இப்படி கூட நடக்குமா! உக்ரைன் போர் எப்படி முடியும் தெரியுமா? யாருக்கு வெற்றி? 5 அதிர்ச்சி பின்னணிகள்!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: உக்ரைன் போர் மொத்தம் 5 வகைகளில் முடியும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

உக்ரைனில் போர் தீவிரம் அடைந்து உள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் போர் அறிவித்து இன்றோடு சரியாக 10 நாட்கள் ஆகிறது. இதுவரையிலான போரில் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்யா தரப்பில் 7 ஆயிரம் ராணுவ வீரர்கள் பலியாகிவிட்டதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் உக்ரைன் - ரஷ்யா போர் எப்படி செல்லும், எப்படி முடியும் என்று பிபிசி ஊடகம் பல்வேறு வல்லுனர்களின் கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த 5 கணிப்புகள் பின்வருமாறு,

1. சில நாள் போர் - உக்ரைன் தோல்வி

1. சில நாள் போர் - உக்ரைன் தோல்வி

இதுவரை இந்த போரில் ரஷ்யா முழு பலத்தை பயன்படுத்தவில்லை. ரஷ்யா மிகவும் குறைவாகவே தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் வான்வெளி தாக்குதல்களையும் உக்ரைன் மீது ரஷ்யா இன்னும் நடத்தவில்லை. ஆனால் ரஷ்யா வரும் நாட்களில் தீவிரமான தாக்குதல்களை நடத்தும் வாய்ப்புகள் உள்ளன. படைகளை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. சைபர் போர் நடத்தவும் வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடக்கும் பட்சத்தில் வலுவான போர் நடக்கும். ரஷ்யா முழு பலத்தை பயன்படுத்தும் பட்சத்தில் உக்ரைன் தோல்வி அடையும் வாய்ப்புகள் உள்ளன. உக்ரைன் அதிபர் கைதாகலாம்., நாடு கடத்தப்படலாம், அல்லது கொல்லப்படலாம். உக்ரைனில் ரஷ்யாவிற்கு ஆதரவான அரசு, அல்லது ரஷ்யா அரசு அமையும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் சில நாட்களில் போர் முடியும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் ரஷ்யா முழு படையை பயன்படுத்த வேண்டும்.

2. நீண்ட கால போர் - ரஷ்யா தோல்வி

2. நீண்ட கால போர் - ரஷ்யா தோல்வி

இப்போது போர் நடக்கும் விதத்தை பார்த்தால் ரஷ்ய படைகளிடம் போதிய ஒற்றுமை இல்லை. போதிய ஆயுதங்கள் இல்லை. ரஷ்ய படைகள் முன்னேறவில்லை. இதே நிலை நீடித்தால் போர் நீண்ட காலம் செல்லும். ரஷ்ய படைகள் மேலும் பாதிக்கும். ஏற்கனவே ரஷ்யா கைப்பற்றிய சில இடங்களை கூட கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. 1990 களில் செசன்யாவில் ரஷ்ய படைகள் திணறியது போல இங்கும் திணற வாய்ப்புகள் உள்ளன. போர் நீண்ட காலம் நடக்கும் பட்சத்தில் ரஷ்ய படைகள் மேலும் பின்னடையும் வாய்ப்புகள் உள்ளன. உலக நாடுகள் இதனால் உக்ரைனுக்கு அதிக அளவில் உதவும் வாய்ப்புகள் உள்ளன. மக்களின் உதவியுடன் உக்ரைன் திருப்பி தாக்கலாம். ரஷ்ய படைகள் இடையே இது ஆர்வத்தை குறைத்து போரில் ரஷ்யா தோல்வி அடையும் வாய்ப்புகளை ஏற்படுத்தும். இதனால் உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் மொத்தமாக வெளியேறும் வாய்ப்புகள் உள்ளன.

3. ஐரோப்பிய போராக உருவெடுக்கும்

3. ஐரோப்பிய போராக உருவெடுக்கும்

உக்ரைனுக்கு ஐரோப்பா நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருவதால் ஏற்கனவே ரஷ்யா கோபத்தில் இருக்கிறது. இது மேலும் தீவிரம் அடையும் பட்சத்தில் போரும் உக்ரைனுக்கு வெளியே மால்டோவா, ஜார்ஜியா போன்ற நாடுகளுக்கு விரிவடையும் வாய்ப்புகள் உள்ளது. பிரான்ஸ் ஏற்கனவே இதை பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் போர் சமயங்களில் நேட்டோ நாடுகளுக்கும், ஐரோப்பா நாடுகளுக்கும் போர் விரிவடைய வாய்ப்புகள் உள்ளன. நேட்டோ விதி எண் 5படி.. ஒரு நேட்டோ நாட்டில் தாக்குவது எல்லா நேட்டோ நாட்டின் மீதும் தாக்குவதற்கு சமம். இதனால் போர் உலகபோராக.. அணு ஆயுத போராக உருவெடுக்கவும் வாய்ப்புகள் உள்ளன. அதன் விளைவுகள் ஊகிக்க முடியாதது.

4. பேச்சுவார்த்தைகள்

4. பேச்சுவார்த்தைகள்

மேலே சொன்ன விஷயங்கள் எதுவும் இல்லாமல் பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த போர் முடியும் வாய்ப்புகளும் உள்ளன. ஏற்கனவே இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. 6 மணி நேர அமைதி உடன்படிக்கையும் எட்டப்பட்டு உள்ளது. இப்படியே உலக நாடுகளின் தலையீடு, மேற்கு உலக அழுத்தம் காரணமாக ரஷ்யா கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கி வந்து பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவிற்கு கொண்டு வரலாம். ஏற்கனவே போர் காரணமாக ரஷ்ய கடும் பொருளாதார தடைகளை எதிர்கொண்டுள்ளது. இதனால் ரஷ்ய அதிபருக்கு அழுத்தம் எழுந்து வருவதால் ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு இறங்கி வரவும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் மேற்கு உலக நாடுகள் பேச்சுவார்த்தையை நடத்துமா என்று கேள்வி எழுந்துள்ளது.

Recommended Video

    இங்கே இருப்பதற்கு தப்பிக்க முயன்று பலியானாலும் பரவாயில்லUkraineல் சிக்கியிருக்கும் மாணவர்கள்உருக்கம்
    5. புடின் நீக்கம்

    5. புடின் நீக்கம்

    போர் காரணமாக ரஷ்யாவில் உள்நாட்டு பதற்றம் ஏற்பட்டு, உள்நாட்டு மோதல் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இந்த போரில் நிறைய ரஷ்யர்கள் மரணம் அடையும் பட்சத்தில் அது ரஷ்யாவிற்கு எதிராக திரும்பும். இதனால் உள்நாட்டு மோதல், உள்நாட்டு ராணுவ புரட்சி ஏற்படலாம். அதேபோல் சொத்துக்களை இழந்த அலிகார்க்ஸ் ஆட்சிக்கு எதிராக புரட்சி செய்யலாம். இதனால் புடின் ஆட்சி வீழ்ந்து அங்கு புதிய ஆட்சி நடக்கவும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இப்போதைக்கு அதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+