கைக்கொடுத்த வாழைப்பழ சென்டிமென்ட்.. செஸ் உலக கோப்பையை இந்தியாவின் திவ்யா தேஷ்முக் வென்றது எப்படி?
பதுமி: ஜார்ஜியாவில் நேற்று நடந்த உலக கோப்பை செஸ் பைனலில் நம் நாட்டை சேர்ந்த கேனெரு ஹம்பி மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகியோர் மோதினர். இதில் 19 வயது நிரம்பிய திவ்யா தேஷ்முக் வென்று செஸ் உலககோப்பையை வென்றார். இந்நிலையில் தான் அவர் தனது வாழைப்பழ சென்டிமென்ட்டை பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ள சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
ஜார்ஜியாவில் மகளிருக்கான உலக கோப்பை செஸ் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இதில் 46 நாடுகளை சேரந்த 107 வீராங்கனைகள் பங்கேற்றனர். இதன் இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனைகள் கோனெரு ஹம்பி- திவ்யா தேஷ்முக் ஆகியோர் தகுதி பெற்றனர்.

கிளாசிக்கல் அடிப்படையில் நடந்த முதல் ஆட்டம் டிரா ஆனது. இதனால் கிளாசிக் முறையிலான 2வது ஆட்டம் நடந்தது. இந்த போட்டியும் டிராவானது. இருவரும் சமநிலைவகித்தனர்.
சாம்பியனை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இநு்த போட்டியில் கோனெரு ஹம்பியை வீழ்த்தி திவ்யா தேஷ்முக் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். இதன்மூலம் மகளிர் செஸ் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை திவ்யா படைத்துள்ளார். திவ்யாவை எதிர்த்து விளையாடிய கோனெரு ஹம்பி, 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
இந்நிலையில் தான் இந்த போட்டியில் திவ்யா தேஷ்முக் வாழைப்பழ சென்டிமென்ட்டை கடைப்பிடித்து உள்ளார். திவ்யா தேஷ்முக்கை பொறுத்தவரை செஸ் போட்டியின்போது தனது அருகே வாழைப்பழத்தை வைத்து கொள்வார். அந்த வாழைப்பழத்தை அவர் சாப்பிடாமல் இருப்பார்.
இப்படி தொடப்படாத வாழைப்பழம் பலமுறை அவருக்கு அதிர்ஷ்டத்தை தந்துள்ளது. அந்த வகையில் நேற்றைய டைபிரேக்கர் போட்டியிலும் அவர் கொண்டு சென்ற வாழைப்பழத்தை சாப்பிடாமல் அப்படியே வைத்திருந்த நிலையில் மகளிர் உலககோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியனாகி உள்ளார்.
கிளாசிக்கல்லில் 2வது ஆட்டம் டிராவில் முடிவடைந்த பிறகு இதுபற்றி திவ்யா தேஷ்முக்கிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛வாழைப்பழத்தை வைத்து நான் என்ன செய்யப்போகிறேன். அதை இனி சாப்பிடப்போகிறேன். போட்டியில் என்னை எதிர்த்து ஆடுபவர் வாழைப்பழத்தை சாப்பிட விடுவது இல்லை. அதேவேளையில் நான் போட்டியின் நடுவே வாழைப்பழம் சாப்பிட்டால் மிகவும் நிதானமாக இருக்கிறேன் என்று அர்த்தம்.'' என்று கூறினார். இதையடுத்து வாழைப்பழம் அதிர்ஷ்டமாக நினைக்கிறீர்களா? என்று கேட்டதால், ‛‛இல்லை'' என்று சிரித்தபடி கூறினார்.
இருப்பினும் போட்டியின்போது தொடப்படாத வாழைப்பழம் என்பது அவருக்கு அதிர்ஷ்டமாக இருப்பதாக கூறப்படுகிறது. திவ்யா தேஷ்முக் மட்டுமின்றி பல வீரர், வீராங்கனைகள் தங்களுக்கு என்று ஒரு சென்டிமென்ட்டை கடைப்பிடித்து வருகின்றனர். உதாரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி முக்கியமான போட்டிகளில் தனது ராசியான கையுறையை அணிவதை வழக்கமாக வைத்திருந்தார். அதேபோல் ஓய்வு பெற்ற டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் தனது தண்ணீர் பாட்டிலை சென்டிமென்ட்டாக பயன்படுத்தி வந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications