உலகின் காஸ்ட்லி ஐஸ்கிரீம்.. அடேங்கப்பா விலையைக் கேட்டால் மயக்கமே வருது.. அப்படி என்ன ஸ்பெஷல்
டோக்கியோ: கோடைக் காலத்தில் பலரும் ஐஸ்கிரீம் சாப்பிடவே விரும்புவார்கள். ஆனால், உலகின் மிகவும் காஸ்ட்லியான இந்த ஐஸ்கிரீம் விலையைப் பார்த்தீர்கள் என்றால் அந்த ஆசையையே விட்டுவிடுவீர்கள்.
இப்போது எங்குத் திரும்பினாலும் பொளந்து எடுக்கும் கோடை வெயில் குறித்தே பேச்சு இருக்கிறது. இந்தியாவில் பல இடங்களில் வெப்பம் அசாட்லாக 100 டிகிரி பாரன்ஹூட்டை தாண்டிவிடுகிறது.
இதனால் பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றே வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கோடைக் காலம் முடியும் வரை வெப்பம் தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதீத வெப்பம்: கோடை என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது ஐஸ்கிரீம் தான்.. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே விரும்பி உண்ணும் மிகச்சிறந்த கோடைக்கால ஸ்நாக்ஸ் ஆகும். கோடைக் காலம் மட்டுமின்றி, மழை மற்றும் குளிர் காலத்திலும் ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
ஐஸ்கிரீம் பிரியர்கள் இதை வெவ்வேறு சுவைகளைச் சாப்பிட வேண்டும் என விரும்புகிறார்கள்.. தங்களுக்குப் பிடித்த சுவையைக் கண்டறிய இவர்கள் பிரபலமாக உள்ள அனைத்து பிராண்டுகளிலும் ஐஸ்கிரீம்களை முயன்று வருகிறார்கள்.

ஐஸ்கிரீம்: அனைவரும் ஐஸ்கிரீம்களை விரும்ப அதன் விலையும் மற்றொரு முக்கிய காரணமாக இருக்கும். ஏனென்றால் நீங்கள் எந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டாலும் கூட அது சில நூறு ரூபாயில் முடிந்துவிடும். பாக்கெட்டை அதிகம் பதம் பார்க்காது என்பதும் ஐஸ்கிரீம் பக்கம் அதிக பேர் திரும்ப முக்கிய காரணமாக இருக்கிறது.
இதனிடையே சமீபத்தில் ஒரு ஜப்பானிய நிறுவனம் உலகின் மிகவும் விலையுயர்ந்த ஐஸ்கிரீமை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக அவர்கள் கின்னஸ் உலக சாதனை பட்டியலிலும் இடம்பிடித்துள்ளனர். அப்படி என்ன விலை எனக் கேட்கிறீர்கள். ஷாக் ஆக வேண்டாம்.. இந்த ஐஸ் கிரீம் விலை 8,73,400 ஜப்பானிய யென் (அதாவது இந்திய மதிப்பில் ரூ. 5.2 லட்சம்) ஆகும்.
ஜப்பானைச் சேர்ந்த செல்லாடோ என்ற ஐஸ்கிரீம் நிறுவனம் இதை உற்பத்தி செய்துள்ளது. அரிய பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதே இந்த ஐஸ்கிரீம் அதிக விலைக்கு விற்கப்படக் காரணமாக இருக்கிறது.

என்ன விலை: இத்தாலியின் ஆல்பாவிலிருந்து கிடைக்கும் அரிதான உணவு பண்டத்தைக் கொண்டு இதைத் தயாரித்துள்ளது. இத்தாலியில் கிடைக்கும் அது ஒரு கிலோ 2 மில்லியன் ஜப்பானிய யென் (சுமார் ₹ 11.9 லட்சம்) ஆகும்.. அதேபோல அதிக விலை கொண்ட Parmigiano Reggiano மற்றும் sake lees ஆகியவை இதில் பயன்படுத்தப்படுகிறது.இவை எல்லாம் தான் விலையை இந்தளவுக்கு அதிகரித்துள்ளது.
வெறுமன உலகின் அதிக விலை கொண்ட ஐஸ்கிரீமை உருவாக்க வேண்டும் என்பதற்காக செல்லட்டோ இதைத் தயாரிக்கவில்லை. அவர்கள் ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய பொருட்களை இணைத்து ஒரு ஐஸ்கிரீமை உருவாக்க முயன்றனர். இதை உருவாக்க அவர்கள் ஒசாகாவில் உள்ள பிரபல ஃப்யூஷன் உணவகமான ரிவி என்ற ஹோட்டல் தலைமை சமையல்காரரான தடாயோஷி யமடாவை நியமித்தனர்.
அவர் தான் பல அரிய பொருட்களை வைத்து இந்த விலையுயர்ந்த ஐஸ்கிரீமை உருவாக்கியுள்ளார். இதுவரை யாருமே உணராத ஒரு சுவையை இந்த ஐஸ்கிரீம் கொண்டிருக்கும் என்று இதைச் சாப்பிட்டுப் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதை எடுக்கும் போதே அதன் அருமையான நறுமணம் நம்மை ஆக்கிரமிக்கும். அதை வாயில் எடுத்து வைத்தவுடன் அதில் தெரியும் மிக்ஸிங் டேஸ்டும், பழ சுவைகளும் நம்மை எங்கேயோ அழைத்துச் சென்றுவிடுமாம். இப்படி பக்காவாக டேஸ்ட் தரும் ஐஸ்கிரீமை அவர்கள் ஏதோ ஒரு சில நாட்களில் உருவாக்கிவிடவில்லை. இதற்காக முழுமையாக 1.5 ஆண்டுகள் அவர்களை ஆய்வு செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications