சீனா விரித்த "மாய வலை.." கடைசி நொடியில் இத்தாலி எடுத்த முடிவு.. என்ன தான் நடக்கிறது? பகீர் பின்னணி
ரோம்: சீனாவின் கனவுத் திட்டமான தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் திட்டத்தில் இருந்து விலகுவதாக இத்தாலி அறிவித்துள்ளது. இது சீனாவுக்குப் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
உலகில் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரமாகச் சீனா இருக்கிறது. கடந்த 1980களில் ஆரம்பித்த சீனாவின் வளர்ச்சி கொரோனாவுக்கு முன்பு வரை படுவேகமாக வளர்ந்து வந்தது. ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் சீனா ஒரு உற்பத்தி ஹப்பாகவே இருந்தது.

அதிலும் குறிப்பாகச் சீன அதிபராக ஜி ஜின்பிங் பதவியேற்ற பிறகு சீனாவின் வளர்ச்சி எங்கேயோ போனது. வளர்ச்சி எந்தளவுக்கு இருந்ததோ அதே அளவுக்குச் சீனாவின் அத்துமீறல்களும் சீனாவைச் சுற்றி சர்ச்சைகளும் அதிகரித்தது.
சீனாவின் திட்டம்: மேலும், சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்த விரும்பும் சீனா அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அப்படி ஜி ஜின்பிங் கடந்த 2013இல் அறிவித்த திட்டம் தான் தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative). உலகின் பல்வேறு நாடுகளையும் சாலை, ரயில் மற்றும் கடல் பாதைகள் மூலம் சீனாவுடன் இணைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். உலகெங்கும் சுமார் 150+ நாடுகள் இந்தத் திட்டத்தில் இணைந்திருந்தன.
சீனாவின் "மாய வலை.." ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய இத்தாலி.. ஜி20-இல் இதை யாருமே எதிர்பார்க்கலயே! ட்விஸ்ட்
அப்படி இந்தத் திட்டத்தில் இணைந்த முக்கியமான ஐரோப்பிய நாடுகளில் ஒன்று இந்த இத்தாலி. ஜி7 நாடுகளில் இந்தத் திட்டத்தில் இந்த ஒரே நாடு இத்தாலி ஆகும். கடந்த 2019இல் இந்தத் திட்டத்தில் சீனா இணைந்திருந்தது. இதற்கிடையே நான்கே ஆண்டுகளில் இதில் இருந்து விலகுவதாக இத்தாலி அறிவித்துள்ளது. இது சீனாவுக்கு மிகப் பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
இத்தாலி எடுத்த முடிவு: இத்தாலி இந்தத் திட்டத்தில் இருந்து விலகவுள்ளதாக நீண்ட காலமாகவே கூறப்பட்டு வந்த நிலையில், இப்போது இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாகச் சீனாவிடம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இரு தரப்பும் எந்தவொரு செய்திக்குறிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும், இத்தாலி அந்தத் திட்டத்தில் இருந்து விலகியதை அந்நாட்டு அரசின் முக்கிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக இத்தாலி செய்தி நிறுவனங்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாகச் சீனாவிடம் தெரிவிக்கப்பட்டது என்பதைத் தாண்டி அந்த அதிகாரிகள் கூடுதலாக எந்தவொரு தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தாலி பிரதமராக கிஸேப்பே கொண்டே இருந்த போது அந்நாட்டு இதில் இணைந்தது. இருப்பினும், அதன் பிறகு பதவியேற்ற தற்போதைய பிரதமர்ஜியோர்ஜியா மெலோனி நீண்டகாலமாக இதை எதிர்த்தே வந்துள்ளார். இந்தத் திட்டத்தால் இத்தாலிக்குப் பெரியளவில் பலன் இல்லை என்பது அவரது நிலைப்பாடு.
கடைசி நேரத்தில் தப்பிய இத்தாலி: இந்த ஆண்டு இறுதிக்குள் இத்தாலி விலகுவதாக அறிவிக்கவில்லை என்றால் இந்த ஒப்பந்தம் மார்ச் 2024இல் தானாகவே புதுப்பிக்கப்படும் என்ற விதி இருந்தது. இந்தச் சூழலில் தான் இத்தாலி இதில் இருந்து விலகியுள்ளது. அதேநேரம் சீனாவுடன் மற்ற அனைத்து உறவுகளையும் தொடரவே விரும்புவதாக இத்தாலி தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. முன்னதாக இந்தாண்டு டெல்லியில் நடந்த ஜி20 மாநாட்டிலும் கூட இத்தாலி பிரதமர் சீனாவிடம் இது குறித்துப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
விமர்சனங்கள்: உலகிலேயே இதுவரை அறிவிக்கப்பட்ட திட்டங்களில் இந்த தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் மிகப் பெரிய திட்டமாக இருக்கிறது. அதாவது ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவில் எஸ்வதினி நாட்டைத் தவிர 53 நாடுகள் இந்த் திட்டத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இதைச் சீனாவின் மாயவலை எனப் பலரும் விமர்சிக்கிறார்கள். அதாவது அதிகளவில் கடன் கொடுத்து அல்லது முதலீடு செய்து ஒரு நாட்டை கட்டுப்படுத்தவே சீனா இந்தத் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளதாக விமர்சனங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications