துருக்கியின் திமிரை அடக்கும் இந்தியா.. மோடி இன்று சைப்ரஸ் நாட்டுக்கு செல்வது ஏன்? பின்னணி இதுதான்
நிகோசியா: பிரதமர் மோடி இன்று முதல் அரசு முறை பயணமாக 3 நாடுகளுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அதில் முதல் நாடாக இன்று மாலையில் பிரதமர் மோடி சைப்ரஸ் நாட்டுக்கு செல்ல உள்ளார். இந்த நாட்டின் பெயரை நம்மில் பலரும் அதிகமாக கேள்வி பட்டு இருக்க மாட்டோம். ஆனால் பிரமதர் மோடி அந்த நாட்டுக்கு திடீரென்று செல்கிறார். இதன் பின்னணி என்னவென்றால் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது பாகிஸ்தானுடன் சேர்ந்து நம்மை எதிர்த்த துருக்கிக்கு ‛செக்' வைக்கும் நடவடிக்கை உள்ளதாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக வெளிநாடுகளுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இன்று காலை 7.30 மணிக்கு டெல்லியில் இருந்து ‛ஏர் இந்தியா ஒன்' தனி விமானத்தில் 3 நாடுகளுக்கு புறப்பட்டார். அதன்படி பிரதமர் மோடி இன்று முதலில் சைப்ரஸ் நாட்டுக்கு செல்கிறார். இது மத்திய கிழக்கு நாடாகும். இன்றும், நாளையும் பிரதமர் மோடி சைப்ரஸ் நாட்டில் இருப்பார்.

அதன்பிறகு நாளை சைப்ரஸ் நாட்டில் இருந்து புறப்பட்டு கனடா செல்வார். அங்கு ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்பார். நாளையும், நாளை மறுநாளும் பிரதமர் மோடி கனடாவில் இருப்பார். அதைத்தொடர்ந்து குரேஷியா நாட்டுக்கு பிரதமர் மோடி செல்வார். அங்கு 18 ம் தேதி வரை இருப்பார். அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு 19 ம் தேதி நம் நாட்டுக்கு வருகிறார்.
இதில் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ள ஒரு நாடு சைப்ரஸ். இது மத்திய கிழக்கில் அமைந்துள்ள தீவு நாடாகும். மத்திய தரைக்கடல் பகுதியில் இந்த சைப்ரஸ் நாடு அமைந்துள்ளது. அருகே துருக்கி, இஸ்ரேல், எகிப்து, லெபனான், சிரியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் தற்போது பயங்கர மோதல் நடந்து வருகிறது. ஏவுகணை தாக்குதல்களால் பல நாடுகள் தங்களின் வான்வெளி பரப்பை மூடியுள்ள நிலையில் சைப்ரஸ் நாட்டுக்கு பிரதமர் மோடி விமானத்தில் சுற்றி செல்கிறார்.
இந்நிலையில் தான் பிரதமர் மோடி ரிஸ்க் எடுத்து சைப்ரஸ் நாட்டுக்கு செல்வது ஏன்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 23 ஆண்டுகளில் இந்தியாவின் பிரதமர்கள் யாரும் சைப்ரஸ் நாட்டுக்கு செல்லவில்லை. 23 ஆண்டுகள் கழித்து நரேந்திர மோடி செல்கிறார். இதற்கு முன்பு 1982ல் பிரதமராக இருந்த இந்திரா காந்தி, 2002ல் பிரதமராக இருந்த அடல்பிஹாரி வாஜ்பாய் ஆகியோர் சைப்ரஸ் நாட்டுக்கு சென்றிருந்தனர். அதன்பிறகு இப்போது நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக செல்கிறார்.
சைப்ரஸ் நாட்டை எடுத்து கொண்டால் நம் நாட்டுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறது. காஷ்மீர் பிரச்சனை, எல்லை தாண்டிய பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்டவற்றில் எப்போதும் நம் நாட்டுக்கே சைப்ரஸ் ஆதரவு தந்துள்ளது. அதேபோல் உலகளாவிய சர்வதேச மன்றங்களிலும் இந்தியாவுக்கு தோள் கொடுத்து வருகிறது. குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான விஷயங்களில் இந்தியாவுக்கு பக்கபலமாக சைப்ரஸ் நாடு உள்ளது.
மேலும் பிரதமர் மோடியின் இந்த விசிட் என்பது துருக்கி நாட்டுக்கு செக் வைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. துருக்கி, பாகிஸ்தானுடன் சேர்ந்து நம் நாட்டை எதிர்த்து வருகிறது. சமீபத்தில் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை கண்டித்த துருக்கி, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டது. இதையடுத்து துருக்கிக்கு நம் நாட்டு மக்கள் சுற்றுலா செல்வதையும், அந்த நாட்டுடனான வர்த்தகத்தையும் புறக்கணித்தனர். இது துருக்கியின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதன் அடுத்தக்கட்டமாக தான் துருக்கிக்கு எதிராக பிரதமர் மோடி சைப்ரஸ் நாட்டுக்கு விசிட் செய்கிறார். அதாவது துருக்கியும், சைப்ரஸ் நாடும் அண்டை நாடுகளாகும். இருநாடுகள் இடையே கடந்த 1974 முதல் நிலப்பிரச்சனை மற்றும் அரசியல் சார்ந்த பிரச்சனைகள் உள்ளன. சைப்ரஸ் நாட்டின் சில பகுதிகளை துருக்கி ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இப்படியான சூழலில் தான் சைப்ரஸ் நாட்டுடன் நாங்கள் இருக்கிறோம் என்பதை காட்டும் வகையில் பிரதமர் மோடி அங்கு செல்கிறார்.
அதேபோல் மத்திய தரைக்கடல் பகுதியில் சைப்ரஸ் நாடு உள்ளது. இங்கு துருக்கியின் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும் என்றால் நம் நாட்டுக்கு பலமான சப்போர்ட் வேண்டும். இதற்கு சைப்ரஸ் நாட்டுடனான உறவு என்பது முக்கியம். இது 2வது காரணமாகும். அதுமட்டுமின்றி சைப்ரஸின் கடல்சார் இணைப்பு மற்றும் அந்த நாட்டின் அமைவிடம் உள்ளிட்டவை இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தில் (IMEC) மிகவும் முக்கியமானதாகும்.
மேலும் சைப்ரஸ் நாடு ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் முக்கிய நாடாகும். இந்த கவுன்சிலில் சுழற்சி முறையில் தலைமை பொறுப்பு வழங்கப்படும். அந்த வகையில் 2026ல் சைப்ரஸ் நாடு தான் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளது. இதன்மூலம் இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான உறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்த முடியும். இது நம் நாட்டின் பாதுகாப்பு, வர்த்தகம் உள்பட பல துறைகளுக்கு சிறப்பானதாக அமையும்.
அதேபோல் சைப்ரசும் துருக்கியின் தொல்லையால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் துருக்கியை எதிர்க்கும் நாடுகளுடன் உறவை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதன்படி பிரதமர் மோடியின் இந்த விசிட் சைப்ரஸ் நாட்டுக்கும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மேலும் இன்றைய பேச்சுவார்த்தையில் இருநாடுகள் இடையே பாதுகாப்பு துறை சார்ந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. துருக்கியால் சைப்ரஸ் நாட்டுக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில் இந்த பேச்சவார்த்தை அதிக கவனம் பெற்றுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications