கடைசி பாலை விடுங்க.. அதுக்கு முன்பே உறுதியான பாகிஸ்தான் தோல்வி! பங்காளிகள் வீழ்ந்தது எங்கு தெரியுமா?
சிட்னி: நேற்று ஜிம்பாபேவிற்கு எதிராக திரில்லிங் போட்டியில் கடைசி பந்தில் 3 ரன் எடுக்க முடியாமல் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. ஆனால் அதற்கு முன்பே பாகிஸ்தானின் தோல்வி உறுதியாகிவிட்டது.
2022 டி 20 உலகக் கோப்பை தொடர் பல திருப்பங்களுடன் நடந்து கொண்டு இருக்கிறது. எதிர்பார்க்காத அணிகள் எல்லாம் இந்த தொடரில் வெற்றிபெற்று வருகின்றன.
இங்கிலாந்துக்கு எதிராக போட்டியில் மழை காரணமாக அயர்லாந்து வென்றது. இன்னொரு தென்னாப்பிரிக்கா மேட்ச் டிராவில் முடிந்தது.
இந்த நிலையில்தான் நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக ஜிம்பாபே வெற்றி பெற்றுள்ளது.

என்ன நடந்தது?
நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாபே அணி தொடக்கத்தில் இருந்தே அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என்று கவனமாக ஆடினார்கள். பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ஒப்பனர்கள் ஆடியதை விட ஜிம்பாபே ஒப்பனர்கள் சிறப்பாக ஆடினார்கள். சியான் வில்லியம் அதிகபட்சமாக 31 ரன்கள் அந்த அணியில் எடுத்தார். இதனால் ஜிம்பாபே 130-8 ரன்களை எடுத்தது. இது எளிதாக எடுக்க கூடிய ரன்தான்.

ஜிம்பாபே
ஈசியாக வென்றுவிடலாம் என்று அலட்சியமாக களமிறங்கியது பாகிஸ்தான். ஆனால் தொடக்கமே பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி. வெறும் 4 ரன்கள் எடுத்து இருந்த பாபர் ஆஸம் அவுட்டானார். அவரை தொடர்ந்து 14 ரன்களில் ரிஸ்வானும் அவுட் ஆனார். இரண்டு பேருமே பிளாட் டிராக்குகளில் ஆடி மட்டுமே ரன்களை குவித்து வந்தனர். இந்த நிலையில் ஆஸ்திரேலியா போன்ற பிட்சில் ஆட முடியாமல் இரண்டு பேருமே சொதப்பி வருகிறார்கள்.

சொதப்பல்
இவர்கள் அவுட்டான பின் பாகிஸ்தான் அணியில் ஷான் மசூத் மட்டுமே நிதானமாக ஆடி 44 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக ரன் குவிக்கவில்லை. பாகிஸ்தான் நினைத்து இருந்தால் 20 ஓவர் வரை கொண்டு செல்லாமல், 18, 19 ஓவர்களில் அதிரடியாக ஆடி இலக்கை அடைந்து இருக்க முடியும். ஆனால் அந்த அணி 17, 18வது ஓவர்களில் மோசமாக சொதப்பியதுதான் தோல்விக்கு காரணமாக அமைந்தது. 17வது ஓவரில் பாகிஸ்தான் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கேயே பாகிஸ்தான் தோல்வி அடைந்துவிட்டது.

3 ரன்கள்
முகமது வாசிம் ஜுனியர், முகமது நவாஸ் இரண்டு பேருமே இருந்தும் கூட 3 ரன்கள்தான் சென்றது. அதிலும் கூட 1 ரன் வைட், இன்னொரு ரன் பைஸ். அந்த அளவிற்கு அந்த ஓவரை நக்ராவா சிறப்பாக வீசினார். அதற்கு அடுத்த ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டுமே சென்றது.இதனால் கடைசி 2 ஓவரில் 22 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் 19வது ஓவரில் ஒரு சிக்ஸ் உட்பட 11 ரன்கள் சென்றது. இதனால் பாகிஸ்தானுக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை பட்டது.

வெற்றி
எளிதாக 11 ரன்கள் எடுக்கலாம் என்ற நிலையில்தான் மிட் ஆப் திசையில் நவாஸ் பவுண்டரி அடித்தார். ஆனால் அந்த பந்து பவுண்டரி போகும் முன் இர்வின் அதை தடுத்து 3 ரன்கள் மட்டுமே கொடுத்து பவுண்டரியை சேவ் செய்தார். இதில் ரன் சேவ் ஆனது. அதன்பின் பவுண்டரி போனாலும் கூட 5வது பந்தில் நவாஸ் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதே இர்வினிடம் கேட்ச் கொடுத்து அவர் அவுட் ஆனார். இந்த பிரஷரில் கூட இவான்ஸ் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தார். வைட், நோ பால் போடாமல் கவனமாக பவுலிங் செய்தார்.

பிரஷர்
கடைசி பந்தில் 3 ரன்கள் தேவை என்ற நிலையில், இவான்ஸ் அவுட் சைட் ஆப் ஸ்டம்பில் புல் பந்தை வீசினார். இதை சரியாக அடிக்காமல் 2 ரன்கள் ஓடி டிரா செய்ய முயன்றார் அப்ரிடி. நான் ஸ்டிரைக்கர் முன்பே ஓடி வந்துவிட்டதால் அவர் எளிதாக இரண்டு ரன்கள் எடுத்தார். ஆனால் அப்ரிடியால் எடுக்க முடியாத நிலையில் 1 ரன்களுக்கு அவர் ரன் அவுட் ஆனார். இதனால் பாகிஸ்தான் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications