கண் தெரியாத நண்பருக்கு உலகக் கோப்பை கால்பந்து பார்க்க உதவும் இளைஞர்.. உருக்கமான வீடியோ
கொலம்பியாவில் தன்னுடைய பார்வையில்லாத நண்பருக்கு இளைஞர் ஒருவர் வித்தியாசமாக கால் பந்து பார்க்க உதவுகிறார்.
கொலம்பியா: கொலம்பியாவில் தன்னுடைய பார்வையில்லாத நண்பருக்கு இளைஞர் ஒருவர் வித்தியாசமாக ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க உதவுகிறார். பிரெய்லி முறையில் சைகை மொழியை பயன்படுத்தி அவர் இந்த உதவியை செய்கிறார்.
கொலம்பியா ரசிகர் ரிச்சர்ட் கலிகோவிற்கு அவரது நண்பர் சீசர் உதவும் வீடியோ வைரலாகி உள்ளது. சீசர் சைகை மொழியை வைத்து பிரெய்லி மூலம் நண்பருக்கு உதவுகிறார்.
கொலம்பியா அணி ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரை விட்டு வெளியேறிவிட்டாலும் இந்த ஜோடி பெரிய அளவில் வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. ரிச்சர்ட் கலிகோவிற்கு வாய் பேசவும் வராது காதும் கேட்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

கண் பார்வை
இவர் பிறந்த போது எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்துள்ளார். ஆனால் இவருக்கு 9 வயதில் உடலில் நிறைய குறைபாடுகள் ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு மருத்துவம் பார்த்த போது பக்கவிளைவாக, அவரின் பார்வை பறி போய் இருக்கிறது. கொலம்பியா கால்பந்து அணியின் ரசிகரான இவர் அதன்பின் கால் பந்து போட்டியே பார்க்க முடியாத நிலைக்கு சென்றுள்ளார்.
|
புலம்பல்
இந்த நிலையில் கடந்த வருட கால்பந்து உலகக் கோப்பை போட்டியின் போது, இது குறித்து ரிச்சர்ட் கலிகோ தன்னுடைய நண்பர் சீசரிடம் இதுகுறித்து புலம்பி இருக்கிறார். இதனால் புதிய முடிவெடுத்த சீசர், மாற்று திறனாளிகள் பயன்படுத்தும் சைகை மொழியை கற்றுக்கொண்டுள்ளார். போட்டி எப்படி செல்கிறது என்பதையும் ரிச்சர்ட் கலிகோவிற்கு காட்ட முடிவெடுத்துள்ளார்.

எப்படி
இதனால் அவர் சிறிய அளவில் கால்பந்து மைதானம் போல பிரெய்லி முறையில் தயார் பெட்டி ஒன்றை செய்துள்ளார். அதில் வேகமாக கைகளை நகர்த்தி போட்டி எப்படி விளையாடுகிறார்கள் என்று ரிச்சர்ட் கலிகோவிற்கு சீசர் விளக்கி இருக்கிறார். கோல் போடுவது, ரெட் கார்ட் வரை ஒவ்வொரு விளையாட்டு முறைக்கும் ஒவ்வொரு விதமாக உணர்த்தி இருக்கிறார்.

பெரிய அளவில் வைரல்
அவர் தனது நண்பருக்கு உதவும் வீடியோ பெரிய அளவில் வைரல் ஆகியுள்ளது. பலரும், இருவரையும் பாராட்டி உள்ளனர். இன்னும் சிலர் இவர்கள் இருவரையும் இலவசமாக உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு அனுமதிக்க வேண்டு என்றுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications