இஸ்ரேல்-ஈரான் போர் எப்போது முடியும்? யார் வெற்றிப்பெறுவார்கள்? நிபுணர்கள் சொல்வது இதுதான்!
தெஹ்ரான்: இஸ்ரேல்-ஈரான் போரில் அமெரிக்கா தலையீடு செய்யாமல் இருந்தால், இப்போது எப்படி முடிவுக்கு வரும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது? இது குறித்து நிபுணர்கள் சில விளக்கங்களை கொடுத்திருக்கின்றனர்.
இஸ்ரேலின் ஏவுகணை இடைமறிப்பு திறன் எவ்வளவு தூரம் தாங்குகிறது? ஈரானின் நீண்ட தூர ஏவுகணைகள் எவ்வளவு இருக்கின்றன? இது இரண்டும்தான் போரின் போக்கை தீர்மானிக்கும்.

போர் தொடங்கி ஒரு வாரம் ஆகியிருக்கிறது. இந்த 7 நாட்களில், ஈரான் அதிக அளவில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது. அதேபோல, இந்த ஏவுகணைகளை இஸ்ரேல் இடைமறித்து தாக்கி அழித்துள்ளன. ஒரு கட்டத்தில் ஈரானிடம் ஏவுகணைகள் தீர்ந்து போகலாம். மறுபுறம் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அம்சம் செயலிழந்து போகலாம். இது இரண்டில் எது முதலில் நடக்கிறதோ, அவர்கள்தான் முதலில் தோல்வியை தழுவுவார்கள்.
இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புக்குத் தலைமை தாங்கிய, ராணுவ அதிகாரியான பிரிகேடியர் ஜெனரல் ரான் கோச்சாவ் இது குறித்து கூறுகையில், "ஈரானின் ஏவுகணைகளை இடைமறிக்க நாங்களும் ஏவுகணைகளைத்தான் பயன்படுத்துகிறோம். வீடியோ கேமில் வருவதை போல அன்லிமிட்டெட் ஏவுகணைகள் எங்களிடம் இல்லை. நாங்கள் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
எனவே, எந்த தாக்குதலை தடுக்க முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? என்பதில் கவனமாக இருக்கிறோம். உதாரணமாக, ஒரு ஏவுகணை ஹைஃபாவில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களை தாக்கப் போகிறது என்றால், நெகேவ் பாலைவனத்தை தாக்கும் ஏவுகணையை இடைமறிப்பதை விட, அந்த ஏவுகணையை இடைமறிப்பது மிகவும் முக்கியம். இஸ்ரேலின் இடைமறிப்பு ஏவுகணைகளைப் பாதுகாப்பது சவாலான விஷயம்" என்று கூறியுள்ளார்.
சரி எவ்வளவு இடைமறிப்பு ஏவுகணைகளை வைத்திருக்கிறீர்கள் என்று இஸ்ரேலிய அரசுக்கு பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த கேள்விக்கு பதிலளித்த அந்நாட்டு அரசு, "எங்களால் நிலைமையை கையாள முடியும். நிச்சயம் நாங்கள் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்போம்" என்று சிம்பிளாக முடித்துக்கொண்டது.
மறுபுறம் ஈரானிடம் தோராயமாக 2,000 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதில் ஏறத்தாழ 400 ஏவுகணைகள் வரை ஈரான் இதுவரை ஏவியுள்ளது. இதில் 40 மட்டுமே இஸ்ரேலுக்குள் விழுந்திருக்கிறது. மீதமிருப்பதை இடைமறிக்கப்பட்டிருக்கிறது. இது நல்ல விஷயம்தான். இருப்பினும் ரொம்ப நாட்களுக்கு இதே போன்று நிலைமை இருக்காது. திடீரென இஸ்ரேலின் ஏவுகணை இருப்பு குறைப்பு குறைந்துவிட்டால் சிக்கலாகிவிடும்.
"இஸ்ரேல் ஈரானில் உள்ள பெரும்பாலான தனது அணுசக்தி இலக்குகளை வெற்றிகரமாகத் தாக்கியுள்ளதால், இஸ்ரேலுக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களில் வெற்றியை அறிவித்து போரை முடித்துக்கொள்ள ஒரு வாய்ப்பு உள்ளது" என்றும் மொசாட்டின் முன்னாள் மூத்த அதிகாரி ஜோஹர் பால்டி கூறியுள்ளார். எது எப்படியோ, அமெரிக்கா இதில் தலையிடாமல் இருந்தால், நிச்சயம் போர் இழுபறியாக இருக்கும்.
-
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி? -
குவைத், பஹ்ரைன் மீது சரமாரி தாக்குதள்.. ஈரானின் வெறியாட்டம்.. CENTCOM கொடுத்த பகீர் அறிக்கை! -
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்! -
ஈரானுக்கு பயணம் வேண்டாம்.. அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்.. மத்திய அரசு அவசர அறிவுறுத்தல் -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
அவசரமாக தரையிறங்கிய ஜெட் விமானம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரம்! ஷாக் வீடியோ! -
ஹார்முஸ் நோக்கி வந்த ஈரானிய டிரோன்கள்...சுட்டு வீழ்த்திய அமெரிக்கா..மீண்டும் உச்சத்தில் டென்ஷன் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து












Click it and Unblock the Notifications