23 வயதில் ஓய்வு.. அதுவும் முழு ஓய்வூதியத்துடன்.! உலக சாதனையை படைத்த இளைஞர்.. அது எப்படி சாத்தியம்?
மாஸ்கோ: விற்கும் விலைவாசியை நினைத்தால் 60 வயக்குக்கு மேல் கூட ஓய்வு பெற முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால், இங்கே ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு இளைஞர் வெறும் 23 வயதில் முழு ஓய்வூதியத்துடன் ஓய்வு பெற்றிருக்கிறார். மற்றவர்கள் தங்கள் கேரியரை ஆரம்பிக்கும் நேரம் இவர் மட்டும் எப்படி இவ்வளவு சீக்கிரம் ஓய்வு பெற்றார் என்ற கேள்வி உங்களுக்கு வரும்.. இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
பொதுவாக நாம் அனைவரும் 60 வயதுக்கு மேல் தான் ஓய்வு பெறுவோம். அதுவும் இப்போது இருக்கும் விலைவாசியைப் பார்த்தால் 60 வயதுக்கு மேல் கூட உழைக்க வேண்டி இருக்கும் போல..! அந்தளவுக்குத் தான் நிலைமை இருக்கிறது. ஆனால், சமீப காலமாகவே இளம் வயதிலேயே ஓய்வு பெறுவது என்ற டிரெண்ட் பிரபலமடைந்து வருகிறது.

இளம் வயது ஓய்வு
குறிப்பாக 1980களுக்கு பிறகு பிறந்த மில்லினியல்கள் மற்றும் ஜெனரல் இசட் மத்தியில் இதுபோல இளம் வயதில் ஓய்வு பெறும் டிரெண்ட் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் இதுபோல இலக்கை அடைந்து, ஒருவர் 40 அல்லது 50 வயதில் தான் ஓய்வு பெறுவார்கள். ஆனால், இங்கே ரஷ்யாவில் இளைஞர் ஒருவர் நினைத்துக் கூட பார்க்க முடியாத சாதனையை இளம் வயதில் செய்துள்ளார்.
இதனால் அவர் 23 வயதிலேயே முழு ஓய்வூதியத்துடன் ஓய்வு பெற்றிருக்கிறார். அவர் செய்த இந்த அசாதாரண சாதனை பலரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. அவரால் எப்படி இதுபோன்ற அசாதாரண சாதனை படைக்க முடிந்தது என்பதே இப்போது பலருக்கும் உள்ள கேள்வியாக இருக்கிறது.
ரஷ்ய இளைஞர்
Oddity Central என்ற செய்தி நிறுவனம் இது குறித்த செய்தியைப் பகிர்ந்துள்ளது. பாவெல் ஸ்டெப்சென்கோ என்ற நபர் அவரது 16 வயதில் ரஷ்ய உள்துறை அமைச்சகத்தின் கல்வி நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு அவர் ஐந்து ஆண்டுகள் விடாமுயற்சியுடன் படித்தார். தனது படிப்பை முடித்த பிறகு, அவர் அங்கேயே உள்துறை அமைப்பின் பிராந்தியப் பிரிவில் பணியாற்றத் தொடங்கினார். இருப்பினும், அங்கு அவர் சில காலம் மட்டுமே பணியாற்றினார்.
ஓய்வு பெற்றது எப்படி
ரஷ்ய ராணுவத்தில் ஒரு குறிப்பிட்ட விதி இருக்கிறது. அதாவது ராணுவச் சட்டம் அமலில் இருக்கும்போது ஒருவர் பணியாற்றும் ஒவ்வொரு மாதமும் மூன்று மாத சேவை காலமாகக் கணக்கிடப்படும் என்ற விதி இருக்கிறது. இந்த விதியால் அவர் 2 ஆண்டுகளில் ஓய்வு பெறத் தேவையான கிரெடிட்களை பெற்றுவிட்டார்.
அதாவது ரஷ்ய ராணுவ சட்டத்தின்படி ஒருவர் 6 ஆண்டுகள் வேலை செய்தால் மட்டுமே முழு ஓய்வூதியத்துடன் ஓய்வு பெற விண்ணப்பிக்க முடியும். அப்போது தான் தேவையான கிரெடிட் கிடைக்கும். ஆனால், ராணுவ விதி அமலில் இருந்ததால் இவர் இரண்டே ஆண்டுகளில் அந்த கிரெடிட்களை அடைந்துவிட்டார். இதன் மூலம் மற்றவர்கள் தங்கள் கேரியரை ஆரம்பிக்கும் வயதிலேயே அவர் முழு ஓய்வூதியத்துடன் ஓய்வு பெறத் தயாராகிவிட்டார்.
சர்வதேச சாதனை
கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி ஓய்வூதியத்துடன் ஓய்வு பெற விண்ணப்பிக்கத் தகுதியுடையவராக இருந்தார். அப்போதிருந்த ரஷ்ய ஓய்வூதிய சட்டத்தின்படி அவருக்கு ஓய்வூதியமும் வழங்கப்பட்டது. ரஷ்யாவில் சர்வதேச சாதனைகளைக் கண்காணிக்கும் INTERRECORD அமைப்பு, இவ்வளவு இளம் வயதில் யாரும் ஓய்வு பெற்றது இல்லை என்பதால் இதைச் சர்வதேச சாதனையாகவும் அங்கீகரித்துள்ளது.
ரஷ்ய அதிகாரிகளும் இதை உறுதி செய்துள்ளனர். ரஷ்யா எந்தளவுக்குப் பொதுமக்களுக்குத் தேவையான சமூகப் பாதுகாப்பைத் தருகிறது என்பதை உறுதி செய்யும் விதமாகவே இந்தச் சம்பவம் இருப்பதாக ரஷ்ய அரசு தெரிவிக்கிறது.
-
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
"AI மனித கட்டுப்பாட்டை மீறும்.." அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? AI நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்?












Click it and Unblock the Notifications