இரண்டே நொடி.. துப்பாக்கிச்சூடு நடந்ததும் ஸ்லோவாக்கியா பிரதமரை சூழ்ந்த வீரர்கள்! அடுத்து செய்த செயல்
பிராடிஸ்லாவா: ஸ்லோவாக்கியா பிரதமர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையில், அப்போது அவரது பாதுகாப்பு வீரர்கள் செயல்பட்ட விதம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
மத்திய ஐரோப்பியாவில் அமைந்துள்ள குட்டி நாடு ஸ்லோவாக்கியா.. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே சுமார் 54 லட்சம் தான்.. கடந்த அக். மாதம் முதல் இந்த நாட்டின் பிரதமராக முதல் ராபர்ட் ஃபிகோ இருக்கிறார்.

இதற்கிடையே நேற்றைய தினம் இவரை நோக்கி திடீரென துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் படுகாயமடைந்த ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
துப்பாக்கிச்சூடு: அந்நாட்டின் வடகிழக்கே உள்ள ஹண்ட்லோவாவில் நடந்த அரசு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட நிலையில், அப்போது திடீரென அவரை நோக்கி அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். ஐந்து முறை அந்த நபர் துப்பாக்கியால் சுட்ட நிலையில், சில குண்டுகள் ராபர்ட் ஃபிகோவின் மீதும் பாய்ந்துள்ளது. அவர் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே துப்பாக்கி சூடு நடந்த போது அந்த நிலைமையை அவரது பாதுகாப்பு வீரர்கள் எப்படி கையாண்டனர் என்பது குறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதாவது துப்பாக்கி சூடு நடந்த உடனே உள்ளூர் போலீசார் தான் துப்பாக்கியால் சுட்ட நபரை கீழே தள்ளுகிறார்கள். பாதுகாப்பு வீரர்களின் கவனம் பிரதமர் ராபர்ட் மீது தான் முழுக்க முழுக்க இருந்துள்ளது.
என்ன செய்தார்கள்: துப்பாக்கி சூடு நடந்த அடுத்த நொடி பிரதமரை அவர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள். உடனடியாக இரண்டு பக்கமும் அவரை பிடித்து கொண்ட கவச வாகனத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.. குண்டு பாய்ந்ததால் ராபர்ட் நடக்க முடியாமல் சிரமப்படுவது தெளிவாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் அவர் அப்படியே சரிய போகிறார். இருப்பினும், பொதுவெளியில் அவர் அதிக நேரம் இருந்தால் அவரது உயிருக்கு தான் ஆபத்து. மேலும், சிகிச்சை அளிக்கவும் தாமதம் ஆகும் என்பதால் ஒரு கட்டத்தில் இரு பக்கமும் இருந்த காவலர்கள் அவரை தூக்கிக் கொண்டே காருக்கு செல்கிறார்கள்.
அவர் காருக்குள் பாதுகாப்பாக இருக்கிறார் என்பதை உறுதி செய்த பின்னரே பாதுகாப்பு வீரர்களின் கவனம் துப்பாக்கி சூடு நடத்தியவர் மீது திரும்பியுள்ளது. ஏற்கனவே உள்ளூர் போலீசார் அவரை கீழே தள்ளி பிடித்து வைத்திருந்த நிலையில், பாதுகாப்பு வீரர்களும் அவரை நோக்கி செல்கிறார்கள். அதற்குள் பிரதமரின் கார் அங்கிருந்து கிளம்பிவிடுகிறது. மேலும், துப்பாக்கி சூடு நடத்தியவர் அருகே யாரும் செல்லாத வகையிலும் கூட்டத்தை போலீசார் கட்டுப்படுத்துகிறார்கள்.
சில நொடிகள்: இவை அனைத்துமே சில நொடிகளில் நடந்து முடிந்துவிடுகிறது. பொதுவாகவே எந்தவொரு நாட்டின் பிரதமர் அல்லது அதிபரின் பாதுகாப்பிற்கு வருவோர் மிக மிக கவனமாக இருப்பார்கள். எதாவது அசம்பாவிதம் நடந்தால் பிரதமர் அல்லது அதிபரை பாதுகாப்பதே அவர்களின் முதல் நோக்கமாக இருக்கும். இந்தச் சம்பவத்திலும் அதுவே நடந்துள்ளது. அந்த நபர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு பிரதமரை பாதுகாத்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கண்டனம்: இருப்பினும், பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் என பல்வேறு உலக நாட்டு தலைவர்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
எஸ்ஜே சூர்யாவின் படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்து கோர விபத்து.. ஒருவர் உயிரிழப்பு, 3 பேர் காயம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications