48 பெண்களாம்.. கட்டிப்பிடித்து முத்தம், டாக்டர் சேட்டை.. இதெல்லாம் நியாயமா கிருஷ்ணா.. கப்பலேறிய மானம்

48 பெண்களுக்கு பாலியல் தொல்லை தந்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

எடின்பர்க்: மொத்தம் 48 பெண்களாம்.. வெளிநாட்டில் ஒரு டாக்டர், இந்தியாவின் மானத்தையே வாங்கிவிட்டார்.. ஜெயிலுக்கும் போக போகிறார்..!

அந்த டாக்டர் ஸ்காட்லாந்து நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.. பெயர் கிருஷ்ணா சிங்.. இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்.. 72 வயதாகிறது..

தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்களிடம் ஏகப்பட்ட சில்மிஷங்களை டாக்டர் செய்துள்ளார்.. மொத்தம் 48க்கும் மேற்பட்ட பெண் நோயாளிகளிடம் தன் சேட்டையை காட்டி உள்ளார்.

 குற்றச்செயல்

குற்றச்செயல்

இதுதான் மிகப்பெரிய புகாராக அந்த நாட்டில் வெடித்து கிளம்பி உள்ளது... ஸ்காட்லாந்தின் நார்த் லனார்க்ஷைர் பகுதியில் 1983ம் ஆண்டு முதல் மே 2018ம் ஆண்டு வரை அவர் குற்றச்செயல்களில் ஈடுபட்டார் என்று நிரூபணமும் ஆகியுள்ளது.. ஆரம்பத்தில் இவர் செய்த சிகிச்சைகளை யாரும் பெரிதுப்படுத்தவில்லை என்றாலும் பல பெண்கள் மனம் குமுறியுள்ளனர்..

 சேட்டை அட்டகாசம்

சேட்டை அட்டகாசம்


நாள் ஆக ஆக பாலியல் தொல்லைகள் அதிகரித்தபடியே வந்துள்ளன.. தன்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் தந்துவிடுவாராம்.. சிகிச்சை செய்வதாக கூறி தகாத முறையில் நடந்து கொள்வாராம்.. வாயை திறந்தாலே அசிங்க அசிங்கமான கமெண்ட்களை சொல்வாராம்.. ஏற்கனவே உடம்பு சரியில்லாமல் சிகிச்சைக்கு சென்ற பெண் நோயாளிகள், இதையெல்லாம் பார்த்து மனம்புழுங்கி உள்ளனர்.

காமக்கொடூரங்கள்

காமக்கொடூரங்கள்

1983 முதலே இதுபோன்ற காமகொடூரங்கள் இந்த டாக்டர் ஈடுபட்டு வந்தாலும், முதன்முதலில் 2018-ல்தான் பாதிக்கப்பட்ட பெண் புகார் தந்துள்ளார.. இவருக்கு பிறகுதான் மற்ற பெண்கள் ஒவ்வொருவராக புகார்களை தர ஆரம்பித்தனர்.. இதில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்கள் என்று தெரிகிறது.. இந்த வழக்கு கிளாஸ்கோ ஹைகோர்ட்டில் நடந்து வந்த நிலையில், குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபணமானதால் கிருஷ்ணா குற்றவாளி என்று கோர்ட் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

 கிருஷ்ணா

கிருஷ்ணா

ஆனால், இன்னும் தண்டனை விவரம் சொல்லப்படவில்லை. கிருஷ்ணாவுக்கான தண்டனை விவரம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அந்த நாட்டில் ஏற்பட்டுள்ளது.. கிருஷ்ணாவை மருத்துவராக நியமித்த தேசிய சுகாதார ஆணையத்தின் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது... இதனிடையே, குற்றவாளி என்று தீர்ப்பு வெளியான நிலையில், கிருஷ்ணா தன்னுடைய பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைத்துவிட்டார்.. தற்போது நிபந்தனை ஜாமீனிலும் வெளியே வந்துள்ளார்...

 பிரிட்டிஷ் ராணி

பிரிட்டிஷ் ராணி

1980-ல் இருந்தே இதே பகுதியில் மருத்துவம் பார்த்து வந்ததால், கிருஷ்ணா மதிப்பு வாய்ந்த டாக்டராகவும் இருந்திருக்கிறார்.. நல்ல திறமைசாலியாம்.. எத்தகைய நோயையும், சிகிச்சையால் குணப்படுத்திவிடுவாராம். மெம்பர் ஆப் ஆடர் ஆப் பிரிடிஷ் எம்பயர் என்ற பிரிட்டிஷ் ராணியின் மதிப்பு மிக்க விருதினை, கடந்த 2013ல் கிருஷ்ணா பெற்றுள்ளார்.. ஆயிரம் திறமைகள் இருந்து என்ன? புத்தி சரியில்லையே..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+