண்டியில் அள்ளி ஊற்றும்போதே, இந்த கறுப்பு நிற தலை தென்படவில்லையா? சாப்பாட்டில்கூட அவ்வளவு அஜாக்கிரதையா? என்று கேள்விகளை கேட்டு வருகிறார்கள். இதனிடையே, சம்பந்தப்பட்ட சன் எக்ஸ்பிரஸ் நிறுவனமானது ஒரு அறிக்கையை நேற்றைய தினம் வெளியிட்டிருந்தது..

     ஒருமுறைகூட புகார் இல்லை

    ஒருமுறைகூட புகார் இல்லை

    அந்த அறிக்கையில், "விமானத் துறையில் 30 வருடங்களுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்கள் நாங்கள்.. ஒருமுறைகூட இப்படி ஒரு புகார் வந்தது கிடையாது.. விமானத்தில் எங்கள் விருந்தினர்களும், பணியாளர்களும் பாதுகாப்பான முறையில் சேவைகள் இருக்கவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.. அப்படி இருக்கும்போது, விமானத்தில் வழங்கப்பட்ட உணவு தொடர்பாக வரும் செய்திகள் தவறானவை.. இந்த விஷயத்தில் விரிவான விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது" என்று விளக்கம் தந்திருந்தது.

     கேட்டரிங் சப்ளை

    கேட்டரிங் சப்ளை

    மேலும், இது தொடர்பான விசாரணை அறிக்கை வெளியாகும்வரை, கேட்டரிங் சப்ளையருடனான ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.. ஆனால், அவர்களுடனான கேட்டரிங் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாகவும் மறுபடியும் ஒரு தகவல் வெளியானது.. இந்நிலையில் தற்போது, உணவு சப்ளை செய்த கேட்டரிங் நிறுவனமானது ஒரு விளக்கத்தை தந்துள்ளது.. அதில், தாங்கள் வழங்கிய உணவில் பாம்பு தலை இருந்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளது.

    கரப்பான்பூச்சி

    கரப்பான்பூச்சி

    சமைக்கும் போது மிகவும் கவனமாக சமைக்கிறோம், நீங்கள் கூறுவதுபோல எந்த பொருட்களும் உணவில் சேர்க்கவில்லை, உணவுகள் 280 டிகிரி செல்சியஸில் சமைக்கப்படுகிறது என்றும் விளக்கம் தந்துள்ளது.. பொதுவாக சாப்பாட்டில் இப்படி பல்லி, கரப்பான்பூச்சி உட்பட ஏதாவது உயிரினங்கள் தவறுதலாக விழுந்தது குறித்த புகார்கள் அடிக்கடி வெடிப்பது இயல்புதான் என்றாலும், பாம்பு தலை என்ற புகார் இதுவரை வந்தது இல்லை..

     சிகரெட் துண்டு

    சிகரெட் துண்டு

    இப்படித்தான், டெல்லியில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் சிக்கன் சாலட்டில் பல்லி இருந்தது.. இதேபோல ஒரு கேன்டீனில் தரப்பட்ட சாப்பாட்டில் சிகரெட் துண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தில் தரப்படும் உணவில்கூட, நிறைய சர்ச்சைகள் வந்துள்ளன.. சமீபத்தில் 6 மாத குழந்தை ஒன்று பசியால் அழுதும்கூட, இண்டிகோ விமான நிறுவனம் சாப்பாடு தர மறுத்ததாக வந்த புகார் பூதாகரமாக வெடித்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.

    English summary
    How did the traveler find the snake's head in the food and What is the explanation given by the catering company பாம்பு தலை சாப்பாட்டில் இருந்ததையடுத்து, கேட்டரிங் கம்பெனி விளக்கம் தந்துள்ளது
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X